வருமான வரித் தாக்கல் செய்ய பான் அட்டை இல்லை என்றாலும், அதற்குப் பதிலாக ஆதார் அட்டையைப் பயன்படுத்தலாம் என்று மத்திய நிதித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2019 - 2020ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டிருக்கும் சில முக்கிய விஷயங்கள்..
பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பே வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்படுமா என்பதே.
அதற்கான விடை..
வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லாமல், ஏற்கனவே உள்ளபடி, ரூ.5 லட்சம் வரை வருவாய் பெறுவோருக்கு வரி செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படும் நிலையே தொடருகிறது.
மேலும், ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணமாக வங்கிக் கணக்கில் இருந்து எடுத்தால் வரி பிடித்தம் (டீடிஎஸ்) 2% ஆக இருக்கும்.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.
5 லட்சத்துக்குக் கீழ் வருவாய் பெறுவோருக்கு வரி விலக்கு அளிக்கப்படுவது தொடர்கிறது.
அதே சமயம், ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு 3% கூடுதல் வரி (சர்சார்ஜ்) விதிக்கப்படுகிறது.
ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 7% கூடுதல் வரி (சர்சார்ஜ் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment