திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Wednesday, June 6, 2018

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை. SSLC சிறப்பு துணைத்தேர்வு ஜுன் / ஜீலை – 2018 (தட்கல்) தனித்தேர்வர்கள்



அரசுப்பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி: நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு

அரசுப்பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

அரசுப்பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி: நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு

வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் மாதாகோவில் தெருவை சேர்ந்த ஜேம்ஸ் (வயது 55). இவர் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய மனைவி அமலா, ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். அரசுப்பள்ளியில் ஆசிரியராக வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையை சேர்ந்த சத்துணவு அமைப்பாளர் ஒருவர் எனக்கு அறிமுகமானார். அவர், நான் உங்கள் மனைவிக்கு வருகிற கல்வியாண்டில் அரசுப்பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருகிறேன். அதற்கு ரூ.5 லட்சம் செலவாகும் என்று கூறினார்.

அதனை உண்மை என நம்பிய நான் சில மாதங்களுக்கு முன்பு அவரை வேலூருக்கு அழைத்து ரூ.5 லட்சம் கொடுத்தேன். இந்த நிலையில் கல்வியாண்டு தொடங்கிய பின்னரும் அவர் அரசுப்பள்ளியில் எனது மனைவிக்கு வேலை வாங்கி தரவில்லை.

இதுகுறித்து அவரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு சரியான பதில் தெரிவிக்கவில்லை. எனவே நான் கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பி தரும்படி கூறினேன். ஆனால் அவர் கொடுக்காமல் காலதாமதம் செய்து வருகிறார். ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நான் கொடுத்த ரூ.5 லட்சத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

Flash News : TAMIL NADU Higher Secondary School HM Seniority List As on 01.01.2018

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை. மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்பு துணைத்தேர்வு ஜுன் / ஜீலை – 2018

சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) தனித்தேர்வர்கள் விண்ணப்பித்தல்




வேலூர்: போக்குவரத்து நெரிசலை தீர்க்க, வேலூரில் குட்டி விமானம் மூலம், அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

              வேலூர் மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், போக்குவரத்து நெரிசலை தீர்க்க, திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. நெரிசல் அதிகமுள்ள அண்ணா சாலை, கோட்டை சுற்றுச்சாலை, பழைய மீன் மார்க்கெட், கிரீன் சர்க்கிள், மெயின் பஜார், காட்பாடி சில்க் மில், சித்தூர் பஸ் ஸ்டாண்ட் என, 45 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில், ஆளில்லா குட்டி விமானம் மூலம், போக்குவரத்து நெரிசலை வீடியோ படம் எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

       இதுகுறித்து, வேலூர் மாநகராட்சி பொறியாளர் சுரேஷ்குமார் கூறியதாவது: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், வேலூர் உள்பட, ஒன்பது நகரங்களில், 500 கி.மீ., தூரத்திற்கு சாலை போக்குவரத்தை சீராக்க, 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக, போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு தனித்தனி பாதை அமைக்கப்படும். இதன் மூலம், நெரிசல் குறைந்து விபத்து தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர் பணியிடங்களை பாடவாரியாக பகிர்ந்தளித்தல்!!!


GO. No. MS 403 TRANSFER FOR TEACHERS - 2018 GUIDELINESS AND ORDER ISSUED 29.05.2018 WITH TRANSFER APPLICATION FORM

தமிழகத்தில் ஜனவரி முதல் எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வருகிறது? இதோ பட்டியல்

        தமிழகத்தில் வரும் ஜனவரி முதல் பிளாஸ்டிக்பொருட்களுக்கு தடை விதித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.இன்று ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு,தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

    அதில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் கடும் மாசுபாடு ஏற்படுவதால், தமிழகத்தில் 2019ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதி முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஷ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர் மற்றும் தண்ணீர்க் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டின் உறிஞ்சு குழல் மற்றும் பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986ன் கீழ் தடை செய்ய அரசு முடிவு செய்து, தமிழ்நாடு முழுவதும் இந்த பொருட்களை தடை செய்கிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

      மேலும், பொது மக்களும், வியாபாரிகளும் மேற்படி பிளாஸ்டிக் பொருட்களுக்கு மற்றாக, துணிப் பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களைப் பயன்படுத்தபழகிக் கொள்ள ஏதுவாக, மேற்படி தடைகளை உடனடியாக அமல்படுத்தாமல் 2019 ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாட்டை நம் எதிர்கால சந்ததியினருக்கு பரிசளிப்போம்..

ஜூன் 7 முதல் 11ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

11ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுக்கு ஜூன் 7 முதல் 11ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஜூலை 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை சிறப்பு துணைத்தேர்வு நடைபெறுகிறது என்று அரசுதேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.135 செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Tuesday, June 5, 2018

நீட்’ தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தக்கோரி வழக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

நீட்’ தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தக்கோரி வழக்கு குறித்து மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
‘நீட்’ தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தக்கோரி வழக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வை எழுதுவதற்கு பொதுப்பிரிவு மாணவர்களுக்கான வயது வரம்பு 25 ஆகவும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான வயது வரம்பு 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த வயது வரம்பை உயர்த்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, இந்த மனுக்கள் தொடர்பாக விரிவான பதில் அளிக்குமாறு கோரி மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 2-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.