திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Saturday, December 14, 2019

நாட்டிலேயே முதல் முறையாக, ஒவ்வொரு ஓட்டுச் சாவடிக்கும், கணினி வாயிலாக தேர்தல் அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு!


நாட்டிலேயே முதல் முறையாக, ஒவ்வொரு ஓட்டுச் சாவடிக்கும், கணினி வாயிலாக, தேர்தல் அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி அலுவலரின் கீழ், ஒரு ஓட்டுச்சாவடிக்கு, ஏழு அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.

இதற்காக, தேசிய தகவல்மையம் உதவியுடன், மாநில தேர்தல் ஆணையம், புதிய, 'சாப்ட்வேர்' தயாரித்துள்ளது. கருவூலத் துறையில் இருந்து, ஊழியர்களின் விபர படிவம் பெறப்படுகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர், எந்த ஒன்றியத்தை சேர்ந்தவர், அவரது சொந்த ஊர், ஓட்டுச்சாவடி விபரம், வாக்காளர் அடையாள அட்டை எண் விபரங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.அதை, கணினியில் பதிவேற்றம் செய்து, பணி ஒதுக்கப்படுகிறது. சொந்த ஊர், குடியிருக்கும் பகுதிகளில் பணியாற்ற முடியாதது போல, 'சாப்ட்வேர்' தயாரிக்கப்பட்டுள்ளதால், அதன்படி உத்தரவு வழங்கப்படுகிறது.உரிய காரணங்கள் இன்றி, பணியை மறுக்கவோ,பரிசீலிக்கவோ இயலாது.இதில், மாற்றுத் திறனாளிகள், பெண்களுக்கு, 3 கி.மீ. சுற்றளவில் பணி வழங்கப்படுகிறது. மலைக் கிராம ஓட்டுச்சாவடிகளுக்கு தகுதியானவர்களை, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கின்றனர்.

உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கு, 'ஆன்லைன்' வழியாக, பணி ஒதுக்கீடு செய்வது, தமிழகத்தில் தான் முதன்முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது என, மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

DGE - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பள்ளி மாணாக்கர்களின் பெயர் , பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்கள் அடங்கிய பெயர் பட்டியலை EMIS - ல் பதிவேற்றம் செய்ய 18 . 11 . 2019 முதல் 29 . 11 . 2019 வரை கால அவகாசம்!


நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பள்ளி மாணாக்கர்களின் பெயர் , பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்கள் அடங்கிய பெயர் பட்டியலை EMIS - ல் பதிவேற்றம் செய்ய 18 . 11 . 2019 முதல் 29 . 11 . 2019 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது . 

மேற்குறிப்பிட்டவாறு தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணாக்கரின் விவரங்களையும் சரிபார்த்து , திருத்தம் செய்யும் பணியினை முடித்த பின்பு, தலைமையாசிரியர்கள், 16.12.2019 முதல் 30.12.2019 வரையிலான நாட்களில் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திற்குச் (www.dge.tn.gov.in) சென்று , இத்துடன் இணைத்து அனுப்பிவைக்கப்படும் வழிமுறைகளை பின்பற்றி , மாணாக்கரது விவரங்களை சரிபார்த்து கூடுதல் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வது தொடர்பாக பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன .

பள்ளியினை பதிவு செய்தல்

1. தலைமையாசிரியர்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திற்குச் ( www.dge.tn.
    gov.in ) சென்று Online Portal for School and Educational Offices என்ற வாசகத்தினை click செய்ய 
    வேண்டும் .

2. அதன் பின்னர் திரையில் தோன்றும் School registration என்ற வாசகத்தினை click செய்து 
    தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள UDISE Code ( EMIS User ID ) மற்றும் Password - ஐ பயன்படுத்தி , 
    தங்களது பள்ளியின் பெயர் , பள்ளியின் வகை ( Management ) , மின்னஞ்சல் முகவரி , 
    மாவட்டம் போன்ற விவரங்களை பதிவு செய்யவேண்டும் .

3. School registration - ல் உள்ள பள்ளியின் பெயரே மதிப்பெண் சான்றிதழில் அச்சிடப்படும் 
    என்பதால் பள்ளியின் பெயரை ஆங்கிலத்திலும் , தமிழிலும் சரியாக பதிவேற்றம் 
    செய்யவேண்டும் . பள்ளியின் வகையினையும் ( Management ) சரியாக குறிப்பிட                
    வேண்டும் .

4. மாணாக்கரின் பெயரை தமிழில் பதிவேற்றம் செய்யும் போது , பெற்றோர் / பாதுகாவலர் 
    பெயரையும் முழுமையாக பதிவு செய்தல் வேண்டும் . மாணாக்கரின் பெயர் மற்றும் 
    பெற்றோர் / பாதுகாவலர் பெயர்கள் மதிப்பெண் சான்றிதழில் பதியப்படும் என்பதால் 
    அவற்றினை கவனத்துடன் தமிழில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் .

PRESIDING OFFICER (PO) DUTIES FOR LOCAL BODY ELECTION DEC - 2019

ஊரக உள்ளாட்சித் தேர்தல்களின் போது வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களாக பணியாற்றவுள்ள நீங்கள் இத்தேர்தல்களில் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி அறிந்து கொள்ளவும், அப்பணிகளில் ஏற்படும் சந்தேகங்களைப் போக்கிக்கொள்ளவும் இக்கையேடு பெரிதும் உதவும் . 

உங்கள் பணி சிறப்புடன் நடைபெற நீங்கள் 1994 - ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் மற்றும் 1995 - ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் ( தேர்தல்கள் ) விதிகள் ஆகியவற்றையும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளையும் நன்கு அறிந்திருக்க வேண்டும் .

தரமற்ற 37 மருந்துகள் மத்திய அரசு அறிவிப்பு


நாட்டில் விற்பனையில் உள்ள, 37 மருந்துகள் தரமற்றவை என, மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

நாட்டில் விற்பனை செய்யப்படும், அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளை, மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாடு வாரியங்கள், மாதந்தோறும் ஆய்வு செய்கின்றன. அதன்படி, நவம்பரில், 1,158 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், 1,121 மருந்துகளின் தரம் உறுதி செய்யப் பட்டுள்ளது. ஆனால், வாயுப் பிரச்னை, குடற்புழு நீக்கம், வயிற்று உபாதைகள் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தப்படும், 37 மருந்துகள் போலியானதாகவும், தரமற்றதாகவும் இருப்பது கண்டறியப் பட்டுள்ளன.இந்த விபரங்களை, மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம், https://cdscoonline.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

DRDO CEPTAM MTS Recruitment 2020 – Apply Online for 1817 Posts

Name of the Post     : DRDO-CEPTAM Multi Tasking Staff Online Form 2020
Post Date                  : 13-12-2019
Total Vacancy           : 1817

Brief Information: Defence Research & Development Organization (DRDO)-Centre For Personnel Talent Management (CEPTAM) has announced notification for the recruitment of Multi Tasking Staff (MTS) Vacancies. Those candidates who are interested in the vacancy details & completed all eligibility criteria can read the Notification & Apply Online.

DRDO-Centre For Personnel Talent Management (CEPTAM)
Advt No. DRDO ENTRY TEST: 2019-20/MTS
Multi Tasking Staff (MTS) Vacancies 2020
Application Fee
  • Application fee: Rs. 100/-
  • For All Women/ SC/ ST/ PWB/ ESM: Nil
  • Payment Mode: Online Through Credit Card/ Debit Card/ Net Banking
Important Dates
  • Starting Date to Apply Online: 23-12-2019 (TIME: 1000 HRS)
  • Last Date to Apply Online: 23-01-2020 (TIME: 1700 HRS)
  • Date of Tier I Exam (CBT): To be Notified Later
Age Limit (as on 23-01-2020)
  • Age Limit: 18 – 25 Years
  • Age relaxation is applicable as per rules.
Qualification
  • Candidates should possess 10th Class/ ITI Pass.
Vacancy Details
Multi Tasking Staff (MTS)
Category NameTotal
SC163
ST114
OBC503
EWS188
UR849
Interested Candidates Can Read the Full Notification Before Apply Online
Important Links
Apply OnlineAvailable on 23-12-2019
NotificationClick here
Official WebsiteClick here

Friday, December 13, 2019

வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சாதனை !

நீரில் இயங்கும் இரு சக்கர வாகனம்


NMMS 2019 - தேர்வு அறிவித்தப்படி 15.12.2019 ( ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் - தேர்வுத்துறை நேர அட்டவணை வெளியீடு.


15.12.2019 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று மாநில அளவிலான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத்திட்டத் தேர்வு நடைபெறவுள்ளது. 

தமிழகத்தில் இத்தேர்வினை 151292 தேர்வர்கள் 534 தேர்வு மையங்களில் எழுதவுள்ளனர்.

தேர்வு இரண்டு கட்டமாக கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளது.

# மனத்திறன் தேர்வு ( MAT) - காலை 9.30 மணி முதல் 11.00 மணி வரை

# இடைவேலை : காலை 11:00 மணி முதல் 11.30 மணி வரை

# படிப்பறிவுத் தேர்வு ( SAT) - காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை

மாணவர்கள் தேர்வு துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக தேர்வு மையங்களில் இருக்க வேண்டும்.

Thursday, December 12, 2019

Direct Recruitment for the post of Block Educational Officer in Elementary Education department for the year 2018-2019 - ADDENDUM TO NOTIFICATION

TNPSC - Departmental Exam Dec 2019 Date Changed

துறை தேர்வு தேதி மாற்றம்:

வரும், 22ம் தேதி முதல், 30 வரை நடக்கவிருந்த துறை தேர்வுகள், உள்ளாட்சி தேர்தல் காரணமாக, ஜன., 5 முதல், 12 வரை நடக்கும். டில்லி உட்பட, 33 மையங்களில் தேர்வு நடக்கும் தேர்வர்களின் ஹால் டிக்கெட்டை, டிச., 27 முதல், ஜன., 12 க்குள் தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in ல் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். இத்தகவலை, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்து உள்ளது.