திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Saturday, February 22, 2020

பென்சன்தாரர்கள் ஆன்லைனில் லைப் சான்றிதழ் அளிக்கும் வசதி!

இபிஎப்ஓ (EPFO - Employees' Provident Fund Organisation) கீழ் பென்சன்தாரர்கள், ஒரு ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் ஆன்லைனில் லைப் சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

பென்சன்தாரர்கள் லைப் சான்றிதழ் அல்லது ஜீவன் பிரமாண பத்ரா முறையில் கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்தத்தால் 64 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இது தொடர்பாக இபிஎப்ஓ பதிவிட்டுள்ள டுவீட்டில், ஒரு ஆண்டில் தங்களுக்கு வசதியான எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பென்சன்தாரர்கள் லைப் சான்றிதழை சமர்பிக்கலாம். இந்த சான்றிதழ், சமர்ப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து அடுத்த ஓராண்டு வரை செல்லும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதற்கு முன்பு வரை, பென்சன்தாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவ. 1 முதல் நவ. 30 ம் தேதிக்குள் லைப் சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. அவ்வாறு லைப் சான்றிதழ் சமர்பிக்க தவறியவர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஓய்வூதிய தொகை நிறுத்தப்படும்.

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய முறையால் பென்சன்தாரர்கள் நவம்பர் மாதத்திற்காக காத்திருக்க வேண்டியதில்லை. தங்களுக்கு வசதியான நேரத்தில் சான்றிதழை சமர்பிக்கலாம். ஒருமுறை சமர்ப்பித்தால் அடுத்த 12 மாதங்களுக்கு அந்த சான்றிதழ் செல்லுபடியாகும்.

பெறுவதற்கு, இனி டெட் தேர்வின் தேர்ச்சி கட்டாயம்தமிழக பள்ளிக் கல்வித்துறை அலுவலக ஊழியர்களும் பதவி உயர்வின் மூலம் ஆசிரியர் பணி பெறுவதற்கு, இனி டெட் தேர்வின் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளிகல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு பதவி உயர்வின் மூலமாக ஆசிரியர் பணி வழங்குவதற்கான தமிழக அரசு செய்த விதிமுறைகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பிளஸ் 2 முடித்து தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு படித்து முடித்த அலுவலக ஊழியர்களுக்கு பதவி உயர்வு மூலம், ஆரம்பப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு, தொடக்கக்கல்வி பட்டயப்படிப்புடன் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


அலுவலக ஊழியர்கள் பதவி உயர்வின் மூலம் ஆசிரியர் பணி பெறுவதற்கு, இனி டெட் தேர்வின் தேர்ச்சி கட்டாயம்தமிழக பள்ளிக் கல்வித்துறை அலுவலக ஊழியர்களும் பதவி உயர்வின் மூலம் ஆசிரியர் பணி பெறுவதற்கு, இனி டெட் தேர்வின் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பள்ளிகல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு பதவி உயர்வின் மூலமாக ஆசிரியர் பணி வழங்குவதற்கான தமிழக அரசு செய்த விதிமுறைகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே பிளஸ் 2 முடித்து தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு படித்து முடித்த அலுவலக ஊழியர்களுக்கு பதவி உயர்வு மூலம், ஆரம்பப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு, தொடக்கக்கல்வி பட்டயப்படிப்புடன் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday, February 20, 2020

PUBLIC EXAMINATION TIME TABLE - 2020


ஆசிரியர்கள் தேவை (PG, BT, S.Grade)

Walk-in Interview at School on 23-02-2020 (10 am to 1 pm) Send your Resume by email in Advance.

* Excellent Communication skills 
* Teaching experience in CBSE Preferred
* Freshers with fluency in English can also apply 
* Food and Accommodation available for outstation candidates 
* Salary is Negotiable.







Wednesday, February 19, 2020

DSE - மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2020 நிலவரப்படி உள்ள தலைமை ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம்கோரி இயக்குநர் உத்தரவு.


நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2020 நிலவரப்படி உள்ள தலைமை ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் கீழ்கண்ட படிவத்தில் 

(அரசு/நகராட்சி தனித்தனியாக) பூர்த்தி செய்து (MS Excel ல் படிவம் ஆங்கிலத்தில்) w1sec.tndse@nic.in என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

மேலும் , எந்தவொரு காலிப்பணியிடமும் விடுபடாமல் அனைத்து காலிப்பணியிட விவரங்களும் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்து அனுப்பி வைக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் இன்றுமுதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை


பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனி தேர்வர்கள், இன்று முதல், 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்யலாம்.இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, மார்ச்சில் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் பங்கேற்க, தனி தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.அவர்கள், இன்று முதல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பிளஸ் 1ல், 'அரியர்' மற்றும் பிளஸ் 2 ஆகிய, இரண்டு தேர்வுகளுக்கும், ஒரே ஹால் டிக்கெட் வழங்கப்படும். செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டிய தனி தேர்வர்கள், கருத்தியல் தேர்வு நடக்கும் நாட்களுக்கு முன்பே, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்தின், முதன்மை கண்காணிப்பாளரை அணுகி, செய்முறை தேர்வு தேதியை தெரிந்து, அதில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, February 17, 2020

வேலைவாய்ப்பு முகாம், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொள்ள அழைப்பு!!

23.02.2020 ஞாயிறு அன்று  திருப்பூரில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்(ஆசிரியர்களுக்கு மட்டும் )

அன்புள்ள  பள்ளி  தாளாளர்கள், முதல்வர்கள் ,தலைமை  ஆசிரியர்கள்  அனைவருக்கும்  அன்பு வணக்கங்கள்.

வருகின்ற 23.02.2020 ஞாயிறு திருப்பூர், காங்கேயம்  ரோடு  ராக்கியாபாளையத்தில்  உள்ள  CENTUARY FOUNDATION COLLEGE OF EDUCATION ல்  தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது .

இந்த  வேலைவாய்ப்பு  முகாமில்  கோவை ,திருப்பூர் ,ஈரோடு ,நீலகிரி ,திண்டுக்கல் ,தேனி  மாவட்டங்களை  ஒன்றிணைத்து  நடத்தப்படுகின்றது .

இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்துகொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய இருக்கின்றார்கள் .

இதில் 1000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள்(அனுபவம் உள்ள /இல்லாதவர்கள் ) நேர்முகத் தேர்வுக்கு நேரில் வர இருக்கின்றார்கள் .

இந்த  வேலைவாய்ப்பு  முகாம்  தனியார்பள்ளி  ஆசிரியர்களுக்கு  மட்டும்  நடத்தப்படுகின்றது தமிழகம்  முழுவதும்  விளம்பரம் செய்யப்பட்டுள்ளது .

மேலும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ,தினமலர் ,தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களிலும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது

அனைத்து கல்வியியல் கல்லூரிகளும் அழைக்கப்பட்டுள்ளன ..

இளங்கலை மற்றும் முதுகலை முடித்த மாணவர்களும் ,BE முடித்த மாணவர்களும் (நீட் ,AIIMS ,ஜிப்மர் ,IIT  போன்ற  நுழைவுத்தேர்வுகளுக்கு  physics,chemistry maths பாடம்  எடுக்க  தகுதி  உள்ளவர்கள் .)தங்கள் கல்லூரி இறுதி ஆண்டு (BEd, MEd )படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.வரும்போது  உண்மை  சான்றிதழ்கள்  அல்லது  நகல் சான்றிதழ்கள்  கொண்டு வரவும்.

  வேலை  வாய்ப்பு  முகாமில்  பங்கேற்க  விரும்பும்  பள்ளிகள்  தங்கள்  பள்ளிகளை 9600588800 என்ற  WHATSAPP  எண்ணில்  தங்கள் பள்ளி  பெயர் ,ஈமெயில்,அலைபேசி எண்  போன்றவற்றை  பதிவு  செய்யுமாறு  அழைக்கப்படுகிறார்கள் .

ADVERTISEMENT IN NEWS  PAPAER, LOCAL CHANNELS  ADVERTISEMENT  அனைத்து செலவுகளும்  எங்களுடையது .


DEMO CLASS பார்க்கும்   வசதியுடன் .தேர்வாகும்  ஆசிரியர்களுக்கு  நீங்களே  சம்பளம்  நிர்ணயம்  செய்து  கொள்ளலாம் .மேலும் 2020-21  கல்வியாண்டு  முழுவதும்  candidate  support  கொடுக்கப்படும்.


SOME OF ENROLLED SCHOOLS:

VIDHYA VIKAS MATRIC HR SEC SCHOOL, KARAMADAI.
FRONTLINE ACADEMY GROUP OF SCHOOLS
MS VIDHYALAYA MATRIC HR SEC SCHOOL
KIDS CLUB GROUP OF SCHOOLS
KUMUTHA MATRIC HR SEC SCHOOL
KOMARASAMY GOUNDER MATRIC HR SEC SCHOOL
PLATOS ACADEMY  HR SEC SCHOOL
SRC MEMORIAL MATRICULATION SCHOOL
KAMADHENU MATRIC HR SEC SCHOOL
PALANIYAPPPA MATRIC HR SEC SCHOOL
RAMAKRISHNA MATRIC HR SEC SCHOOL
BHARATHIDASANAR MATRIC HR SEC SCHOOL
BANNARI AMMAN PUBLIC SCHOOL
AALAYA ACADEMY&MONTESSORI SCHOOL
SPRINGDALE PUBLIC SCHOOL
VETRI VIKAAS GROUP OF SCHOOLS
VIJAY VIDHYALAYA GROU OF SCHOOLS
VIJAY VIDHYASHRAM GROUP OF INSTITUTIONS
BHARATHI GROUP OF SCHOOL
BHARATHI MATRIC  HR SEC SCHOOL
RAJALAKSHMII MATRIC HR SEC SCHOOL
GREEN PARK SMART SCHOOL
MARUTHI EXCEL MATRIC HR SEC SCHOOL
GLOBAL MATRIC HR SEC SCHOOL
RAJA NURSERY AND PRIMARY SCHOOL
VIRUKSHA INTERNATIONAL SCHOOL
SHANTHI VIDHYALAYA MATRIC HR SEC SCHOOL
VINAYAGA MATRIC HR SEC SCHOOL
SRI SAKTHI INTERNATIONAL SCHOOL
BHARATHI VIDHYALAYA GROUP OF SCHOOLS GOBI
Sri Nachammal Vidyavani Senior Secondary School,
GEM INTERNATIONAL SENIOR SECONDARY SCHOOL,
SHREE VALLI MATRIC HR SEC SCHOOL 
KOVAI VIDHYASHRAM
JEYANTHI MATRIC HR SEC SCHOOL
PKP MATRIC HR SEC SCHOOL
GREENFIELD INTERNATIONAL SCHOOL, DHARAPURAM
SRI KAMATCHI AMMAN MATRIC HR SEC SCHOOL
PMG MATRIC HR SEC SCHOOL
SHANTHI JUNIORS

இடம் : CENTUARY FOUNDATION COLLEGE OF EDUCATION, KANGEYAM ROAD, RACKKIAPALAYAM, TIRUPPUR


தேதி :23.02.2020 (ஞாயிறு)
மேலும் தொடர்புக்கு
9788829179
9442568675

தொடக்கப்பள்ளிகளில் 50 விழுக்காடு தலைமை ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக அரசே நியமனம் செய்யலாம்!!


நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், பணி மூப்பின் அடிப்படையில் தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். இதனால் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத சூழல் நிலவுகிறது.

