திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Saturday, November 16, 2019

5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்: சேலம் முன்னாள் ஆட்சியர் ரோஹினி உயர் கல்வித்துறைக்கு மாற்றம்

தமிழகத்தில் இரண்டாவது நாளாக 5 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். 5 புதிய மாவட்டத்துக்கு ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் சேலம் ஆணையர் ரோஹினி டெல்லி அயல்பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மாற்றப்பட்ட அதிகாரிகள், முன்பு வகித்த பதவியுடன் விபரம் வருமாறு:

1.  கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கத்துக்கான சிறப்பு அலுவலர் கிரன் குர்ராலா 
    அம்மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. தென்காசி மாவட்டம் உருவாக்கத்துக்கான சிறப்பு அலுவலர் அருண் சுந்தர் தயாளன் 
    தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கத்துக்கான சிறப்பு அலுவலர் ஜான் லூயிஸ் 
    செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கத்துக்கான சிறப்பு அலுவலர் எம்.பி.சிவனருள்      
    திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கத்துக்கான சிறப்பு அலுவலர் திவ்யதர்ஷினி 
    ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தவிர தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழக பதிவாளர் ரோஹினி டெல்லி உயர் கல்வித்துறை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, November 12, 2019

TNPSC GROUP IV RESULT ANNOUNCED

தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வசதியாக அரையாண்டு தேர்வை டிசம்பர் 23ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!


தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவி காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதையடுத்து வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதன்படி உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவுக்காக தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. மேலும் வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. ஊரக பகுதிகளில் வாக்கு பதிவுக்கு 5 வண்ண வாக்குசீட்டு பயன்படுத்தப்படும் என்றும், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைத்தவிர்த்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களில் செலவு கணக்கை தாக்கல் செய்வது, கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக கடந்த வாரம் மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை மூன்று கட்டங்களாக நடத்துவது தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்பட்டது. மேலும் உள்ளாட்சி தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசுக்கு மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாது, தேர்தல் நடத்த வசதியாக அரையாண்டு தேர்வை டிசம்பர் 23ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல்வர் பழனிசாமி தலைமையில் மாநில தேர்தல் ஆணையருடன் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Monday, November 11, 2019

vazhaipoo kootu:கருப்பையைப் பலமாக்க உதவும் வாழைப்பூ கூட்டு

 பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படைந்துவிடுவது அதிகரித்துவிட்டது. சீரான மாதவிடாய், இயல்பான கருத்தரிப்பு, உரிய காலத்தில் மெனோபாஸ் என்று வாழ்க்கையை அழகாக கடக்க வாழைப்பூவை அதிகமாக கொடுங்கள்.

ஹைலைட்ஸ்

  • வாழைப்பூவை ஆய்ந்து புளித்த மோர் அல்லது அரிசி களைந்த நீரில் நறுக்கி அலசினால் சமைத்த பிறகு கருக்காமல் இருக்கும்.

  • கருப்பை பிரச்சனைகளை நீக்கி கருப்பையை பலப்படுத்த உதவும் வாழைப்பூ தாய்மைப்பேறை வழங்குவதிலும் துணைபுரிகிறது.

அதிகப்படியான சளியா மிளகுக்குழம்பு எடுத்துகொள்ளலாம். வறட்டு இருமலா தேனுடன் கலந்த இஞ்சி கஷாயம் எடுத்து கொள்ளலாம். வயிறுவலி படுத்துகிறதா ஓமம் கலந்த நீரை எடுத்துகொள்ளலாம், கை, கால் குடைச்சலா மருந்துக்குழம்பு எடுத்துகொள்ளலாம். இப்படி நோய்க்கேற்ற உணவை எடுத்துகொண்டு வாழ்ந்த நம் முன்னோர்களை எந்தவிதமான நோயும் அண்டவில்லை.


சளிக்கு மாத்திரை, இருமலுக்கு மாத்திரை, விழுந்தால் மாத்திரை என்று தொட்டதெற்கெல்லாம் மாத்திரைகளுக்கு நாம் மாறிவிட்டோம். ஆனாலும்ஆரோக்கியமான ஆரோக்கியம் இங்கு நமக்கு கேள்விக்குறியாகவே இருக்கிறது.

நோய் இல்லாத மனிதர்கள் இல்லைதான். ஆனால் அதை உண்ணும் உணவில் விரட்டியடித்தவர்கள் நம் முன்னோர்கள். அவர்கள் உட்கொண்ட உணவின் வாயிலாகவே தலைவலி முதல் குழந்தையின்மை பிரச்சனை வரை அனைத்தையுமே சரிசெய்துகொண்டார்கள்.நோயில்லாமல் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.

இன்று பெண்களும் ஆரோக்கிய பிரச்சனையில் குறிப்பிட்ட சதவீதம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக பெண் குழந் தைகள் விரைவில் பூப்படைந்துவிடுகிறார்கள். அதைத் தொடர்ந்து ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக உதிர போக்கு, நீண்ட நாள்கள் உதிர போக்கு, பிசிஓடி பிரச்சனைகள, கரு முட்டை வளர்ச்சி என்று அத்தனை பிரச்சனைகளையும் குறிப்பிட்ட சதவீத பெண்கள் சந்தித்தும் வருகிறார்கள்.

சிறுவயது முதலே ஆரோக்கியமான உணவை எடுத்துகொள்பவர்கள் நிச்சயம் ஆரோக்கியமான வாழ்வையும், உரிய நேரத் தில் தாய்மையையும் பெற்று வந்தார்கள். இன்றைய காலத்திலும் அத்தகைய உணவை சீராக எடுத்துகொள்பவர்கள் உண்டு. பெண்கள் தாய்மை அடைவதில் கருப்பையை செவ்வனே சிறப்பாக வைத்திருக்கவும் அதை செயல்படவைக்கவும் துணைபுரிவதில் முக்கியமானது வாழைப்பூ. இதை மருத்துவர்களும் ஒப்புகொண்டுள்ளார்கள்.

அதிக ஆரோக்கியத்தைக் கொடுக்கும் கருப்பு உளுந்தங்களியைச் செய்யலாமா?

வாழைப்பூ சாப்பிட கசப்பான உணவும் அல்ல. சற்றே துவர்ப்பு இருந்தாலும் அருமையான மருத்துவகுணங்களைக் கொண்ட ருசியான உணவு பொருளும் கூட. வாழைப்பூ கூட்டை வாரம் ஒருமுறை எடுத்துகொண்டால் கருப்பை பிரச்சனை கள் படிப்படியாக சீராகும். இவ்வளவு அற்புத குணமுள்ள வாழைப்பூ எளிதில் கிடைக்கும் விலை மலிவான பொருளும் கூட.

வாழைப்பூ கூட்டை எப்படிச் செய்வது என்று பார்க்கலாமா? பார்ப்பதோடு செய்தும் பாருங்கள்.

தேவையான பொருள்கள்
வாழைப்பூ -1
க.பருப்பு, து.பருப்பு-தலா 1 சிறிய கப்
சாம்பார் வெங்காயம் - அரை கப்
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
தேங்காய்த்துருவல்- கால் கப்
கல் உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள்- கால் டீஸ்பூன்
பெருங்காயம் - சிட்டிகை

தாளிக்க
கடுகு, சீரகம், வெந்தயம்- தலா 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை- தேவைக்கு
எண்ணெய்- தாளிக்க தேவையான அளவு

செய்முறை
குக்கரில் க.பருப்பு, து.பருப்பு சேர்த்து மூன்று விசில் விடவும். சாம்பார் வெங்காயத்தை நறுக்கி வைக்கவும். பச்சை மிள காயை நீள்வாக்கில் கீறி கொள்ளவும்.பச்சை மிளகாய் வேண்டாம் என்று நினைப்பவர்கள் வரமிளகாய் சேர்த்து தாளித்து கொட்டலாம்.

பருப்பு வெந்ததும் குக்கரை திறந்து நறுக்கிய வாழைப்பூ சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ் சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து மீண்டும் 5 விசில் வரை நன்றாக வேகவிடவும். அதிக நீர் விடாமல் ஒரு தம்ளர் நீர் விட்டா லும் போதும்.

உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிட்டு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், சீரகம் தாளித்து கறிவேப்பிலை சேர்த்து பெருங்காயம் போட்டு இறக்கவும். அருமையான சுவையில் வாழைப்பூ கூட்டு மணக்கும். ருசியும் கூடுதலாக இருக்கும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். வற்றல் குழம்பு வைத்து தொட்டுக்கொள்ளலாம். அருமையான சைட் டிஷ் இது.

இனிப்பு நிறைந்த வெல்ல பணியாரத்தை வீட்டிலேயே செய்து அசத்துங்கள்...

குறிப்பு

வாழைப்பூ- வாழைப்பூ மடலை பிரித்து ஒவ்வொரு பூவையும் ஆய்ந்து அதிலிருக்கும் நரம்புகளை நீக்கி கொள்ளவும். இதன் இருபுறமும் வெள்ளையாக இருக்கும் அழுத்தமான பகுதியை தொப்பை என்று அழைப்பார்கள். இது வேகாது என்று நீக்கி விடுபவர்கள் உண்டு. ஆனால் இதை நீக்காமல் நறுக்க வேண்டும்.

வாழைப்பூவை ஆய்ந்துகொள்வதற்கு முன்பு இரண்டு உள்ளங்கைகளிலும் எண்ணெய் தேய்த்துகொள்ள வேண்டும்.
வாழைப்பூ ஆய்ந்ததும் அதைப் பொடியாக நறுக்கி புளித்த மோர் அல்லது அரிசி களைந்த நீரில் போட்டு நன்றாக களைந்து எடுக்கவும். இப்படி களையும் போது வாழைப்பூவின் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும். வெறும் நீரில் அலசும் போது அவை கருமை நிறமாக மாற வாய்ப்புண்டு.

கொஞ்சம் மெனக்கெடல் வேலைதான் ஆனால் உடல் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு வாரம் தவறாமல் எடுத்துகொண் டால் நிச்சயம் கருப்பை பலப்படும். இது முன்னோர்களின் அனுபவமான மொழி கூட.

நெட் தேர்வு: தேர்வறை நுழைவுச் சீட்டு வெளியீடு ( தேர்வு நாள் 04.12.2019)


நெட் தேர்வு தேதியை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) அறிவித்துள்ளது. அதன்படி, டிசம்பா் 4-ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. அதையடுத்து, விண்ணப்பதாரா்களுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டுகளை என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது.

கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) தகுதி பெற்றிருப்பது கட்டாயம். இந்தத் தேர்வை என்.டி.ஏ. ஒவ்வோா் ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பா் மாதம் என இரண்டு முறை நடத்துகிறது. 

அண்மையில் டிசம்பா் மாதத் தேர்வு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்தத் தேர்வு டிசம்பா் 4-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவா்களுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டுகளை என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது.

Thursday, November 7, 2019

நவம்பர் 14 - செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டு குழந்தைகளுடன் பேசுங்ககள்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - பெற்றோர்கள், கல்வியாளர்கள் வரவேற்பு!


குழந்தைகள் தினமான நவம்பர் 14 ஆம் தேதியாவது செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டு ஒரு மணி நேரம் உங்களுடைய குழந்தைகளுடன் மனசுவிட்டு பேசுவதற்கு நேரத்தை செலவிடுங்கள் என்ற, பள்ளிக்கல்வி இயக்குநரின் அறிவுரை, பெற்றோர், கல்வியாளர்கள் மத்தியில், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இன்றைய தொழிற்நுட்ப வளர்ச்சி யுகத்தில், ஆறாம் விரலாய் மாறிவிட்ட, ஸ்மார்ட் செல்போனால், குடும்ப உறவுகளுக்கான நெருக்கம் குறைந்து கொண்டே வருகிறது.

சமூக ஊடகங்களில் நண்பர்களை தேடுவோர், வீட்டிலிருப்போருடனான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதற்கான நேரத்தை செலவிடுவதற்கு நேரம் ஒதுக்கப்படுவதில்லை. இதனால், நேரடியாக பாதிக்கப்படுவது குழந்தைகள் என்பதும் அவர்கள் மன அழுத்தத்துடன் இருப்பதாக பெருமாபாலான கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I - 2018-2019 - CV Press