காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியை சச்சின் டெண்டுல்கர் பார்வையிட்டுள்ளார்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி சமூக வலைதளங்களில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசுப் பள்ளிகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்த தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் உதவி புரிகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வல்லம் ஊராட்சியில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் 50 - க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளின் விளையாட்டு திறன்களை மேம்படுத்துவதற்காக பள்ளி வளாகத்தில் தனியார் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு பூங்காவினை பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வருகை தந்து பார்வையிட்டார். முன்னதாக பூங்காவிற்கு சச்சின் டெண்டுல்கர் வருகை தந்தபோது ‘வெல்கம் சச்சின்’ என்று பதாகைகளை ஏந்தியவாறு முப்பதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கரகோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன்பிறகு பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்ற, கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ள ஊழியர்களுடன் ஒன்றாக அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதில் மாத்தூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் புனிதாமேரி, வல்லம் பள்ளி தலைமை ஆசிரியர் பூங்கோதை மற்றும் தனியார் நிறுவன உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment