Admission 2020-21: ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தை (Student Teacher Ratio) சரிபார்க்க அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் - மாணவர் விதிதாசாரம் சரிபார்க்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதாசாரத்தை சரிபார்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரம் சரியாக பின்பற்றவில்லை, கணிதம், அறிவியல் முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருபதுக்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு மூடுவிழா?
இதனைத் தொடர்ந்து, தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படுள்ளது. அதில், மனிதவளத் துறை வரையறுக்கப்பட்ட மாணவர் – ஆசிரியர் விகிதாச்சாரம் எந்த அளவில் உள்ளது என்பதை ஆய்வு செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான ஆய்வுக்கூட்டம் பிப். 25, 26 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் முதன்மைக் கல்வி அதிகாரிகள் பங்கேற்க வேண்டும். கூடவே, ஆசிரியர் மாணவர் பணியிட நிர்ணயப் பிரிவு கண்காணிப்பாளர், வட்டாரக் கல்வி அதிகாரிகள் தேவையான புள்ளி விவரங்களுடன் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment