திருக்குறள்:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
தமிழன்... டா !
Pages
title
Friday, February 7, 2020
Thursday, February 6, 2020
முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு தேதி அறிவிப்பு!!
பள்ளிக் கல்வி இயக்ககம்
பத்திரிக்கை செய்தி
பத்திரிக்கை செய்தி
அரசு , நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து பணிநாடுநர் பட்டியல் பெறப்பட்டது . அவர்களுக்கான பணி ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 9 - 2 - 2020 மற்றும் 10 - 2 - 2020 ஆகிய இரண்டு நாட்களில் அந்தந்த மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் கீழ்கண்ட அட்டவணைப்படி நடைபெறவுள்ளது .
பணிநாடுநர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வில் கலந்து கொண்டு உரிய பணியிட ஒதுக்கீடு ஆணை பெற்றுக் கொள்ள உரிய அத்தாட்சி சான்றுடன் வருகைப் புரியுமாறு கேட்டுக் கொள்ளப்டுகிறார்கள் .
Tuesday, February 4, 2020
குரூப்-2ஏ தேர்விலும் ஓடும் வாகனத்தில் விடைத்தாள் திருத்தம்: குரூப்-4 தேர்வு போலவே முறைகேடு!
குரூப்-4 தேர்வு விடைத்தாள்களை வாகனத்திலேயே திருத்தி மாற்றியதை போன்று, குரூப்-2ஏ தேர்வின்போதும் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2ஏ, குரூப்-4 ஆகிய தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக தினமும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 வழக்குகளை தனித்தனியாக பதிவு செய்துள்ளனர். இதில், குரூப்-2ஏ தேர்வு மோசடியில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. வழக்கு விசாரணையில் நாளுக்கு நாள் புதுப்புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
குரூப்-4 தேர்வு விடைத்தாள்கள் வாகனத்தில் திருத்தப்பட்டு மாற்றியதை போன்று குரூப்-2ஏ தேர்வின்போதும் பின்பற்றப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மையத்தில் எழுதப்பட்ட விடைத்தாளை சென்னைக்கு கொண்டு சென்ற போது, இடையில் வாகனத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. விடைத்தாளில் நீள மையால் எழுதப்பட்ட விடைத்தாளை இடைத்தரகர் ஜெய்குமார் தரப்பினர் கறுப்பு மையால் திருத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே குரூப்-2ஏ தேர்வு மோசடியில் கைது செய்யப்பட்ட சிவகாசி சித்தாண்டியின் சகோதரர் உள்பட அரசு ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம் ஏற்படுத்த அரசாணை வெளியீடு!
பள்ளிக் கல்வித் துறை - புதியதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி , தென்காசி , திருப்பத்துார் , இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய புதிய வருவாய் மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தல் - அதற்கான பணியிடங்கள் மற்றும் செலவினம் அனுமதித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி ,
1. விழுப்புரம் மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி வருவாய் மாவட்டம்
2.திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ள தென்காசி வருவாய் மாவட்டம்
3. வேலுார் மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை வருவாய் மாவட்டம் மற்றும்
4. காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு வருவாய் மாவட்டம்
ஆகிய 5 வருவாய் மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்து , அதன் கட்டுப்பாட்டில் கீழ்க்கண்டவாறு மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் செயல்பட அனுமதிக்குமாறும் , மேற்படி புதியதாக தோற்றுவிக்கப்படும் 5 புதிய முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு 92 புதிய பணியிடங்கள் மற்றும் புதிய முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கான தொடரும் மற்றும் தொடரா செலவினங்களுக்கு அனுமதி வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அரசைக் கோரியுள்ளார்.
பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை ஆய்வு செய்து , அதனை ஏற்று , மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி புதியதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி , தென்காசி , திருப்பத்தார் , இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு வருவாய் மாவட்டங்களில் புதிய முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்து அம்முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு கீழ்க்கண்டவாறு தொடரும் மற்றும் தொடரா செலவினங்களுக்கு ரூ . 4 , 67 , 78 , 784 / - க்கு ( ரூபாய் நான்கு கோடியே அறுபத்து ஏழு இலட்சத்து எழுபத்து எட்டாயிரத்து எழுநூற்று எண்பத்து நான்கு மட்டும் ) நிர்வாக ஒப்பளிப்பும் , 2019 - 2020ஆம் ஆண்டிற்கான தொடரும் மற்றும் தொடரா செலவினங்களுக்காக ரூ . 123 , 98 , 064 / - ( ரூபாய் ஒரு கோடியே இருபத்து மூன்று இலட்சத்து தொன்னூற்று எட்டாயிரத்து அறுபத்து நான்கு மட்டும் ) நிதி ஒப்பளிப்பும் வழங்கலாம் என அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது .
ஆணை :
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம் ஏற்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 5 முதன்மை கல்வி அலுவலர் உள்பட 92 புதிய பணியிடங்களை ஏற்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டில் அலுவலகம் உருவாகவுள்ளது.

Subscribe to:
Posts (Atom)