திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Wednesday, March 13, 2019

தேர்வுத்துறை இயக்குனருக்கு மூன்று மாதம் பணி நீட்டிப்பு

பொதுத்தேர்வு பணிகளை முடிப்பதற்காக, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தரா தேவிக்கு, மூன்று மாதம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி துறை கட்டுப்பாட்டில், அரசு தேர்வு துறையின் இயக்குனராக, வசுந்தரா தேவி, நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவரது பணிக்காலம், மார்ச், 31ல் முடிவதாக இருந்தது. அவரது ஓய்வுக்கு பின், புதிய இயக்குனரை நியமிக்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டிருந்தது. ஆனால், வசுந்தரா தேவிக்கு, மூன்று மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது, பொது தேர்வுகள் நடக்கின்றன. லோக்சபா தேர்தல், ஏப்., 18ல் நடக்க உள்ளது. அதற்கு முன், பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்த வேண்டும். தேர்தலுக்கு மறுநாள், பிளஸ் 2 ரிசல்ட் வெளியிட வேண்டியுள்ளது. இந்த நெருக்கடியில், புதிய இயக்குனரை நியமித்தால், பணிகளில் நெருக்கடி ஏற்படும் என, அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.இதையடுத்தே, வசுந்தரா தேவிக்கு, மூன்று மாதம், பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மார்ச் 29ல் விடைத்தாள் திருத்தம்

பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம், வரும், 29ல் துவங்க உள்ளது.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில்பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் நடந்து வருகின்றன. 

லோக்சபா தேர்தல்ஏப்.18ல் நடக்க உள்ளதால்விடைத்தாள் திருத்த பணிகளை விரைந்து முடிக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.இதையொட்டி தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதன்படி பிளஸ் 1,பிளஸ் 2 வகுப்புகளுக்கானமொழி பாடங்களின் விடைத்தாள் திருத்தம்வரும்29ல் துவங்க உள்ளது. 

முதல் நாளில் தலைமை மதிப்பீட்டாளரும்வரும்30 முதல்ஏப்.6 வரைமுதுநிலை ஆசிரியர்களும் திருத்தம் செய்ய உள்ளனர். ஏப்.11க்குள் விடைத்தாள் திருத்தத்தை முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Sunday, March 10, 2019

Flash News : TRB - சிறப்பாசிரியர் காலிப்பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் நிரப்ப உள்ளதால் காலிப்பணியிட விவரம் உடன் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

உடற்கல்வி / தையல் / இசை / ஓவியம் ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான தெரிவுபட்டியல் ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம் பெறப்படவுள்ளது.விரைவில் கலந்தாய்வு நடைபெறவுள்ளதால் 06.03.2019 நிலவரப்படி 08.03.2019 மாலை 5 மணிக்குள் அனுப்ப தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. 

Friday, March 1, 2019

TN SCHOOL EDUCATION DEPARTMENT Computer Instructors Grade-I (Post Graduate cadre)


பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம் பழைய பாடத்திட்டத்தில் கடைசி தேர்வு



மார்ச் 1-பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது.தமிழகம், புதுச்சேரியில், 7,082 பள்ளிகளில் படிக்கும், 8.61 லட்சம் மாணவர்கள், இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.இவர்களில், 4.60 லட்சம் பேர் மாணவியர். தனித் தேர்வர்களாக, இரண்டுதிருநங்கையர், 8,855 பெண்கள் உட்பட, 25 ஆயிரத்து, 741 பேர், தேர்வு எழுதுகின்றனர்.

இந்தத் தேர்வுக்கு, கடந்த ஆண்டை விட, 150 கூடுதலாக, மொத்தம், 2,944 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.வேலுார், கடலுார், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் சென்னை புழல் சிறைகளைச் சேர்ந்த, 45 கைதிகளும், பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர்.நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 1க்கு புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. வரும் கல்வி ஆண்டில், பிளஸ்2க்கு, புதிய பாடத்திட்டம்அமலாகிறது.எனவே, இன்று துவங்க உள்ள பொதுத் தேர்வு, பள்ளி மாணவர்களுக்கு,13 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த, பழைய பாடத்திட்டத்தின்படி நடக்கும் கடைசிதேர்வாகும்.இதில், தேர்ச்சி பெறாதவர்களுக்கு மட்டும், வரும் அக்டோபர் வரை, பழைய பாடத்திட்டத்தில், மறுதேர்வு நடத்தப்படும்.அதேநேரம், கடந்த கல்வி ஆண்டில், 1,200 மதிப்பெண்களுக்கு பதிலாக, 600 மதிப்பெண்களுக்கான, புதிய தேர்வு முறை அறிமுகமானது. அதன்படி, பிளஸ் 2 வகுப்புக்கு நடக்கும் முதல்தேர்வும் இதுவே.தேர்வு முறைகேடுகளை தடுக்க, இயக்குனர்கள், இணை, துணை இயக்குனர்கள் என, 23 அதிகாரிகள் அடங்கிய, உயர்மட்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. 44 ஆயிரம் ஆசிரியர்கள், தேர்வறை கண்காணிப்பாளர்களாகநியமிக்கப்பட்டுள்ளனர்.

கலெக்டர், கோட்டாட்சியர்,தாசில்தார், துணை கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரிகளும், தேர்வு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.சென்னையில் 50 ஆயிரம் பேர்சென்னையில் மட்டும், 158 தேர்வு மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம், 408 பள்ளிகளைச் சேர்ந்த, 26 ஆயிரத்து, 285 மாணவியர்;23 ஆயிரத்து, 134 மாணவர்கள் உட்பட, 49 ஆயிரத்து,419 பேர் தேர்வு எழுத உள்ளனர்.தேர்வு பணிக்கு, 2,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உட்பட, 3,000 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.200க்கும் மேற்பட்ட, பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.சென்னை மாவட்டத்திற்கு, இயக்குனர் பழனிசாமி மற்றும் இணைஇயக்குனர் பாஸ்கர சேதுபதி அடங்கிய, உயர்மட்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.தேர்வை முறைகேடின்றி நடத்தும் வகையில், வினாத் தாள் மற்றும் விடைத் தாள் காப்பு மையங்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்மாவட்டத்தில்,146 தேர்வு மையங்களில், 47 ஆயிரத்து, 073 மாணவ - மாணவியர், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், 128 தேர்வு மையங்களில், 20 ஆயிரத்து, 580 மாணவர்கள், 22 ஆயிரத்து, 107 மாணவியர், தனித்தேர்வர்கள் 2,348 என, மொத்தம் 45 ஆயிரத்து, 035 பேர் தேர்வுஎழுதுகின்றனர்.

கடுமையான கட்டுப்பாடு!தேர்வு மையங்களில், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மைய வளாகத்திற்குள், மொபைல் போன் உட்பட, எந்த மின்னணு சாதனங்களையும் கொண்டு செல்லக்கூடாது.மாணவ - மாணவியர், புத்தகங்கள், துண்டு காகிதங்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வரக்கூடாது. அருகில் உள்ள மாணவர்களை பார்த்து, தேர்வு எழுதக்கூடாது. விடை தாளை மாற்றி, விடைகளை எழுதக்கூடாது.

தேர்வறையில், ஒருவருடன் ஒருவர் பேசக்கூடாது. விடைகளை எழுதி, அவற்றை முழுவதுமாக அடிப்பது கூடாது. சிறப்பு குறியீடு, வண்ண பென்சில், 'ஸ்கெட்ச்' போன்றவை பயன்படுத்தக்கூடாது என, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு, இன்று முதல், 'ஆன்லைன்' பதிவு துவங்குகிறது.



கே.வி., எனப்படும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு, இன்று முதல், 'ஆன்லைன்' பதிவு துவங்குகிறது.நாடு முழுவதும், 1,199 கே.வி., பள்ளிகள், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 14 பள்ளிகள் உட்பட, தமிழகத்தில் மட்டும், 48 கே.வி., பள்ளிகள் உள்ளன.இந்த பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை, 'கே.வி.சங்கதன்' என்ற, கேந்திரிய வித்யாலயா கமிஷனரகம் வழியே,ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இந்த பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., போன்ற, கே.ஜி., வகுப்புகள் கிடையாது. ஒன்றாம் வகுப்பில் தான், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.நடப்பு கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, சென்னை மண்டல துணை கமிஷனர்,மணி, நேற்று வெளியிட்டார்.

அதில் கூறியிருப்பதாவது:ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்று காலை, 8:00 மணிக்கு துவங்க உள்ளது. மார்ச், 19 மாலை, 4:00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கே.வி., தலைமையகத்தின்,kvsonlineadmission.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், அதிகாரப்பூர்வ, 'மொபைல் ஆப்'பையும் பயன்படுத்தலாம்.

அதேபோல், பிளஸ் 1 தவிர, இரண்டாம் வகுப்பு முதல்,மற்ற வகுப்புகளுக்கு, ஏப்., 2ல், ஆன்லைன் பதிவு துவங்கும். ஏப்., 9 மாலை,4:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.பிளஸ், 1 சேர்க்கைக்கு, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதும், விண்ணப்பப் பதிவு துவங்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

யுஜிசி-நெட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் நடத்தப்படும் யுஜிசி-நெட் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 1) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும், கல்லூரி - பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்புகளைப் பெறுவதற்கும் தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தகுதி பெற வேண்டும்.

இந்தத் தேர்வை இப்போது என்.டி.ஏ. நடத்தி வருகிறது. 2019 ஆம் ஆண்டுக்கு ஜூன் மாதத் தேர்வு அறிவிப்பை என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது.தேர்வு எப்போது?: இந்தத் தேர்வானது ஜூன் 20 முதல் 28 ஆம் தேதி வரை கணினி அடிப்படையிலான தேர்வாக நடத்தப்பட உள்ளது.

இதற்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 30 கடைசி நாளாகும். தேர்வறைநுழைவுச் சீட்டை மே 15 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்தத் தேர்வுக்கான முடிவுகள் ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு www.ntanet.nic.in, www.ugcnetonline.in ஆகிய இணையதளங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

DTEd - தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு



தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு (DEE)  ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்றுமுதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வெழுதிய மாணவ,  மாணவிகள் தங்களது தேர்வு முடிவுகளை  அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில்  வெள்ளிக்கிழமை பிற்பகல்  முதல் தெரிந்து கொள்ளலாம்.

தனித் தேர்வர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை பிற்பகல்  முதல் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க...

மாணவ,  மாணவிகள்  விடைத்தாள்களின் ஒளிநகல் பெற,  விடைத்தாள்களை மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க விரும்புவோர் www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம்  செய்து கொண்டு,  அதனைப் பூர்த்தி செய்து,  அந்த விண்ணப்பத்துடன்  அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத் தொகையை மார்ச் 5 செவ்வாய்க்கிழமை முதல் 7-ஆம் தேதி வியாழக்கிழமை வரையிலான நாள்களில் சம்பந்தப்பட்ட  மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில்   நேரடியாகச் செலுத்தி ஆன்-லைன்  மூலம்  பதிவேற்றம் செய்யுமாறு  அறிவுறுத்தப்படுகின்றனர்.விடைத்தாளின் ஒளி நகல் பெறப்பட்ட பின்னர் விருப்பமுள்ள  தேர்வர்கள்  மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது