திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Saturday, April 11, 2020

வருங்கால வைப்பு நிதியில் இருந்து 75 சதவீதம் பணம் எடுக்கு குவியும் விண்ணப்பங்கள்!


வருங்கால வைப்பு நிதியில் இருந்து 75 சதவீதம் பணம் எடுக்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு.

கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள அவசர நிலை காரணமாக வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து 10 நாட்களில் 280 கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

பிரதமரின் காரிப் கல்யாண் யோஜனா தொகுப்பின் கீழ் தொழிலாளர்கள் வைப்பு நிதியில் இருந்து 75 விழுக்காடு பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் ஒரு லட்சத்து 37 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 279 கோடியே 65 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.

‘நீட்’ தேர்வு எழுதும் நகரங்களை மாற்றி கொள்ளலாம் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு


கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரி,பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு வருகின்றன. 

அதேபோல், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வான ‘நீட்’ தேர்வு மே மாதம் நடைபெறுவதாக இருந்தது. 

இந்தநிலையில் அந்த தேர்வையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுதும் நகரங்களையும் மாற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய தேர்வு முகமையின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் வினித் ஜோஷி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தவர்கள் தங்களுடைய ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தங்கள் எதுவும் இருந்தால், அதை திருத்தி கொள்ளலாம். மேலும் தேர்வு எழுதும் நகரங்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

தேசிய தேர்வு முகமையின் nta-n-eet.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று வருகிற 14-ந் தேதி மாலை 5 மணிக்குள் கட்டணம் இல்லாமலும், இரவு 11.50 மணிக்குள் கட்டணத்தோடும் திருத்தி சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களை nta-n-eet.nic.in, www.nta.ac.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, April 10, 2020

ரூ.500 க்கு விலையிலான "மளிகைப் பொருட்களின் தொகுப்பு பைகளை " நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை!

தமிழ் நாட்டில்தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கும் பொருட்டு அனைத்து மண்டலங்களிலும், நகரும் பண்ணை பசுமை கடைகள் மூலம் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் சில்லறையாகவும் மற்றும் தொகுப்பாகவும் மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கே கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தற்போது அரசு பிறப்பித்த ஊரடங்கு அமுலில் உள்ளதால் போக்குவரத்து பாதிப்படைந்து அதன் மூலம் மளிகைப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம் ஏற்படும் காரணத்தினால் , வருமானம் இழந்து தவிக்கும் ஏழை , எளிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக ரூ.500 / - விலையிலான "மளிகைப் பொருட்களின் தொகுப்பு பைகளை " நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 


டி.யு.சி.எஸ் நிறுவனத்தின் மூலம் மளிகைப் பொருட்கள் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு இணைப்பில் கண்டவாறு மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. மளிகைப் பொருட்கள் தங்கள் மண்டலத்தில் செயல்படும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் பெறப்பட்ட குறிப்பிடப்பட்ட அளவுகளில் பொட்டலமிடப்பட வேண்டும்.

மளிகைப் பொருட்களின் பைகள் தயாரானவுடன் தங்கள் மாவட்டத்தில் செயல்படும் நியாயவிலைக் கடைகள் மூலம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள எண்ணிக்கையிலான மளிகை தொகுப்பு பைகளை விற்பனை செய்ய கேட்டுக் கொள்கிறேன்.




Tuesday, April 7, 2020

வாட்ஸ் அப்பில் மற்றவர்களுக்கு தகவல்களை பகிர புதிய கட்டுப்பாடு விதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக வதந்திகளும், பொய்செய்திகளும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரப்பப்படுகின்றன.

இந்த நிலையில், கொரோனா தொடர்பான வதந்திகளை கட்டுப்படுத்தும் நோக்கில், தகவல்களை பகிர  புதிய கட்டுப்பாடுகளை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, அதிகம் பரப்பப்படும் தகவல்களை ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்.  இதற்கு முன்பு, ஒரு தகவலை அதிகபட்சமாக 5 பேர் வரை அனுப்பும் வசதி இடம் பெற்றிருந்தது. 

சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்செய்திகளை கட்டுப்படுத்த உலக நாடுகள், பல்வேறு முன்முயற்சிகளை தொடங்கியுள்ள நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் இந்தக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. 

கொரோனாவை கிண்டல் செய்தால் வாட்ஸ்அப் அட்மின்கள் மீது நடவடிக்கை என்பது வதந்தி!


கொரோனாவை பற்றி கிண்டல்செய்து வாட்ஸ்அப்பில் தகவல் பரப்பினால் நடவடிக்கை என்பது வதந்தியே. 

அதுபோன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம்.

கொரோனாவை பற்றி மீம்ஸ் போட்டால் வாட்ஸ்அப் அட்மின்,  உறுப்பினர்கள் மீது நடவடிக்கை என வதந்தி பரவியது. இன்நிலையில் அதுபோன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Monday, April 6, 2020

காற்று மாசு குறைவால் 200 கி.மீ. தொலைவுக்கு தெரிந்த இமயமலை

ஜலந்தர் பகுதியில் காற்று மாசு குறைந்திருப்பதால் தவுலதார் மலைத்தொடரின் எழில்மிகு தோற்றம் கண்ணுக்கு தெரிந்துள்ளது.

காற்று மாசு குறைவால் 200 கி.மீ. தொலைவுக்கு தெரிந்த இமயமலை

பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது ஜலந்தர் நகரம். இமாசல பிரதேச எல்லை அருகே அமைந்துள்ள இந்த நகரில் இருந்து சுமார் 213 கி.மீ. தொலைவில் இமயமலையின் தவுலதார் மலைத்தொடர் இருக்கிறது. பனியால் சூழப்பட்ட இந்த மலைத்தொடரின் ரம்மியமான காட்சியை ஜலந்தர் பகுதியில் வசிக்கும் இன்றைய தலைமுறையினர் கண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அதிகரித்துள்ள காற்று மாசு, அந்த மலைத்தொடரை மறைத்துவிட்டது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பனிமலை கண்ணில் தெரிந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதால் காற்று மாசு பல மடங்கு குறைந்திருக்கிறது.

அந்த வகையில், ஜலந்தர் பகுதியிலும் காற்று மாசு குறைந்திருப்பதால் தவுலதார் மலைத்தொடரின் எழில்மிகு தோற்றம் கண்ணுக்கு தெரிந்துள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள ஜலந்தர்வாசிகள், தங்கள் வீடுகளில் இருந்து இந்த மலைத்தொடரின் பின்னணியில் ‘செல்பி’ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Thursday, April 2, 2020

விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைப்பு - தேர்வுத்துறை இயக்குநர் செயல்முறைகள்!

 

கொரோனா - மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு தமிழக அரசு உத்தரவு!


கொரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருவதால், தனிமைப்படுவதற்கு ஏதுவாக பள்ளிகளை தயாா் நிலையில் வைக்க மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு தமிழக அரசின் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென அரசு அறிவுறுத்திள்ளது.

இதையடுத்து காய்கறிக் கடைகளும், இறைச்சிக் கடைகளும் விசாலமான பள்ளி வளாகங்களுக்கு மாற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கரோனா இருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படும் மக்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவத் தொடங்கினால், பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படக் கூடிய நபா்களைத் தனிமைப்படுத்துவதற்குப் பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள கட்டடங்களைத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனக் கல்வித் துறைக்கு தமிழக அரசின் சாா்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரசு உதவிபெறும் பள்ளிகள் விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளை அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான பணிகளை மேற்கொள்ளுமாறு, அனைத்து மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Wednesday, April 1, 2020

10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல்!

வளரும் பொருளாதாரத்தின் தேவைகளை பூர்த்தி செய்யவும், உலக அளவில் பெரிய வங்கிகளாக உருவாக்கவும் பொதுத்துறை வங்கிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை பேங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன.


இந்நிலையில், மேலும் 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த இணைப்பு இன்று (புதன்கிழமை) அமலுக்கு வருகிறது. அதன்படி, இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இன்று இணைகிறது. இனிமேல், அலகாபாத் வங்கிக்கிளைகள், இந்தியன் வங்கிக்கிளைகளாக செயல்படும்.



கார்ப்பரேசன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைகின்றன. அதனால், கார்ப்பரேசன் வங்கி, ஆந்திரா வங்கிக்கிளைகள், இனிமேல் யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளைகளாக செயல்படும். சிண்டிகேட் வங்கி, இன்று கனரா வங்கியுடன் இணைகிறது. இனிமேல், சிண்டிகேட் வங்கிக்கிளைகள், கனரா வங்கிக்கிளைகளாக செயல்படும்.



யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கி ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைகின்றன. மேற்கண்ட 2 வங்கிக்கிளைகளும் இனிமேல் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கிளைகளாக செயல்படும்.



இதன்மூலம், 10 பொதுத்துறை வங்கிகள், 4 வங்கிகளாக இணைகிறது. இந்த இணைப்பு தொடர்பான அறிவிப்பாணையை ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இணைப்பைத் தொடர்ந்து, நாட்டில் பொதுத்துறை வங்கிகள் எண்ணிக்கை 12 ஆக குறைகிறது. அத்துடன், பாரத ஸ்டேட் வங்கியை தொடர்ந்து, 2-வது பெரிய வங்கியாக பஞ்சாப் நேஷனல் வங்கி உருவெடுக்கிறது. பேங்க் ஆப் பரோடா, கனரா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பெறுகின்றன.

Honble Minister for Revenue and Disaster Management and Information Technology instructed the District Collectors to ensure OAP disbursal