திருக்குறள்:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
தமிழன்... டா !
Pages
title
Friday, June 28, 2019
மூன்றாண்டு சட்ட படிப்பு இன்றுமுதல் விண்ணப்பம்
அரசு சட்ட கல்லுாரிகளில் மூன்றாண்டு பட்ட படிப்புக்கான விண்ணப்பங்கள் இன்றுமுதல் வினியோகம் செய்யப்படுகின்றன.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை இணைப்பில் உள்ள 12 சட்ட கல்லுாரிகளில் மூன்றாண்டு சட்ட படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.
சட்ட பல்கலையிலும் ஒவ்வொரு சட்ட கல்லுாரிகளிலும் விண்ணப்பங்களை பெறலாம்.மேலும் சென்னையில் சட்ட பல்கலை வளாகத்தில் செயல்படும் சீர்மிகு சட்ட கல்லுாரியில் மூன்று ஆண்டு 'ஹானர்ஸ்' சட்ட படிப்புக்கும் இன்று முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
இதற்கு சீர்மிகு சட்ட கல்லுாரியில் மட்டுமே விண்ணப்பங்கள் கிடைக்கும். ஜூலை 27க்குள் விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களை http://www.tndalu.ac.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இன்ஜி. கல்லூரிகள் ஜூலை 1ல் திறப்பு
இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூலை 1ல் வகுப்புகள் துவங்க உள்ளன.
இன்ஜினியரிங் கல்லுாரிகள் இரண்டு மாத கோடை விடுமுறை நாளை மறுநாள் முடிகிறது. இதையடுத்து அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளும் ஜூலை 1ல் திறக்கப்படுகின்றன.
கல்லுாரிதிறப்புக்கு முன் வளாகத்தை சுத்தம் செய்து உள்கட்டமைப்பு வசதிகளை சரிசெய்து தண்ணீர் வசதிகள் செய்து கொள்ள வேண்டும் என கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் கல்லுாரிகள் மற்றும் விடுதிகளுக்கு தனியார் லாரிகள் வழியாக தண்ணீர் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Thursday, June 27, 2019
Wednesday, June 26, 2019
வேளாண் படிப்பு தரவரிசைப்பட்டியல் 2019 - வெளியீடு
2019- 20 ஆம் ஆண்டின் வேளாண் படிப்புக்கான தரவரிசைப்பட்டியலை தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ளார்.
பொதுப்பிரிவில் 200 கட்ஆப் மதிப்பெண் பெற்ற மாணவி ரேவதி தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்தார். எம்.பி.சி. பிரிவில் 198.25 மதிப்பெண்களுடன் சிவாலிணி என்ற மாணவி முதலிடம் பிடித்தார்.
Tuesday, June 25, 2019
இடைநிலை ஆசிரியர்கள் , முதுகலைப்பட்டாதாரி ஆசிரியராக ஓர் நல்வாய்ப்பு!
2009 க்கு பிறகு பணியேற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு..முதுகலைப்பட்டாதாரி ஆசிரியர் தேர்வு நல்வாய்ப்பு
அடிப்படை ஊதியம் 36900
மொத்த ஊதியம் ₹45000
2009 க்கு முன் பணியேற்றவர்கள் தேர்ச்சி பெற்றால்..
தற்போது அவர்கள் வாங்கும் சம்பளத்தை விட சுமார் 15000 குறைவாக பெறுவார்கள்...
தொடக்க கல்வியை விட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு... செல்ல விரும்பினால் தாரளாமாக எழுதலாம்
2009 க்கு பின் பணியேற்றவர்களில் அதிகம்...
*கணிதம்ஆங்கிலம்* மட்டுமே பயின்றுள்னர்...
போட்டி அதிகமாக இருக்கும்
*இடைநிலை ஆசிர்யர்களுக்கு ஒதுக்கீட்டு இடங்கள்*
*கணிதம் 28
ஆங்கிலம் 23
தமிழ் 32
வரலாறு 10
வேதியியல் 36
இயற்பியல் 21
தாவரவியல் 15
வணிகவியல் 10
பொருளியல் 21*
இந்த காலிப்பணியிடம் இல்லாமல் பொதுப்போட்டியிலும் நீங்கள் வெற்றி பெறலாம்.
கணினி ஆசிரியர் தேர்வில் குளறுபடிகளுக்குக் காரணம் என்ன?ஆசிரியர் வாரிய தலைவர் விளக்கம்
கணினி ஆசிரியர் தேர்வில் ஒரு சில இடங்களில் நடந்த குளறுபடிகளுக்குக் காரணம் என்ன என்பது குறித்து ஆசிரியர்தேர்வு வாரியத்தின் தலைவர் வெங்கடேஷ் விளக்கமளித்துள்ளார்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கணினி பாடப்பிரிவுக்கு 15 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக முதுநிலை ஆசிரியர்பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 30 ஆயிரத்து 833 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 25,500பேர் தேர்வில் பங்கேற்றனர். பல இடங்களில், தேர்வர்களுக்கு கணினியைஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், போதிய கணினிகள் இல்லாததால், சில இடங்களில் தேர்வர்கள் வெளியேற்றப்பட்டனர். இதுதவிர சர்வரில் பிரச்னை, தேர்வு மைய முகவரியை சரியாக அச்சிடாதது என பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. இந்த நிலையில், சில தேர்வு மையங்களில் தேர்வர்கள் கூட்டாக சேர்ந்து விவாதித்தும், செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு விடைகளைக் கேட்டு எழுதியாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட விடியோக்கள் தேர்வர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் தேர்வர்கள் காப்பியடிப்பதுபோன்றும், தேர்வு மையத்தில் கூச்சல் குழப்பமாக இருப்பது போன்றும் விடியோ கட்செவி அஞ்சலில் பரவியது. இதைக் கண்டித்து சில மாவட்டங்களில் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தேர்வெழுத முடியாதவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என்றும், தேர்வை முடிக்க முடியாதவர்களுக்கு அதை மீண்டும் எழுத வாய்ப்பு வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
சர்ச்சை விடியோவுக்கு விளக்கம்:
இந்த நிலையில், கணினி ஆசிரியர் தேர்வு விவகாரம் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெங்கடேஷ் திங்கள்கிழமை விளக்கமளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அகில இந்திய அளவில் இணையவழியில் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்வு நாளன்று எதிர்பாராத விதமாக சரிசெய்ய இயலாத அளவில் கணினி தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படும் நிலையில் அந்தத் தேர்வு மையத்துக்கு மட்டும் தேர்வினை ரத்து செய்து மறு தேர்வு நடத்துவதற்குஅறிவிப்பு வெளியிடப்படுவது பொதுவாகவேவழக்கத்தில் உள்ளது. இதற்கு முன்னர் தேசிய அளவிலும் தமிழகத்திலும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்பட்டுள்ளன.
கணினி ஆசிரியர் தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. சர்வர் பிரச்னை காரணமாக தேர்வு ரத்தான பின்புதிருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரி மையத்தில் விடியோ எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிந்த பின்பு, தேர்வு மையத்திற்குள் செல்லிடப்பேசி அனுமதிக்கப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து விசாரிக்கப்படும் என்றார் அவர். 1,221 பேருக்கு ஜூன் 27-இல் மறுதேர்வுதொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட மூன்று மையங்களில் மட்டும் வரும் 27-ஆம் தேதி கணினி ஆசிரியர் தேர்வுக்கு மறுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெங்கடேஷ் கூறியது: தேர்வு நடைபெற்ற 119 மையங்களில் திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரி, கும்பகோணம் அன்னை பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சி கொங்குநாடு பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய 3 மையங்களில் மட்டுமே தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக தேர்வு நிறுத்திவைக்கப்பட்டது.
இந்த மூன்று மையங்களில் தேர்வு எழுதிய1, 221 பேருக்கு மட்டும் வரும் 27-ஆம் தேதி வியாழக்கிழமை மறுதேர்வு நடைபெறும். தேர்வு மையம் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட நுழைவுச்சீட்டு ஆகிய விவரங்கள் தேர்வர்களின் மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார். இதையடுத்து கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரி மையத்தில் 944 பேர், அன்னை பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில்118 பேர், கொங்குநாடு பொறியியல் கல்லூரி மையத்தில் 159 பேர் என 1,221பேர் மீண்டும் தேர்வெழுதவுள்ளனர்.
Monday, June 24, 2019
Flash News - ஜூலை 2-ம் தேதி சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை
தமிழக சட்டப்பேரவை வரும் 28-ம் தேதி தொடங்கி அடுத்தமாதம் 30-ம் தேதி வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவை வரும் 28-ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எத்தனை நாட்கள் அவையை நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுக்க சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக்கூட்டம் நடந்தது.கூட்டத்தின் முடிவில் அடுத்த மாதம் ஜுலை 30 வரை அவை நடக்கும் என்று முடிவெடுக்கப்பட்டது. கூட்டம் தொடரின் முதல் நாளில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்திவைக்கப்பட்டு மறுநாள் முதல் அவை அலுவல்கள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கி ஜூலை 30 வரை நடைபெறும் - சபாநாயகர் தனபால் அறிவிப்பு
* மொத்தம் 23 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்
> அனைத்து நாட்களும் கேள்வி, பதில் உண்டு - சபாநாயகர் அறிவிப்பு
* சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் - தனபால்
* ஜூன் 28-ம் தேதி மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு மற்றும் தீர்மானம் நிறைவேற்றம்
> 29, 30 அரசு விடுமுறை - சபாநாயகர்
* ஜூலை 1-ம் தேதி வனம், சுற்றுச்சூழல் துறை, 2ம் தேதி பள்ளிக்கல்வி, விளையாட்டுத்துறை - சபாநாயகர்
Sunday, June 23, 2019
Friday, June 21, 2019
Wednesday, June 19, 2019
Monday, June 17, 2019
IBPS RRB VIII Recruitment 2019 – Apply Online for 8400 Posts
Name of the Post : IBPS CRP RRB VIII Online Form 2019
Post Date : 15-06-2019
Total Vacancy : 8400
Brief Information: Institute of Banking Personnel Selection (IBPS) has published notification for the recruitment of CRP RRB VIII (Officer Scale I, II, III & Office Asst) vacancies. Those Candidates who are interested in the vacancy details & completed all eligibility criteria can read the Notification & Apply Online.
Institute of Banking Personnel Selection (IBPS) has published notification for the recruitment of CRP RRB VIII (Officer Scale I, II, III & Office Asst) vacancies. Those Candidates who are interested in the vacancy details & completed all eligibility criteria can read the Notification & Apply Online.
Institute of Banking Personnel Selection (IBPS)
CRP RRB VIII Exam 2019
| |||
Application Fee
| |||
Important Dates
| |||
Age Limit (as on 01-06-2019)
| |||
Experience
| |||
Vacancy Details | |||
Sl No | Post Name | Total | Qualification |
1 | Office Assistant (Multipurpose) | 3688 | Bachelors Degree |
2 | Officer Scale-I | 3381 | |
3 | Officer Scale-II (Agriculture Officer) | 106 | |
4 | Officer Scale-II (Marketing Officer) | 45 | MBA (Marketing) |
5 | Officer Scale-II (Treasury Manager) | 11 | CA/ MBA |
6 | Officer Scale-II (Law) | 19 | Degree (Law) |
7 | Officer Scale-II (CA) | 24 | CA |
8 | Officer Scale-II (IT) | 76 | Bachelors Degree |
9 | Officer Scale-II (General Banking Officer) | 893 | |
10 | Officer Scale-III | 157 | |
Interested Candidates Can Read the Full Notification Before Apply Online | |||
Important Links | |||
Apply Online | Available on 18-06-2019 | ||
Notification | Click Here | ||
Official Website | Click here |
எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்கு ‘நெக்ஸ்ட்’ புதிய தகுதி தேர்வு கட்டாயம்: அடுத்த ஆண்டுமுதல் அமல்படுத்துகிறது மத்திய அரசு ( தேர்ச்சி பெற்றால்தான் டாக்டராக பணியாற்ற முடியும் )
எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்கு புதிய தகுதித் தேர்வை அடுத்த ஆண்டு முதல் மத்திய அரசு அமல் படுத்த உள்ளது.இந்தியாவில் இளநிலை மருத் துவப் பட்டப்படிப்பான எம்பிபிஎஸ் ஐந்தரை ஆண்டுகள் கொண்டது. கல்லூரியில் நான்கரை ஆண்டுகள் படித்த பின்னர், ஓராண்டு பயிற்சி டாக்டராக பணியாற்றுகின்றனர்.
இதையடுத்து, மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து டாக்டராக பணியாற்றுகின்றனர். இந்நிலையில், எம்பிபிஎஸ் முடித்த வர்கள் National Exit Test (NEXT) என்ற ‘நெக்ஸ்ட்’ தகுதித் தேர்வை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு இந்த தேர்வை கொண்டு வர முயற்சி செய்த போது, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதனால், அப்போது இந்த தேர்வை மத்திய அரசால் கொண்டுவர முடியவில்லை. தற்போது வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த தேர்வுக்கான மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தின் செயலாளர் டாக்டர் கதிர்வேல், அரசு சாரா சேவை மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் கூறிய தாவது: எம்பிபிஎஸ் முடித்தவர் களுக்கு நெக்ஸ்ட் தேர்வை இந்த ஆண்டு மத்தியஅரசு கொண்டுவர உள்ளது. இந்த ஆண்டு எம்பிபிஎஸ் முடித்தவர்கள் நீட் தேர்வு எழுதி மருத்துவப் பட்டமேற்படிப்புகளில் சேர்ந்துவிட்டதால், அடுத்த ஆண்டு முதல் தான் இந்த தேர்வு நடை முறைப்படுத்தப்படும்.
அதேநேரத்தில் எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு கட்டாயமாக்கப்படுவதால், மருத்துவப் பட்டமேற்படிப்பு களுக்கு அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு இருக்குமா? இல்லையா? அல்லது நெக்ஸ்ட் தேர்வின் மதிப் பெண் நீட் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுமா என்பது இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை. நெக்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து டாக்டராக பணி யாற்ற முடியும். 2017-ம் ஆண்டு இந்த தேர்வை மத்திய அரசு கொண்டுவர முயற்சி செய்த போது நெக்ஸ்ட் தேர்வு, எக்ஸிட் தேர்வு என்று சொல்லப்பட்டது. தற் போது அதே பெயரில் கொண்டு வரப்படுகிறதா அல்லது வேறு பெயர் வைக்கப்படுமா என்று தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வெளிநாடுகளில் மருத்துவம்
இந்தியாவில் எம்பிபிஎஸ் படிப் பவர்களுக்கு மட்டுமின்றி, வெளி நாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியா வருபவர்களுக்கு எக்ஸிட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுபற்றி லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனத்தின் இயக் குநர் முகமது கனியிடம் கேட்ட போது, “பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மருத் துவம் படித்துவிட்டு இந்தியா வருப வர்கள் இந்திய மருத்துவக் கவுன் சில் நடத்தும் எப்எம்ஜிஇ (FMGE) என்ற தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்னரே, மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து டாக்டராக பணியாற்ற முடியும்.பின்னர், நீட் தேர்வு எழுதி மருத்துவப் பட்டமேற்படிப்புகள் படிக்க முடியும் என்ற நடைமுறை உள்ளது. நெக்ஸ்ட் தேர்வு நடைமுறைப்படுத்தப்படுவதால், வெளிநாடுகளில்மருத்துவம் படித்துவிட்டு வருபவர்கள் இனிமேல் எப்எம்ஜிஇ தேர்வை எழுதத் தேவையில்லை. நெக்ஸ்ட் தேர்வை மட்டும் எழுதிதேர்ச்சி பெற வேண்டும்” என்றார்.
Saturday, June 15, 2019
Friday, June 14, 2019
பயோமெட்ரிக் கருவியில் வருகை பதிவு செய்ய ஆசிரியர்களுக்கு கூடுதல் நேரம்: அதிகாரிகள் தகவல்
தமிழகத்தில் உள்ள அரசு, நிதியுதவி பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப்பதிவை பயோமெட்ரிக் கருவியில் பதிவு செய்ய கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகையை உறுதிசெய்ய பயோமெட்ரிக் முறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது.
இதற்காக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் வருகைப்பதிவு, பயோமெட்ரிக் கருவியில் பதிவேற்றம் செய்வதற்கான கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 468 பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் 8,032 பேரின் விவரங்களை பயோமெட்ரிக் கருவிகளில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்தது.
பள்ளி வேலை நாட்களில் காலை 9.30 மணி, மாலையில் பள்ளி முடியும் நேரத்திலும் ஆசிரியர்கள் தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்வது அவசியம். அதேபோல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலக பணியாளர்கள், வட்டார கல்வி அலுவலகம், வட்டார மைய கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் கடந்த 3ம் தேதி திறக்கப்பட்டது.
ஒரே நேரத்தில் பயோமெட்ரிக் கருவியில் வருகைப்பதிவு செய்ய காலதாமதம் ஏற்படுகிறது என்பதால், வருகைப்பதிவு செய்ய கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, காலை 9.30 மணிக்கு பதிலாக 9.35 மணிக்குள் ஆசிரியர்கள் வருகைப்பதிவு செய்ய வேண்டும். மாலை 4.30 மணிக்கு பதிலாக மாலை 4.35 மணிக்கு பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலகம், வட்டார மைய கல்வி அலுவலகங்களில் ஆசிரியரல்லாத பணியாளர்கள் காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்... பள்ளிக்கல்வித் துறை அதிரடி
பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் 60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று விகிதாச்சார முறையை மாற்றி பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு கல்வித்தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால், இந்த கல்வியாண்டில் 2 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள். மாணவர்களின் கல்விக்கென தனி தொலைக்காட்சி , மொபைல் ஆப் மூலம் மின்னனு நூலக சேவை உள்ளிட்ட ஏராளமான அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அதே நேரம், புதிய பாடத் திட்டங்கள் தொடங்கி கற்பித்தல் முறைகளிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு படிக்கின்ற மாணவர்கள்- ஆசிரியர் விகிதாச்சார முறை மாற்றப்பட்டுள்ளது. இதுவரையில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் நிர்ணயிக்கப்பட்டு கற்பித்தல் நடைபெற்றது. இப்போது 60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையின் மூலம் அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் இதுபற்றி சுற்றறிக்கை அனுப்பப்பட்டு பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பிளஸ்-1 வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. புதிய வகுப்புகளில் மாணவர்கள் புதிய விகிதாச்சார அடிப்படையில் கற்பித்தல் முறையை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது தொடக்கப் பள்ளிகளுக்கு (1 முதல் 5) 1:30 என்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு (6 முதல்8) 1:35 என்றும் உயர் வகுப்புகளுக்கு (8 முதல்10) 1: 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாத ஊதியத்தை பெறாத 8,462 ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், கடந்த 2011ம் ஆண்டு 1,590 முதுநிலை ஆசிரியர்கள், 6,872 பட்டதாரி ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Thursday, June 13, 2019
Wednesday, June 12, 2019
Sunday, June 9, 2019
Friday, June 7, 2019
கோயமுத்தூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சு பணிகள் 2019
கோயமுத்தூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சு பணிகள், தமிழ்நாடு அடிப்படை பணிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 83
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: நகல் படிப்பவர், நகல் பரிசோதகர்
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர்
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: காவலர், இரவுக்காவலர், மசால்ச்சி மற்றும் இரவுக்காவலர்
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: துப்புரவுப் பணியாளர்
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: பெருக்குபவர்
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: மசால்ச்சி
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: அனைத்து பணிகளுக்கும் 01.07.2019 தேதியின்படி 18 வயது நிறைவடைந்தவராக 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி முதன்மை மாவட்ட நீதிமன்றம், கோயமுத்தூர் 641018
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய
https://districts.ecourts.gov.in/sites/default/files/NOTIFICATION%20NO%2001%20of%202019_1.pdf
என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.06.2019
Tuesday, June 4, 2019
ஏர் இந்தியா நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்... 12க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 81 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 81
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Manager - Flight Dispatch Grade- M-4 - 02
பணி: Manager [OCC] Grade M-4 - 01
பணி: Dy. Manager - [OCC] Grade M-3 - 05
பணி: Sr. Officer- Flight Dispatch Grade - M-2 - 01
பணி: Officer - [OCC] Grade - M-1 - 01
பணி: Sr. Assistant - Data Processing Grade - S-3 - 01
பணி: Co-ordinator - 01
பணி: Assistant - Technical Library Grade - S-2 - 01
பணி: Chief of Commercial Grade- M-8 - 01
பணி: Chief ManagerScheduling & Network Planning - Grade - M-6 - 01
பணி: Officer - Commercial Grade M-1 - 01
பணி: Assistant - Commercial Grade S-2 - 08
பணி: Deputy Manager - Airport Services- Grade - M-3 - 01
பணி: Deputy Manager - Airport Services - Grade - M-3 - 01
பணி: Senior Officer - Catering Services - Grade-M-2 - 01
பணி: Senior Assistant - Airport Services - Grade S- 3 - 06
பணி: Chief Of IT Grade- M-8 - 01
பணி: Manager - Stores Grade - M-4 - 02
பணி: Senior Officer - Stores Grade - M-2 - 05
பணி: Officer - Stores Grade - M-1 - 01
பணி: Storekeeper Grade -S-2 - 13
பணி: Assistant - Stores Grade -S-2 - 10
பணி: Deputy Chief of Engineering - 01
பணி: Deputy Quality Manager - 01
பணி: Deputy CAM - 01
பணி: Technical Assistant - 09
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி, பொறியியல் துறையில் பிஇ, பி.டெக், எம்பிஏ, எம்சிஏ, டிப்ளமோ தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை Ar India Express Limited என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவப் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.airindiaexpress.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் டி.டி மற்றும் சுயசான்று செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Chief of HR, Air India Express Limited, Airlines House, Durbar Hall Road, Near Gandhi Square, Kotchi - 682 016.
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.airindiaexpress.in/upload/Careers%20310519.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 1 2.06.2019
மொத்த காலியிடங்கள்: 81
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Manager - Flight Dispatch Grade- M-4 - 02
பணி: Manager [OCC] Grade M-4 - 01
பணி: Dy. Manager - [OCC] Grade M-3 - 05
பணி: Sr. Officer- Flight Dispatch Grade - M-2 - 01
பணி: Officer - [OCC] Grade - M-1 - 01
பணி: Sr. Assistant - Data Processing Grade - S-3 - 01
பணி: Co-ordinator - 01
பணி: Assistant - Technical Library Grade - S-2 - 01
பணி: Chief of Commercial Grade- M-8 - 01
பணி: Chief ManagerScheduling & Network Planning - Grade - M-6 - 01
பணி: Officer - Commercial Grade M-1 - 01
பணி: Assistant - Commercial Grade S-2 - 08
பணி: Deputy Manager - Airport Services- Grade - M-3 - 01
பணி: Deputy Manager - Airport Services - Grade - M-3 - 01
பணி: Senior Officer - Catering Services - Grade-M-2 - 01
பணி: Senior Assistant - Airport Services - Grade S- 3 - 06
பணி: Chief Of IT Grade- M-8 - 01
பணி: Manager - Stores Grade - M-4 - 02
பணி: Senior Officer - Stores Grade - M-2 - 05
பணி: Officer - Stores Grade - M-1 - 01
பணி: Storekeeper Grade -S-2 - 13
பணி: Assistant - Stores Grade -S-2 - 10
பணி: Deputy Chief of Engineering - 01
பணி: Deputy Quality Manager - 01
பணி: Deputy CAM - 01
பணி: Technical Assistant - 09
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி, பொறியியல் துறையில் பிஇ, பி.டெக், எம்பிஏ, எம்சிஏ, டிப்ளமோ தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை Ar India Express Limited என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவப் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.airindiaexpress.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் டி.டி மற்றும் சுயசான்று செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Chief of HR, Air India Express Limited, Airlines House, Durbar Hall Road, Near Gandhi Square, Kotchi - 682 016.
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.airindiaexpress.in/upload/Careers%20310519.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 1 2.06.2019
ஆளுநர் மாளிகையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
சென்னையில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் (ராஜ் பவன்) காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Personal Clerk
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, டிசி, பிசி, பிசிஎம் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்சபட்ச வயதுவரம்பு கிடையாது.
தகுதி: பிஏ, பி.எஸ்சி, பி.காம் இளங்கலை படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கில் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Driver
காலியிடங்கள்: 03
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்த்தியுடன் இலகுரக வாகனங்களின் ஓட்டுநர் உரிமம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Office Assistant
காலியிடங்கள்: 02
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 ஆன்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களைப் பற்றிய முழுவிபரம் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Deputy Secretary to Governor & Comptroller, Governor's Secretariat, Governor's Household Office, Raj Bhavan, Chennai - 600 022
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.06.2019
பணி: Personal Clerk
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, டிசி, பிசி, பிசிஎம் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்சபட்ச வயதுவரம்பு கிடையாது.
தகுதி: பிஏ, பி.எஸ்சி, பி.காம் இளங்கலை படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கில் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Driver
காலியிடங்கள்: 03
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்த்தியுடன் இலகுரக வாகனங்களின் ஓட்டுநர் உரிமம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Office Assistant
காலியிடங்கள்: 02
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 ஆன்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களைப் பற்றிய முழுவிபரம் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Deputy Secretary to Governor & Comptroller, Governor's Secretariat, Governor's Household Office, Raj Bhavan, Chennai - 600 022
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.06.2019
TNTET' தேர்வு 2019 - ஹால் டிக்கெட்டில் சான்றொப்பம் பெற உத்தரவு
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டில் அரசு அதிகாரியின் சான்றொப்பம் பெற்று வர வேண்டும்,'' என தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூன் 8 முதல் தாள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூன் 9ல் இரண்டாம் தாள் தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வு நுழைவு சீட்டினை இணையதளத்தில் 'டவுண்லோடு' செய்ய வேண்டும். ஆனால், பெரும்பாலானோர் ஆன்லைன் விண்ணப்பத்தில் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டிய இடத்தில், கையெழுத்தை மட்டுமே பதிவேற்றியுள்ளனர். எனவே இவர்களது ஹால் டிக்கெட்டிலும் புகைப்படம் இருக்காது.
புகைப்படம் இன்றி ஹால்டிக்கெட் பதிவிறக்கம் ஆகியுள்ளவர்கள் ஹால்டிக்கெட்டில் புகைப்படம் ஒட்டி, அதில் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியிடம் சான்றொப்பம் பெற வேண்டும். மேலும் கூடுதலாக ஒரு புகைப்படத்தை தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து, வருகை பதிவேட்டில் ஒட்டி, கையெழுத்திட வேண்டும்.
தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஆதார், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட தமது புகைப்படத்துடன் கூடிய ஆதாரங்களை காண்பிக்க வேண்டும் என ஆசிரியர் தகுதி தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளார்.
Monday, June 3, 2019
ஆசிரியர்களை தேர்வு செய்வது, இடமாற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் மாற்றம் - புதிய கல்விக் கொள்கை
ஆசிரியர்களை தேர்வு செய்வது, இடமாற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என புதிய கல்வி கொள்கை கூறுகிறது.
இதன்படி கிராமப்புற பள்ளிகளில் பணிக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கு அருகிலேயே முறையான தங்கும் வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும், இதற்காக ஊக்கத்தொகை வழங்குவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் ஆசிரியர்கள் இருக்கும் பள்ளிகளில் இருந்து அவர்களை இடமாற்றம் செய்வது கூடாது என்கிறது புதிய கல்வி கொள்கை.
