குரூப்-4 தேர்வு விடைத்தாள்களை வாகனத்திலேயே திருத்தி மாற்றியதை போன்று, குரூப்-2ஏ தேர்வின்போதும் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2ஏ, குரூப்-4 ஆகிய தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக தினமும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 வழக்குகளை தனித்தனியாக பதிவு செய்துள்ளனர். இதில், குரூப்-2ஏ தேர்வு மோசடியில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. வழக்கு விசாரணையில் நாளுக்கு நாள் புதுப்புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
குரூப்-4 தேர்வு விடைத்தாள்கள் வாகனத்தில் திருத்தப்பட்டு மாற்றியதை போன்று குரூப்-2ஏ தேர்வின்போதும் பின்பற்றப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மையத்தில் எழுதப்பட்ட விடைத்தாளை சென்னைக்கு கொண்டு சென்ற போது, இடையில் வாகனத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. விடைத்தாளில் நீள மையால் எழுதப்பட்ட விடைத்தாளை இடைத்தரகர் ஜெய்குமார் தரப்பினர் கறுப்பு மையால் திருத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே குரூப்-2ஏ தேர்வு மோசடியில் கைது செய்யப்பட்ட சிவகாசி சித்தாண்டியின் சகோதரர் உள்பட அரசு ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment