திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Friday, January 10, 2020

தமிழ்நாடு மேல் நிலைக் கல்விப் பணி – 2020 - 21 ஆம் கல்வியாண்டில் முதுகலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் (அனைத்து பாடங்களுக்கும்) பற்றிய உத்தேச மதிப்பீடு கோருதல் – தொடர்பாக !


2020 - 21ஆம் கல்வியாண்டில் ஏற்படும் முதுகலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பிட காலிப்பணியிடங்கள் பற்றிய உத்தேச மதிப்பீட்டினை தயார் செய்ய வேண்டியுள்ளதால்.

       அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம் - 1 ல் 31.05.2020 அன்று ஓய்வு பெறும் முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை, முதுகலை சிறுபான்மை மொழி மற்றும் சிறுபான்மை மொழிவழி சார்பான விவரமும், படிவம் - 11ல் அப்பணியிடங்களின் சுருக்கம் ஆகிய விவரங்களை (jdhssed@nic .in) என்ற மின்ன ஞ்சல் முகவரிக்கும், முதன்மைக் கல்வி அலுவலரால் ஒப்பமிடப்பட்ட படிவங்களை இணை இயக்குநர் (மேநிக) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கும் 10.01.2020 க்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கெள்ளப்படுகிறார்கள் .

மேலும் , ஓய்வுபெறும் காலிப் பணியிட விவரங்கள் முழு வடிவில் அரசுக்கு அனுப்ப வேண்டியுள்ளதால் காலதாமதம் ஏதுமின்றி மேலே தெரிவிக்கப்பட்டுள்ளவாறு சரியான விவரங்களை தொகுத்து அனுப்பிவைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .

Thursday, January 9, 2020

மார்ச் | ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பெயர் பட்டியலை பதிவேற்றம் செய்யாமல் உள்ள பள்ளிகளில் பட்டியல் சேகரிப்பு.


மார்ச் | ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் பெயர் பட்டியலை தயாரிப்பதற்கு 16.12.2019 முதல் 30.12.2019 வரை கால அவகாசமும், அதனைத் தொடர்ந்து 04.01.2020 வரை கால நீட்டிப்பும் வழங்கப்பட்டது.

மார்ச் | ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பெயர் பட்டியலை பதிவேற்றம் செய்யாமல் இது வரை 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இருப்பதாக தெரியவருவதால், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரை தொடர்பு கொண்டு 10.01.2020 முதல் 13.01.2020 - க்குள் பெயர் பட்டியலை தயாரிக்கும் பணியினை விரைந்து முடிக்குமாறு, இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது .

இணைப்பில் உள்ள பள்ளிகள் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணியினை முடித்திருப்பின் அப்பள்ளிகள் கீழ்க்காணும் பட்டியலில் பூர்த்தி செய்து உடன் இவ்வலுவலக மின்னஞ்சலில் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .


பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு முடிவுகள் ஜன.10ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

தொழில் நுட்பக் கல்வி துறை தற்பொழுது அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் நடத்திய அக்டோபர் 2019 பட்டயத் தேர்விற்கான, தேர்வு முடிவுகள் www.tndte .gov.in இணையதளம் மூலம் 10-01-2020 அன்று வெளியிடப்படுகிறது.


Direct Recruitment for the post of Block Educational Officer in Elementary Education department for the year 2018-2019

Date of Computer Based Examination

              For the Direct Recruitment for the post of Block Educational Officer for the year 2018-2019, Notification was issued on 27.11.2019. Now, Teachers Recruitment Board hereby notify the date of Computer Based Examination as below :-

             Date of Computer based Examination: 15.02.2020 (Saturday) & 16.02.2020 (Sunday)


இன்னும் 11 சனிக்கிழமைகள் வேலை நாட்களாக இருக்க வாய்ப்பு!!


2019 - 2020 (தொடக்கக்கல்வி) கல்வியாண்டில் ஜனவரி மாதம் 10 ஆம் தேதியோடு 140 வேலை நாட்கள் ஆகிறது.

ஆண்டிற்கு 220 நாட்கள் என்பது அரசின் உத்தரவாகும்.

பொங்கல் விடுமுறைக்கு பின் சனி,ஞாயிறு தவிர்த்து வேலைநாட்கள்
ஜனவரி - 10
பிப்ரவரி - 20
மார்ச் - 22
ஏப்ரல் - 22

140 + 74 = 214 நாட்கள்.

ஜனவரி 20 முதல் ஏப்ரல் வரை அரசு விடுமுறை நாட்கள் - 5.

214 - 5 = 209 நாட்கள்.

எனவே 11 சனிக்கிழமைகள் வேலை நாட்களாக இருக்க வேண்டும்.

இக்கணக்கீடு விழுப்புரம் மாவட்ட தொடக்கப்பள்ளியை உதாரணமாகக் கொண்டு ஏப்ரல் 30 வரை கணக்கிட்டு தயாரிக்கப்பட்டதாகும்.

அரசின் முடிவைப் பொறுத்து பள்ளி வேலை நாட்கள் இறுதி செய்யப்படும்.

Direct Recruitment of Assessor - NOTIFICATION NO:01/2020, DATED:08.01.2020

50 மாணவர்கள் இருந்தால் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் - பேரவையில் அமைச்சர் விளக்கம்!

2016 முதல் 2019 வரை 295 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

குறைந்தபட்சம் 50 மாணவர்கள், 3 ஏக்கர் நிலம், ரூ.1 லட்சம் நிதி இருந்தால் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது தொடர்பாக பேரவையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

Sunday, January 5, 2020

தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜன.27 முதல் விண்ணப்பிக்கலாம்.

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வரும் ஜன.27-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 1.1.2020 அன்று 12 ஆண்டுகள் 6 மாதம் பூர்த்தி அடைந்த தனித் தேர் வர்கள் ஜன.27-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் ஜன.31-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைன் மூலம்பதிவு செய்து கொள் ளலாம்.விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125,ஆன்-லைன் பதிவுக் கட்ட ணம் ரூ.50 என மொத்தம் ரூ.175-ஐ பணமாக சேவை மையங்க ளில் நேரடியாகச் செலுத்தலாம். 

முதன்முறையாக தேர்வெழுத விண்ணப்பிப் பவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் தங் களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பதிவுத் தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும்ஒன்றை மட்டுமே இணைத்து சமர்ப் பிக்க வேண்டும்.ஏற்கெனவே எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தோல்வியடைந்த பாடத்தைத் தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் ஏற்கெனவே தேர்வெழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகலைக் கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 

தனித்தேர்வர்கள் ரூ.42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, பின்கோடுடன் கூடிய சுய முகவரியிட்ட உறை ஒன்று விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.ஆன்-லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங் கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.



இந்தத் தேர்வுக்கான விரிவான தகவல்களை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம் என அதில் கூறியுள்ளார்.

Saturday, January 4, 2020

16,200 ஆசிரியர் பணியிடங்களை காலி செய்த கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம்!!

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் மூலமாக தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் விவரம்
2013-14.          49,864
2014-15           86,729
2015-16.          94,811
2016-17.          97,506
2017-18.          90,607
2018-19.          66,269

                   ------------------
                        4,85,786
                  --------------------


இவ்வளவு மாணவர்களை தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டு அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது என்று மேடைக்கு மேடை வாய்க்கு வந்தபடி பேசுவது நியாயமா...?

மாணாக்கர்கள்: 4,85,786
ஒரு மாணவருக்கு: ரூ.25,000/-
ஆண்டுக்கு
4,85,786×25,000=
 ரூ. 12,14,46,50,000/- இவ்வளவு பணமும் தனியார் பள்ளிகளுக்கு வழங்குகிறது தமிழக அரசு.

அரசு பள்ளிகளுக்கு இப்பணத்தைப் பயன்படுத்த அரசு மறுக்கிறது.
இச்சட்டம் ஆண்டுதோறும் சுமார் 3,000 ஆசிரியர்களின் வேலைவாய்ப்பை கபளீகரம் செய்கிறது.

வேலைக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் இச்சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பதே ஆசிரியர்களின் கோரிக்கையாகும்.

ஜனவரி 8ம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க கூடாது

ஜனவரி 8ஆம் தேதி தேசிய அளவிலான வேலை நிறுத்தம் நடைபெறவுள்ள நிலையில், ஜன.8 ஆம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு தவிர வேறு எந்த விடுப்பும் எடுக்கக்கூடாது.  பணிக்கு வராத ஊழியர்களுக்கு NO WORK, NO PAY என ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது


.