இதனை சரிசெய்யும் விதமாக 50 விழுக்காடு பள்ளிகளில் இனி தலைமை ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது நீண்ட காலமாக பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு எதிரானது என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் உள்ள தொடக்க மற்றும் இடைநிலை பள்ளிகளில் 20 லட்சம் பேர் படித்து வருகின்றனர். ஆனால் மொத்தம் 1.2 லட்சம் ஆசிரியர்களே உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அதே ஊரைச் சேர்ந்தவர்களாக உள்ளதால் மாணவர்களின் மனநிலை, பெற்றோர் மற்றும் அந்த ஊரின் சூழல் குறித்த புரிதல் இருக்கும்.

அதனால் தேர்வு நடத்தி தலைமை ஆசிரியரை நியமிக்காமல் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் நடைமுறையே தொடர வேண்டுமென கேரள அரசு வலியுறுத்தியுள்ளது. அதேசமயம் பஞ்சாப் மற்றும் பீகார் மாநிலங்கள் தேர்வு முறையில் தலைமை ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளை தொடங்கிவிட்டன.

Saturday, February 15, 2020

TNPSC - தேர்வுகளில் 6 அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது தேர்வாணையம்!

TNPSC - தேர்வாணையம் தனது தேர்வு முறைகளில் இன்றியமையாத மாற்றங்களை அவ்வப்போது அறிவித்து செயல்படுத்தி வருகிறது . 

கடந்த 07. 02.2020ல் அன்று ஆதார் கட்டாயம் உள்ளிட்ட ஆறு முக்கியமான புதிய மாற்றங்களை முதற்கட்டமாக அறிவித்திருந்தது அதன் தொடர்ச்சியாக 14.02.2020 அன்றும் தேர்வு முறைகளில் செய்யப்படவுள்ள சீர்திருத்தங்கள் குறித்து தேர்வாணையத் தலைவர் தலைமையில் தேர்வாணையக் குழுமம் கூடி விவாதித்து பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அம்முடிவுகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :

1 . முதனிலை மற்றும் முதன்மை தேர்வு முறை அறிமுகம் : 

தொகுதி - 4 தொகுதி - 2A போன்ற தேர்வுகளுக்கு பொது அறிவுத்தாள் மட்டுமே கொண்ட ஒரே ஒரு தேர்வு மட்டும் இதுவரை நடந்துவருகிறது . இனி வருங்காலங்களில் இத்தேர்வுகள் இருநிலைகளைக் கொண்டதாக அதாவது , முதனிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளாக நடத்தப்படும்

2 . தேர்வு நேரங்களில் மாற்றம் :

தேர்வு எழுத வரும் தேர்வர்களின் மெய்த்தன்மை உறுதி செய்யவும், இதர தேர்வு விதிமுறைகளைத் தேர்வர்களுக்கு விளக்கும் விதமாகவும், தேர்வர்கள் இனி, 9.00 மணிக்கே தேர்வுக் கூடங்களுக்கு வருகை புரிதல் வேண்டும் தேர்வு நேரம் சரியாக 10.00 மணிமுதல் 01.00 மணிவரை மூன்று மணி நேரத்திற்கு நடைபெறும் 10.00 மணிக்கு மேல் வரும் எந்த தேர்வர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் . தேர்வு நேரத்திற்குப் பின்னர் விடைத்தாளில் பதிவு செய்ய வேண்டிய கூடுதல் விவரங்களுக்காக 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். காலை மாலை இரு வேளைகளிலும் தேர்வு இருந்தால் மாலை நடக்க வேண்டிய தேர்வு பிற்பகல் 3. 00 மணிக்குத் தொடங்கும் .

