திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Sunday, May 31, 2020

மாநில திட்ட இயக்குநராக கூடுதல் பொறுப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பள்ளிக்கல்வித்துறையில் மாநில திட்ட இயக்குநர்  சுடலைக் கண்ணன்  IAS ஓய்வு பெற்றதைத்  தொடர்ந்து  திரு.N. வெங்கடேஷ், IAS, மாநில திட்ட இயக்குநராக  கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ளார்.

Tuesday, May 12, 2020

ஜூன் 1ந்தேதி முதல் 12ந்தேதி வரை 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும்

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.  அதனை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.  

இதனை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.  இதனால் 10ம் வகுப்பு பொது தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.  தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அரசு தெரிவித்தது.

இந்த நிலையில், தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்பொழுது, ஜூன் 1ந்தேதி முதல் 12ந்தேதி வரை 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும்.  சுகாதார துறையினரின் அறிவுறுத்தலின்படி, சமூக இடைவெளியுடன் தேர்வு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.  

பள்ளி திறப்பு குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.  தேர்வுகளை நடத்துவதில் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது.

10ம் வகுப்பு பொது தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.  இதன்படி, 

ஜூன் 1ல் மொழிப்பாடம்

ஜூன் 3ல் ஆங்கிலம்

ஜூன் 5ல் கணிதம்

ஜூன் 6ல் விருப்ப மொழிப்பாடம்

ஜூன் 8ல் அறிவியல்

ஜூன் 10ல் சமூக அறிவியல்

தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான ஒரு பாடத்திற்கான தேர்வு ஜூன் 2ந்தேதி நடைபெறும்.  இதேபோன்று வரும் 27ந்தேதி பிளஸ் 2 பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் என தெரிவித்து உள்ளார்.

Monday, May 4, 2020

சென்னையில் உள்ள 900 பள்ளிகளில் சிறப்பு மையங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு!


மாநகராட்சி அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் அமைக்க திட்டம்

பாதிப்பு அதிகமுள்ள திருவிக நகர் ராயபுரம் தேனாம்பேட்டை கோடம்பாக்கம் தண்டையார்பேட்டை மண்டலங்களில் முகாம் அமைக்கும் பணி தொடக்கம்.

முதல்கட்டமாக 134 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள 1500 அறைகளில் 6500 படுக்கைகள் அமைக்க திட்டம்

ஒரு அறைக்கு 4 படுக்கைகள் வீதம் 21 பள்ளிகளில் உள்ள 501 அறைகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் அமைக்கும் பணியை சில நாட்களில் முடிக்க  முடிவு.

ஆசிரியர்கள் பாதுகாப்பு நலன் கருதி கூடுதல் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்படும் - தேர்வுத்துறை அறிவிப்பு.


Saturday, May 2, 2020

தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியத்தை உடன் வழங்க உத்தரவு

அனைத்து மெட்ரிக் / சுயநிதி / மழலையர் மற்றும் துவக்கப்பள்ளிகள் / சி.பி.எஸ்.இ மற்றும் பிறவாரிய பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள்/பணியாளர்களுக்கான ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஊதியத்தினை எவ்வித காலதாமதமும் இன்றி உடன் வழங்கிட்டு  அதன் விவரத்தினை பெற்று தொகுத்து அனுப்பிட தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்கநர் / தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் / தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே அனைத்து பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கான ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஊதியத்தினை எவ்வித காலதாமதமும் இன்றி உடன் வழங்கிவிட்டு அதன் விவரத்தினை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலருக்கு அனுப்பிடவும் அனைத்து வகை தனியார் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Friday, May 1, 2020

நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு- உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா, உயிரிழப்பு மற்றும் நோய்த்தொற்றை ஏற்படுத்துவது மட்டுமின்றி அனைத்து நாடுகளையும் பொருளாதார பாதிப்புக்கும் உள்ளாக்கி வருகிறது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளதால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை எப்படியாவது சரிகட்டிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பல்வேறு நாடுகளும் தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை.

இந்த நிலையில், நாடு முழுவதும் மேலும் இருவாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  அதாவது மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.192 குறைவு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மே 3 ஆம் தேதி ஊரடங்கு அமலில் உள்ளது. 

