திருக்குறள்:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
தமிழன்... டா !
Pages
title
Thursday, March 19, 2020
Monday, March 16, 2020
அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு.
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு.
கொரோனா எதிரொலி: தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு
அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு
10, +2 அரசுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்
மருத்துவ மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும்- முதல்வர் பழனிசாமி
கொரோனா எதிரொலி காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு
திருமண மண்டபங்களில் திட்டமிட்ட நிகழ்வுகளை தவிர புதிய நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தல்
தமிழக அரசு
Sunday, March 15, 2020
Saturday, March 14, 2020
Thursday, March 12, 2020
பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - முழு தொகுப்பு!
இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை (2020 - 2021) எண் 43 தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்
Announcements of School Education Department - 2020-2021 - Tamil Version
அரசுப்பள்ளிகளில் புகார் பெட்டி - கல்வித்துறை உத்தரவு.
தமிழக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2019-2020ம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு, தனிக் கவனம், ஆகியவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 556 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், 89 ஆயிரத்து 140 அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன், இணையப் பாதுகாப்பு, உடல் மற்றும் மனநலப் பாதுகாப்பு, பாலினிப் பாகுபாடு, வளரிளம் பருவக் கல்வி, சுயவிழிப்புணர்வு,பிறர் மனநிலை அறிந்து செயல்படுதல், மன அழுத்தம் மற்றும் மன எழுச்சிகளை கையாளும் திறன் போன்றவை குறித்தும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல், ஆலோசனைகள் வழங்க வேண்டும். உடல் நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பாக பயிற்சி அளிக்க வேண்டும்.ேதர்வு பயத்தால் மாணவர்கள் இடையே ஏற்படும் தற்கொலை எண்ணங்களை நீக்கும் வகையில் தன்னம்பிக்கை வளர்க்க வேண்டும்.
மேனிலைக் கல்வி முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பாகவும், வேல வாய்ப்புகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சமுதாயத்தில் ஏமாற்றுபவர்களிடமிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, தவறாக வழி நடத்தும் நபர்களை எப்படி இனம் கண்டு கொள்வது என்பது பற்றியும், சரியான தொடுதல், தவறான தொடுதல் என்பது பற்றியும் அறிவுறுத்த வேண்டும்.இயற்கை இடர்பாடுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்தும் வழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கும் வகையில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவில் அந்த புகார்களை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை செயல்படுத்த போதிய நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)







