திருக்குறள்:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
தமிழன்... டா !
Pages
title
Sunday, September 9, 2018
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இந்த உலகின் பாவத்தை சம்பாதித்த அப்பாவிகள்?
வேலூர் மாவட்ட நிகழ்வைப் பார்த்திருப்பீர்கள்.
உங்களைப் போலவே படித்துவிட்டு டிஆர்பி எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டு பணியில் சேர்ந்தவர், தன்னிடம் படிக்கும் மாணவன் திறனுடையவனாக முன்னேறவேண்டும் என்ற வேட்கை கொண்டவர்.
இன்று அவரது பள்ளியிலேயே நிராதரவாக்கிடப்பட்டு தனித்து சூழப்பட்டு பெண்களால்! அப்பள்ளி மாணவனாலேயே அடித்து வீழ்த்தப்பட்டு மண்ணில் சாய்கிறார்.
பார்க்கும் போதே குலை நடங்குகிறது.
என்றோ சிலரது கருத்துக்களாக மாறிப்போகும்.
நாள்பட மறந்தும் போகும்.
தான் பணியாற்றிய பள்ளியிலேயே தாக்கப்படும் ஆசிரியருக்கு பணிப்பாதுகாப்பு எங்கே?
பேருந்து ஓட்டுநர் எங்கேயாவது மோதிவிட்டால் இறங்கி ஓட்டம் எடுப்பதுபோல் இனி ஆசிரீயர்களும் ஓட வேண்டுமா?
இருநாட்கள் முன் ஆசிரியர் தினமென்று வாழ்த்திவிட்டு அடுத்த இரு நாட்களிலேயே அடிக்கும் காணொளியைப் போடுகிறார்கள்.
மாணவன் எழுதியதாக சொல்லப்படும் கடிதத்தின் உண்மைத்தன்மை உறுப்படும் முன்னரே கற்பிக்கும் ஆசானைஅடித்து துவைக்கிறார்கள். மாணவனின் கடிதத்தில் எல்லோர் மேலுமே வெறுப்படைந்ததாக உள்ளதற்கு காரணம் யார்? அனைவரின் மேலுமே குற்றம் சொல்லிடும் அவனது மனநிலை என்ன?
இதற்கிடையே குறைந்தது தேர்ச்சியாவது பெற வைத்திட முடியாத நீங்கள் வாங்கும் சம்பளம் தர்மமா? எனவும் அதிகாரிகள் கேட்டுவிடுகிறீர்கள்.
தாக்கப்பட்ட ஆசிரியரின் மனநிலை என்னவாக இருக்கும்? அவர் தாக்கப்படுவதைப்பார்க்கும்
அவரது குழந்தைகளும், மனைவியும், பெற்றோரும் இனி என்ன அவருக்கு சொல்லப்போகிறார்கள்?
கத்தியால் குத்திய மாணவனுக்கு தண்டனை இல்லை. அவனுக்கு கவுன்சலிங் கொடுத்து ராஜமரியாதையோடு அடுத்த பள்ளிக்கு கூட்டிச் சென்று சேர்த்து விடுகிறீர்கள். ஆனால் அடிபட்ட ஆசிரியருக்கு என்றைக்காவாவது ஆறுதல் சொன்னதுண்டா?
எங்களின் பாதுகாப்பு யாரிடம் இனி கேட்பது?
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இந்த உலகின் பாவத்தை சம்பாதித்த அப்பாவிகள்?
2000, 200 ரூபாய் நோட்டு கிழிந்தால், அழுக்கானால் மாற்ற முடியுமா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்...

ரூ.2000, ரூ.200 நோட்டுகள் கிழிந்துவிட்டால் அல்லது அழுக்கடைந்தால் மாற்ற முடியுமா, மாற்றினால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது குறித்த தெளிவான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
ரூபாய் நோட்டுகளில் ஒவ்வொரு வகையான சேதத்துக்கு ஏற்றாற்போல் பணம் கிடைக்கும் என்ற வகையில் விதிமுறைகளை வகுத்துள்ளது. இப்போது வரை ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ. 50, ரூ.100, ரூ.500 ஆகிய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவது குறித்த விதிமுறைகள் மட்டுமே ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
ஆனால், புதிதாக வெளியிட்ட 2000 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகளுக்கு எந்தவிதிமுறையும் இல்லை. இதன் காரணமாக ரூ.2 ஆயிரம் நோட்டுகளில் ஏதேனும் மை கறை, அழுத்து, மஞ்சள் , ஏதேனும் ஓரத்தில் கிழிந்துவிடுதல் போன்ற சேதங்கள் ஏற்பட்டால், ஏடிஎம் பணம் டெபாசிட் செய்யும் எந்திரங்களும் ஏற்பதில்லை. வங்கிகளும் ஏற்கயோசித்து வந்தன.
இந்நிலையில் சிறிய வடிவத்தில் மகாத்மா காந்தி சீரிஸில் கொண்டு வந்த நோட்டுகளை மாற்றுவது குறித்து ரிசர்வ் வங்கி நிதி அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதி புதிய விதிமுறைகள் குறித்து அனுப்பி இருந்தது.. நிதி அமைச்சகத்தின் அனுமதி கிடைத்த நிலையில் விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
2009-ம் ஆண்டு பணம் திருப்பப்பெறும் விதிமுறைப்படி, சிறிய அளவிலும், வடிவத்திலும் வெளியிடப்பட்ட மகாத்மா காந்தி சீரிஸ் வகை ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ரூ.2000 நோட்டின் அளவு 109.56 சதுரசெ.மீ. இதில் 88 சதுரசெ.மீ வரை ரூ.2 ஆயிரம் நோட்டு கிழிந்திருந்து அதை வங்கியில் கொடுத்தால் அதற்கு முழு பணமும் திருப்பி அளிக்கப்படும் அல்லது 44 சதுரசெ.மீ வரை சேதமடைந்திருந்தால், பாதி பணம் மட்டுமே அளிக்கப்படும்.
அதற்கும் குறைவாக சேதமடைந்திருந்தால், பணம் வழங்கப்படாது. அதேபோல ரூ.200 நோட்டுகள் 78 சதுர செமீ வரை இருந்து அதை வங்கியில் அளித்தால் அதற்கு முழுப்பணம் அளிக்கப்படும், 39 சதுரசெமீ வரை இருந்தால் பாதி பணம் திருப்பி அளிக்கப்படும். அதற்கு அதிகமாகக் கிழிந்திருந்தால் பணம் வாங்கப்படாது. மேலும் ரூ.2000, ரூ.200 நோட்டுகள் சேதம் அடைந்திருக்கும் அளவைப் பொறுத்து பணம் அளிப்பது முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.
Tuesday, August 7, 2018
Thursday, August 2, 2018
High School HM Promotion Counseling Vacant List - All District
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தமிழகம் முழுவதும்
Wednesday, August 1, 2018
CTET 2018 – Apply Online for Central Teacher Eligibility Test
Post Date: 01-08-2018
Brief Information: Central Board of Secondary Education (CBSE) has given an employment notification for the recruitment of Central Teacher Eligibility Test (CTET) vacancies. Those Candidates who are interested in the vacancy details & completed all eligibility criteria can read the Notification & Apply.
Central Board of Secondary Education (CBSE)
Central Teacher Eligibility Test 2018
| |
Application Fee
| |
Important Dates
| |
| Vacancy Details | |
| Post Name | Qualification |
| Teacher (for Classes I-V) | Senior Secondary with 50% marks & D.El.Ed/ B.El.Ed/ Graduation with D.El.Ed |
| Teacher (for Classes VI-VIII) | Senior Secondary with B.A/B.Sc.Ed or B.A.Ed/B.Sc.Ed/ Graduation with D.El.Ed/ B.Ed |
| Interested Candidates Can Read the Full Notification Before Apply Online | |
| Important Links | |
| Apply Online | Click Here |
| Information Bulletin | Click Here |
| Notification (English) | Click Here |
| Official Website | Click Here |
Subscribe to:
Posts (Atom)



