அசுரனுடன் தாய் காளி போரிடும் சமயம், காளியின் வியர்வை துளிகளில் இருந்து பிறந்தவர்கள் தான் 'யோகினிகள்'. இவர்கள் ஆயிரமாயிரம் இருப்பினும், முதன்மையாக கருதப்படுவோர் 64 ஆவர்.
காளியின் குழந்தைகளாக கருதப்படும் இவர்களை, நம் ஆத்மார்த்த அன்புடன் பூஜித்து வர நம் அனைத்து துன்பங்களையும் நீக்கி சுக வாழ்வு வாழ வைப்பர். யக்ஷினி, கின்னரர்கள், யக்ஷர்கள், கந்தர்வ மற்றும் அப்சரஸ்களை போல் அல்லாமல் நமக்கு நற்பலன்களை மட்டுமே அள்ளித்தருவது இவர்களின் சிறப்பு. எளிதாக அனைவருக்கும் புரியவேண்டிய நோக்கத்துடன் இவ்வாறு கொடுத்துள்ளேன். உண்மையில், பல அற்புத ஆத்ம ஞான யோக விஷயங்கள் உள்ளன-யோகினி உபாசனையில். திருமூலர் திருமந்திரத்தில் இவர்களை பற்றி கூறியுள்ளார்.
சுர சுந்தரி யோகினி :
மூப்பை தடுக்கும், நமக்கு புற அழகை கொடுக்கும் இவள் சிறந்த மனத்தெளிவையும் கொடுக்க வல்லாள்.
மனோஹர யோகினி :
காளியின் ரூபமாகவே கருதப்படும் இவளை வழிபட நல் உறவுகள் பலப்படும்.
கனகாவதி யோகினி :
வியாபாரம் மற்றும் தொழில் செய்வோர் அவசியம் உபாஸிக்க வேண்டிய தேவி இவள். தொழிலின் மூலம் நல்ல லாபங்களை கொடுக்கும் யோகினி.
காமேஸ்வரி யோகினி :
விரும்பிய துணை, நிலையான திருமண பந்தம், நல்ல தாம்பத்யம் பெற இந்த யோகினியின் அருள் அவசியம்.
ரதி சுந்தரி யோகினி :
செல்வம், வீடு பேறு போன்றவற்றை அருளும் யோகினி இவர்.
பத்மினி யோகினி :
அனைத்து காரியங்களிலும் வெற்றியை தருபவர்.
நதினி யோகினி :
அதீத சக்தி கொண்டவள் - அதே சக்திகளை தம்மை உபாசிப்போருக்கும் அருள்பவள்.
மதுமதி யோகினி :
அனைத்து பிரச்சனைகளிலும் இருந்து விடுதலையளிப்பவள்.
No comments:
Post a Comment