Kalakshetra Montessori Recruitment 2020: கலாக்சேத்ரா பள்ளியில் மாண்டிசோரி ஆசிரியர் பணிக்கு (Montessori Teacher), மாண்டிசோரி உதவியாளர் (Montessori Assistants) பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
Kalakshetra Foundation: சென்னையில் செயல்பட்டு வரும் கலாக்சேத்ரா பள்ளியில், மாண்டிசோரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் கலாக்சேத்ரா அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் பெசன்ட் அருந்தைள் சீனியர் செகன்டரி பள்ளியில், மாண்டிசோரி ஆசிரியர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாண்டிசோரி ஆசிரியர் பணிக்கு பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 3 காலியிடங்களும், மாண்டிசோரி உதவியாளர் பணிக்கு 4 காலியிடங்களும் நிரப்பப்படுகிறது.
Montessori Teachers:
மாண்டிசோரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், பட்டப்படிப்பும் மாண்டிசோரியில் பட்டயப்படிப்பும் முடித்திருக்க வேண்டும். மொத்தம் 3 காலியிடங்கள் உள்ளது. மாண்டிசோரி ஆசிரியர் பதவிக்கு மாதம் ரூ.16,000 முதல் ரூ.25,000 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Montessori Assistants:
மாண்டிசோரி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும், மாண்டிசோரி அசிஸ்டெண்ட் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். இதற்கு மாதம் ரூ.13,000 முதல் ரூ.18,000 வரையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், www.kalakshetra.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, மார்ச் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
Director,
Kalakshetra Foundation,
Thiruvanmiyur,
Chennai – 600 041.
No comments:
Post a Comment