KVS Admission 2020: கேந்திரிய வித்யலாயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை இம்மாத இறுதியில் வெளியாகிறது.
மத்திய அரசின் KVS கேந்திரிய வித்யாலயா பள்ளியில் விரைவில் மாணவர் சேர்க்கை!
Kendriya Vidyalaya Sangathan (KVS) எனப்படும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 2020-21 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கை இம்மாத இறுதியில் https://kvsangathan.nic.in இணையதளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்டு நாடு முழுவதும் சுமார் 1,137 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் அதிகம் விரும்புவர். எனவே, தனியார் பள்ளிகளைக் காட்டிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மவுசு அதிகமாக இருக்கும்.
10,12 ஆம் வகுப்புக்கான வினா வங்கி புத்தகங்கள் தட்டுபாடு! மாணவர்கள் வேதனை!!
பொதுத்தேர்வுகள் வருவதால் ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க வேண்டாம்! மாநகராட்சி அட்வைஸ்!!
அந்த வகையில், நடப்பு 2020-21 ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை அறிவிக்கை பிப்ரவரி மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக மார்ச் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறும். 11 ஆம் வகுப்பு நீங்களாக, 2 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும். 11 ஆம் வகுப்பை பொறுத்தவரையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
மாணவர் சேர்க்கைக்கான உத்தேச நாட்கள்:
மாணவர் சேர்க்கை அறிவிக்கை வெளியாகும் நாள்: பிப்ரவரி 2020 கடைசி வாரம்
1 ஆம் வகுப்பு விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்: மார்ச் 2020 முதல் வாரம்
1 ஆம் வகுப்பு விண்ணப்பம் முடியும் நாள்: மார்ச் 3வது வாரம்
தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பெயர் பட்டியல், மாணவர் சேர்க்கை நடைபெறும் நாள்: மார்ச்/ஏப்ரல்
2 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பப்பதிவு நடைபெறும் நாள்: ஏப்ரல் 1&2 வது வாரம்
2 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும் நாள்: ஏப்ரல் 2&3 வது வாரம்
No comments:
Post a Comment