3 . அனைத்து வினாக்களுக்கும் விடைகள் அளிப்பது கட்டாயம்                                 
இனி வரும் கொள்குறிவகைத் தேர்வுகளில் அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் விடையளிக்க வேண்டும் எந்தவொரு வினாவிற்கும் விடை அளிக்க இயலவில்லை! விடை தெரியவில்லை எனில் அதற்கு கூடுதலாக கொடுக்கப்படும் E என்ற வட்டத்தினை கருமையாக்குவதுடன் மொத்தம் எத்தனை கேள்விகளுக்கு முறையே A,B,C,D மற்றும் E விடைகளை நிரப்பியுள்ளார் என்ற விவரங்களை தனியே பதிவு செய்து அதற்கான உரிய கட்டங்களை நிரப்ப வேண்டும் . தேர்விற்குப் பின்னர் விடைத்தாளில் பதிவு செய்ய வேண்டிய கூடுதல் விவரங்களுக்காக தேர்வு நேரத்திற்குப் பிறகு 15 நிமிடங்கள் இப்பணிக்காக மட்டும் வழங்கப்படும் . எந்தவொரு கேள்விக்கும் மேற்கூறிய A,B,C,D மற்றும் E ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை குறிக்கத் தவறினால் விடைத்தாள் செல்லாததாக்கப்படும் தேர்வு முடிந்ததும் எந்தவொரு குறிப்பிட்ட நபரின் விடைத்தாளையும் இனங்கான இயலாதவாறு தேர்வர்களின் விவரங்கள் அடங்கிய பகுதி மற்றும் விடையளிக்கும் பகுதி ஆகியவற்றை தேர்வர்களின் முன்னிலையிலேயே தனித் தனியே பிரித்து தேர்வு அறையிலேயே சீலிடப்படும் சீலிடப்பட்ட உறை மீது அறையிலிருக்கும் சில தேர்வர்களிடம் கையொப்பம் பெறப்படும் .

4 . தேர்வரின் கைரேகைப் பதிவு .

தேர்வர்களுடைய விடைத்தாளை அடையாளம் காண இயலாத வகையில் விடைத்தாளின் விடையளிக்கும் பகுதியில் தேர்வரின் கையொப்பத்திற்கு பதிலாக தேர்வரின் இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்படும் .

5 . விடைத்தாள் பாதுகாப்பு : 

தேர்வுமையங்களிலிருந்து விடைத்தாள்களை பாதுகாப்பான முறையில் தேர்வாணைய அலுவலகத்திற்கு எடுத்துவர தற்போதுள்ள முறை முற்றிலும் மாற்றப்பட்டு அதிநவீன தொழில்நுட்ப ஜி.பி. எஸ் மற்றும் கண்காணிப்புக் கேமரா வசதியுடன் கூடிய பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்படும். இந்நடவடிக்கைகள் முழுவதையும் நேரலையாக தேர்வாணைய அலுவலகத்தில் 24 மணி நேரமும் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை தொடங்கப்படும்

6 . தகவல்கள் மற்றும் கருத்துக்களைத் தெரிவிக்க வசதி :       

தேர்வாணையத்திற்கும், நேர்மையான முறையில் தேர்வுக்குத் தங்களை தயார் படுத்திக்கொண்டிருக்கும் தேர்வர்களுக்கும் இடையிலான பிணைப்பை உறுதி செய்யவும், தகவல் பரிமாற்றத்தினை மேலும் எளிமைப்படுத்தவும் தேர்வாணைய இணைய தளத்தில் ஒரு சிறப்பு தகவல் தளம் விரைவில் உருவாக்கப்படும் தேர்வாணையம் அவ்வப்போது கொண்டுவரும் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் குறித்த பின்னூட்டங்களைப் பெறவும் தேர்வர்கள் தங்களுக்குத் தெரியவரும் தகவல்களை தேர்வாணையத்துடன் பகிர்ந்துகொள்ளவும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும். அவ்வாறு தகவல் அளிக்கும் தேர்வர்களின் இரகசியத்தன்மை காக்கப்படும்.

Wednesday, February 12, 2020

DTEd - First & Second Year Examination Time Table 2020

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கான இரண்டாம் ஆண்டு தேர்வு 03.06.2020 புதன் கிழமையும், முதலாமாண்டு தேர்வு 04.06.2020 வியாழக்கிழமையும் தொடங்கி கீழ்க்கண்டவாறு நடைபெற உள்ளது. தேர்வுகள் காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை நடைபெறும் .