அதன்படி, தமிழகத்திலும் கொரோனா தீவிரமடைந்து வருவதால் வரும் 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் 3 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு சார்ந்த துறைகளும் முடங்கி போயுள்ளதால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் முடங்கி போயுள்ளது.

இந்தநிலையில், ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 காஸ் சிலிண்டர்கள் (14.2 கிலோ எடை கொண்டவை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.

இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தொடர்ந்து உயர்ந்து வந்த சிலிண்டர் விலை, கடந்த மார்ச் முதல் தொடர்ந்து 3வது மாதமாக குறைந்துள்ளது. தற்போது தமிழகத்தில் மானியமில்லா வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.192 குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஏப்ரல் மாதத்தில் ரூ.761.50 ஆக இருந்த சிலிண்டர் விலை தற்போது ரூ.569.50 ஆக குறைந்துள்ளது. இதனால் குடும்பத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் மானியமில்லாத வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை இதுவரை ரூ.1404 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.259.50 குறைந்து, ரூ.1144.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மானிய விலை சிலிண்டராக இருந்தாலும், மானியத்தை கழிக்காமல் முழு தொகையையும் அளித்துத்தான் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் வாங்க வேண்டும். பின்னர், மானியத்தொகை, வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லுாரி சேர்க்கைக்கு நுழைவு தேர்வு இல்லை - யுஜிசி அறிவிப்பு.


கல்லுாரிகளில், இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, நுழைவு தேர்வு நடத்த வேண்டும் என்ற பரிந்துரையை, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., நிராகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் தாமதமாகியுள்ள பல்கலை, கல்லுாரி தேர்வுகள், புதிய மாணவர் சேர்க்கை குறித்து ஆராய, ஹரியானா மத்திய பல்கலையின் துணைவேந்தர், குகாத் தலைமையிலான குழுவை, மத்திய அரசு அமைத்தது.இந்த குழுவினர், பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து, யு.ஜி.சி.,யிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அறிக்கையில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை ஆய்வு செய்து, புதிய கல்வி ஆண்டுக்கான உத்தேச கால அட்டவணையை, யு.ஜி.சி., நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. அதில், பிளஸ் 2 முடித்தோருக்கு நுழைவு தேர்வு நடத்தி, இளநிலை பட்டப்படிப்பில் சேர்க்க வேண்டும் என, நிபுணர் குழு பரிந்துரைத்தது.இந்த பரிந்துரையை நிராகரித்த, யு.ஜி.சி., 'முந்தைய ஆண்டுகளை போல், இளநிலை பட்ட படிப்பில் மாணவர்களை சேர்க்கலாம்' என, அறிவித்துள்ளது.

ஏற்கனவே, மூன்று ஆண்டுகளுக்கு முன், இன்ஜினியரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, நுழைவு தேர்வு நடத்த வேண்டும் என்ற, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்த பரிந்துரையை, இதுவரை செயல்படுத்த முடியவில்லை.

நான்கு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை தயார் நிலையில் வைக்கவும், தலைமை ஆசிரியர்கள் தினசரி வருகை தரவும் ஆட்சியர் உத்தரவு.

சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளூர் , செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளையும் தயார் நிலையில் இருக்க நான்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சென்னை ஆட்சியர் உத்தரவு.

பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் , துணை தலைமை ஆசிரியர்கள் தினசரி வருகை தரவும் உத்தரவு.


கொரோனா தொற்று நோய் தொடர்பாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை. கட்டிட ஸ்திர தன்மை Parking மற்றும் சுகாதார வசதிகள் இருப்பதை ஊர்ஜிதம் செய்து, பேரிடர் மேலாண்மை முகாம்கள் பள்ளிகளில் இயக்க தயார் நிலையில் இருக்க சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் துணை தலைமை ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.


மேலும் பள்ளிகளில் முகாம்கள் அமைப்பது தொடர்பாக உயர் அலுவலர்கள் பார்வையிட வருவதால் இன்று முதல் பள்ளி தலைமை ஆசிரியர்/துணை தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளில் தவறாமல் இருப்பதுடன், பார்வையிட வரும் உயர் அலுவலர்களுக்கு தக்க விவரங்களை தெரிவிக்கவும் அறிவுரைகள் வழங்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.