அடிக்கடி இடமாற்றத்தால் மாணவர் ஆசிரியர் இடையிலான நீண்ட கால உறவு கெடுவதோடு கற்றல் போக்கிலும் மாற்றம் ஏற்பட்டு மாணவரின் வளர்ச்சி பாதிக்கப்படுவதால் பணியிடமாற்றங்களை நிறுத்த வேண்டும் எனக் கூறுகிறது
குடும்பச் சூழல், பணிமூப்பு உள்ளிட்ட அரிதான காரணங்களுக்காக மட்டுமே பணியிட மாற்றம் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான தகுதித் தேர்வு முறையை இன்னும் வலுவானதாக மாற்ற வேண்டும், தேர்வு தவிர ஆசிரியர்கள் வகுப்பறையில் டெமோ செய்து காட்டுவது, நேர்காணலில் பங்கேற்பது போன்றவற்றையும் சேர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
வரும் காலங்களில் 4 ஆண்டுகால இன்டகிரேடட் பிஎட் படிப்பே ஆசிரியர் பணிக்காக அடிப்படை தகுதி வாய்ந்த படிப்பாக மாறும் என்றும் அந்த கொள்கை கூறுகிறது.
அதேவேளையில் பணியில் இருக்கும் ஆசிரியர்களை, தேர்தல் பணி உள்ளிட்ட கற்றலுடன் தொடர்பில்லாத பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என கல்வி கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமில்லாத, தன்னிச்சையான ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் விரைவில் மூடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தி கட்டாயம் அல்ல - வரைவு அறிக்கையில் திருத்தம்
தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் அல்ல என்று வரைவு அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 6-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் குழு புதிய கல்விக்கொள்கை அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது.
இந்தற்கு தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இது வரைவு அறிக்கை மட்டுமே என்று மத்திய அரசு கூறினாலும், தொடர்ந்து எதிர்ப்பு எழுந்துகொண்டே இருந்தது.
இந்நிலையில், வரைவு அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. அதில், இந்தி கட்டாயமல்ல, விருப்பப் பாடமாக இருக்கும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்தி மொழிப்பாடம் கட்டாயமில்லை.
புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் திருத்தம் செய்தது மத்திய அரசு.
அங்கன்வாடிகளில் பணியை தொடங்கும் ஆசிரியர்கள்: மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த தொடக்கக் கல்வித் துறை உத்தரவு
உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து அங்கன்வாடிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் இன்று பணியை தொடங்கி, மாணவர்சேர்க்கையை துரிதப்படுத்த தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக மழலையர் வகுப்புகள் தொடங்க அரசு முடிவு செய்தது. அதன்படி மாநிலம் முழுவதும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் கடந்த கல்வியாண்டில் தொடங்கப்பட்டன. அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கியதால் பெற்றோரும் ஆர்வத்துடன் குழந்தைகளை சேர்த்தனர்.உயர் நீதிமன்றத்தில் வழக்குஇந்த மழலையர் வகுப்புகளுக்கு பாடம் நடத்த தொடக்கப் பள்ளிகளில் உபரியாக இருந்த ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆசிரியர்கள் பணியிடம் மாறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், வகுப்புகள் நடைபெறுவது தடைபட்டு மையங்களில் வழக்கம்போல குழந்தைகளை பராமரிக்கும் பணிகளே தொடர்ந்தன.இதனால் பெற்றோர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் விசாரணையின் முடிவில் வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனால் மழலையர் வகுப்புகளில் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பள்ளி திறக்கும் நாளில் பணியில் சேர தொடக்கக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படிமாநிலம் முழுவதும் கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள்இன்று திறக்கப்படுகின்றன. இயக்குநரகம் சுற்றறிக்கைஇதையடுத்து மழலையர் வகுப்புகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பள்ளியில் இன்று பணியில் சேர இருக்கின்றனர். அதன்படி இடமாற்றம் செய்யப்பட்ட எல்லாஆசிரியர்களும் பணியில் சேருவதை உறுதி செய்து, மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்கக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், ‘மழலையர் வகுப்புகளில் சேர்க்கை நடைபெறுவது குறித்து விளம்பர பலகை மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வட்டாரக் கல்வி அதிகாரிகள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட மழலையர் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை மற்றும் அதன்செயல்பாடு குறித்து வாரம்தோறும் நேரடியாக ஆய்வு செய்து அறிக்கைதர வேண்டும்’’என்று கூறப்பட் டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)