வங்கி அதிகாரிகள் மோசடியார்களுடன் கைகோர்க்கும் நிலையில் வங்கி மோசடியை தடுக்க ஆதார் தீர்வு கிடையாது என சுப்ரீம் கோர்ட்டு கூறிஉள்ளது.
புதுடெல்லி,
ஆதார் எண் கட்டாய இணைப்பு உத்தரவுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்கள் மீதும் அரசியல் சாசன அமர்வு விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஏ.எம். கான்வில்கர், டி.ஓய். சந்திரசூட் மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் விசாரணை நடக்கிறது.
ஆதார் எண்ணை இணைப்பதால் பயங்கரவாதம் மற்றும் வங்கி மோசடியை தடுக்க முடியும் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு பதிலளித்து உள்ள சுப்ரீம் கோர்ட்டு, வங்கி அதிகாரிகள் மோசடியார்களுடன் கைகோர்த்து உள்ள நிலையில் எப்படி வங்கி மோசடியை தடுக்கும் என கேள்வியை எழுப்பி உள்ளது.
“மோசடியாளர்களின் அடையாளம் தொடர்பாக எந்தஒரு சந்தேகமும் கிடையாது. யாருக்கு கடன் கொடுக்கிறோம் என்பது வங்கிக்கு தெரியும். வங்கி அதிகாரிகள் மோசடியாளர்களுடன் இணைந்து செயல்படுகிறார்கள். இதனை ஆதாரால் தடுக்க முடியுமா?,” என சுப்ரீம் கோர்ட்டு கேள்வியை எழுப்பி உள்ளது. பல்வேறு அடையாள அட்டைகள் காரணமாக வங்கி மோசடிகள் நடைபெறுவது கிடையாது எனவும் மத்திய அரசு வழக்கறிஞரிடம் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. பயோமெட்ரிக்ஸ் தகவல்கள் பாதுகாப்பானவை, அதன் துணையுடன் பண மோசடி, வங்கி மோசடி, வருமான வரி ஏய்ப்பு மற்றும் பயங்கரவாதத்தை தடுக்க முடியும் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டு இருந்தது.
ஆதாரால் வங்கி மோசடி எல்லாம் தடுக்க முடியாது என கூறிய சுப்ரீம் கோர்ட்டு, இதன் துணையுடன் அரசு திட்டங்களில் பயனாளர்களை வேண்டும் என்றால் அடையாளம் காணலாம் என குறிப்பிட்டது. குற்றவாளிகள் தெரியாதவர்கள் என்பதால் மோசடிகள் நடைபெற வில்லை எனவும் சுப்ரீம் கோர்ட்டு சுட்டிக்காட்டியது.
மொபைல் எண்ணுடன் ஆதார் இணைப்பு என்பது பயங்கரவாதத்தை தடுக்க வழிவகை செய்யும் என மத்திய அரசு கூறியது.
பயங்கரவாதிகளை கைது செய்யவும் உதவியாக இருக்கும் என மத்திய அரசு கூறியது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு கேள்வியை எழுப்பிய சுப்ரீம் கோர்ட்டு, சில பயங்கரவாதிகளை பிடிக்க நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்க கூற முடியுமா? என்றது. “பயங்கரவாதிகள் சிம் கார்டுக்காக விண்ணப்பம் செய்கிறார்களா? ஒரு சில பயங்கரவாதிகளை பிடிக்க 120 மக்களையும் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்பதில்தான் பிரச்சனை,” என்றது சுப்ரீம் கோர்ட்டு. இரு வாதத்திலும் மத்திய அரசுக்கு சரமாரியான கேள்விகளை சுப்ரீம் கோர்ட்டு எழுப்பியது.
No comments:
Post a Comment