திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Monday, June 3, 2019

எல்.கே.ஜி., யு.கே.ஜி.,யில் மாண்டிசோரி கல்வி: தொடக்க கல்வித்துறை முடிவு

அங்கன்வாடி மையங்களில் துவக்க உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி., மாணவர்களுக்கு மாண்டிசோரி கல்வி முறையில் பாடங்கள் நடத்த தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசு நடுநிலைப்பள்ளிகளில் இயங்கும் 2,381 அங்கன்வாடி மையங்களில் முன்னோடி திட்டமாக இக்கல்வி ஆண்டு முதல் எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை, ஆசிரியர் விபரங்களை கல்வி தகவல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இங்கு எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு மாண்டிச்சோரி கல்வி முறையில் பாடங்கள் நடத்த ஆசிரியர்களை அரசு தயார்படுத்தி வருகிறது.

இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: எல்.கே.ஜி., யு.கே.ஜி.,யில் மாண்டிசோரி கல்வி முறை வகுப்பு நடத்த மாவட்டத்திற்கு இரண்டு முதன்மை கருத்தாளர்கள் வீதம் தேர்வு செய்துள்ளோம். அவர்களுக்கு ஜூன் 6 முதல் 8 ம் தேதி வரை சென்னையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அங்கன்வாடி மைய எல்.கே.ஜி., யு.கே.ஜி., ஆசிரியர்களுக்கு, முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி அளிப்பர், என்றார்.

இன்ஜினியரிங் கவுன்சிலிங் ரேண்டம் எண் வெளியீடு

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தோருக்கு, இன்று ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேருவதற்கான கவுன்சிலிங்கை, தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை நடத்துகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, மே, 2ல் துவங்கியது; 31ல் முடிந்தது.இதில், 1.32 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் என்ற சமவாய்ப்பு எண், இன்று வெளியிடப்படுகிறது.பகல், 3:00 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன், ரேண்டம் எண்ணை வெளியிட உள்ளார்.

ரேண்டம் எண் என்பது, இன்ஜினியரிங் மாணவர்களுக்கு நேரடியாக தேவைப்படாது. ஆனால், அந்த எண்ணை பயன்படுத்தியே, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், தர வரிசை பட்டியலை தயாரிக்கும்.அதாவது, ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள், ஒரே, &'கட் ஆப்&' மதிப்பெண் பெறும் போது, அவர்களில் யாருக்கு முன்னுரிமை என்பதில் குழப்பம் ஏற்படும்.அப்போது, கணிதத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர், முதலில் தேர்வு செய்யப்படுவார். அதில், இருவரும் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால், இயற்பியல் மதிப்பெண்ணில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை தரப்படும். 

அதிலும், சமமான மதிப்பெண் பெற்றிருந்தால், இரண்டு மாணவர்களின் நான்காவது முக்கிய பாடமான உயிரியல் அல்லது கணினி அறிவியல் போன்றவற்றில், அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை தரப்படும்.அதிலும், ஒரே மதிப்பெண் என்றால், பிறந்த தேதியில் யார் மூத்தவர் என, பார்க்கப்படும். பிறந்த தேதியும் ஒன்றாக இருந்தால், ரேண்டம் எண் என்ற, சம வாய்ப்பு எண் கணக்கில் எடுக்கப்படும்.அதாவது, இரண்டு மாணவர்களின் சம வாய்ப்பு எண்ணில், உயர்ந்த எண்ணிக்கை பெற்றிருப்பவருக்கு, தரவரிசையில் முன்னுரிமை தரப்படும்

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் புதிய இடத்தில் சேர உத்தரவு

ஓராண்டுக்கு முன், பொது இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், இந்த முறை இடமாறுதலில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வி துறையில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இடமாறுதல் பெற்று, ஒரு கல்வி ஆண்டு நிறைவடையாதவர்களுக்கு, அடுத்த கல்வி ஆண்டில், இடமாறுதல் வழங்கப்படுவதில்லை. இந்த கல்வி ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், விரைவில் நடக்க உள்ளது. அந்த கவுன்சிலிங்கில், 2018 - 19ம் கல்வி ஆண்டில், இடமாறுதல் பெற்றவர்களை பங்கேற்க அனுமதிப்பதில்லை என, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

ஆனால், 2018 - 19ம் கல்வி ஆண்டில் இடமாறுதல் பெற்ற பலர், தங்களுக்கு விருப்பமான இடம் கிடைக்காததால், கிடைத்த இடத்தில் சேராமல், ஏற்கனவே பணியாற்றும் இடத்திலேயே உள்ளனர்.இடமாறுதல் பெற்றும்,பணியில் சேராததை காரணம் காட்டி, இந்த ஆண்டு, கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என, ஆசிரியர்கள் பலர் திட்டமிட்டுள்ளனர். 
அதற்கு, 'செக்' வைக்கும் வகையில், தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி, புதிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில், '2018 - 19ம் கல்வி ஆண்டில், இடமாறுதல் பெற்று, புதிய இடங்களில் சேராதவர்களை, அவர்களின் பழைய இடங்களில் இருந்து, உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய இடங்களில், உடனடியாக பணியில் சேர வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

Sunday, June 2, 2019

10ம் வகுப்பு சிறப்பு தேர்வு: வரும் 3ல் ஹால் டிக்கெட்

பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 3ம் தேதி ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது.
மார்ச்சில் நடந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வில் பங்கேற்காதவர்கள் மற்றும் மார்ச் பொது தேர்வை எழுதி சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூனில் சிறப்பு தேர்வு நடத்தப்படுகிறது. 

இந்த தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பித்தவர்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 3ம் தேதி ஹால் டிக்கெட்வெளியிடப்படுகிறது.

ஹால் டிக்கெட்டில் கூறப்பட்டுள்ள தேர்வு மையத்தில் வரும் 10, 11ம் தேதிகளில் செய்முறை தேர்வு நடத்தப்படும். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி விபரம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த தகவலை தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

இன்ஜினியர்களுக்கு அரசு வேலை

அரசு துறைகளில் 424 உதவி இன்ஜினியர் பணியிடம் உள்பட 475 காலியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. வழியாக நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் உதவி இன்ஜினியர் பணிக்கான காலியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின் ஆய்வுத்துறை உதவி ஆய்வாளர் 10; வேளாண்மை துறையில் உதவி இன்ஜினியர் 93; நீர்வள ஆதாரத்துறை சிவில் உதவி இன்ஜினியர் 120; பொது பணித்துறை சிவில் உதவி இன்ஜினியர் 73 இடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

மேலும் பொது பணித்துறை மின் பிரிவு உதவி இன்ஜினியர் 13; நெடுஞ்சாலை துறை உதவி இன்ஜினியர் 123.கடல் வாரிய சிவில் உதவி இன்ஜினியர் 2; தொழிற்துறை பாதுகாப்பு பிரிவு உதவி இயக்குனர் 26 மற்றும் இளநிலை கட்டடவியல் வல்லுனர் 15 காலியிடங்கள் என மொத்தம் 475 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. ஜூன் 28 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான தேர்வு ஆக. 10 காலை மற்றும் மாலையில் நடக்கிறது. விபரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

பதவி உயர்வுக்கு, 4,102 ஆசிரியர்கள் தேர்வு

அரசு பள்ளிகளில், நிறுத்தி வைக்கப்பட்ட பதவி உயர்வை வழங்க, பள்ளி கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, 4,102 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
பள்ளி கல்வி துறையில் பணியாற்றும், இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு, நிபந்தனைகள் அடிப்படையில், பதவி உயர்வு வழங்கப்படும். பதவி உயர்வுக்கு தகுதி இருந்தும், அதற்கான பதவிகள் இல்லாவிட்டால், ஊதிய உயர்வு மட்டும் தரப்படும்.ஒவ்வொரு ஆண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகவும், தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்படும். வழக்கமான பதவி உயர்வுக்கு, 2018ல் பட்டியல் தயாரிக்கப்பட்டது. 

ஆனால், நீதிமன்ற வழக்கு காரணமாக, பதவி உயர்வு வழங்குவது தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலாகின. மேலும், கல்வி ஆண்டும் முடியும் தருவாயில் இருந்ததால், பதவி உயர்வு நிறுத்தப்பட்டது. தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. புதிய கல்வி ஆண்டு துவங்க உள்ளதால், 2018ல் நிறுத்திய பதவி உயர்வை, ஆசிரியர்களுக்கு வழங்க, கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக, பள்ளி கல்வியின் மேல்நிலை பள்ளி இணை இயக்குனர், ராதாகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க, பட்டியலை இறுதி செய்து அனுப்பும்படி கூறியுள்ளார்.ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பதவி உயர்வு பட்டியலில், யாரும் விடுபட்டிருந்தால், அவர்களின் பெயரை இணைத்து அனுப்ப வேண்டும். தகுதியான ஆசிரியர்கள் மீது, எந்த ஒழுங்கு நடவடிக்கையும் இருக்கக்கூடாது. 

இரட்டை பட்டப்படிப்பு முடித்திருக்க கூடாது. முதுநிலை பட்டப்படிப்பை முறையாக முடித்திருக்க வேண்டும் என்பன போன்ற, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் பட்டியலில், 12 பிறமொழி பாடங்களில், 60 பேரும்; 13 முக்கிய பாடங்களில், முதுநிலை ஆசிரியர் பணிக்கு, 4,001 பேரும்; உடற்கல்வி இயக்குனர் பதவிக்கு, 41 பேரும் தகுதி உடையவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்களில், 2,500 பேருக்கு மட்டுமே காலியிடங்கள் உள்ளதால், முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும் என, தெரிகிறது. மற்றவர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வும், மீதமுள்ளவர்களுக்கு, தர ஊதிய உயர்வும் வழங்கப்படும் என்பதால், பட்டதாரி ஆசிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.பட்டியலில் இடம் பெற்றவர்கள், ஜாக்டோ - ஜியோ போராட்டம் மற்றும் தனிப்பட்ட புகார்கள் அடிப்படையில், போலீஸ் வழக்கில் சிக்கியிருந்தால், பதவி உயர்வு கிடைக்காது. எனவே, போலீசில் வழக்கு உள்ளவர்கள், அதனால், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் எத்தனை பேர் என்ற பட்டியலை, மாவட்ட நிர்வாகம் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கையில் ஆசிரியர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு

புதிய கல்விக் கொள்கை (பக் 67)

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு மூண்றாண்டுகளுக்கு ஒரு முறை பயிற்சியும், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்வும் வைக்கப்படும்.

தேர்வுடன் பதவி உயர்வு, ஊதிய உயர்வும் இணைக்கப்படும்.

Friday, May 31, 2019

RAILWAY RECRUITMENT CELL RECRUIT CONTRACT BASIS Executive Assistants & Digital Office Assistants





Official Website : http://rrcmas.in/
Click here to apply           :  https://iroams.com/RRCSteno/applicationIndex

பள்ளி திறக்கும் நாள் அன்றே உறுதி.! பள்ளி கல்வித்துறையின் அதிரடி உத்தரவு.? மகிழ்ச்சியில் பெற்றோர்கள்.!

பள்ளி திறக்கும் அன்றே மாணவர்களுக்கு பாடப் புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோடை விடுமுறை முடிந்து 2019-20-ம் கல்வியாண்டில் ஜூன் 3-ந்தேதி தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும். இந்த சூழலில் ஜூன் 3-ந்தேதியன்று மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரியும்போது பள்ளி வளாகம் தூய்மையானதாகவும், பாதுகாப்பானதாகவும் கற்கும் சூழலுக்கு ஏற்ற வகையிலும் தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கீழ்க்கண்ட வழிகாட்டுதலை பின்பற்றி பள்ளி வளாகத்தினை தயார்படுத்திடுமாறு உரிய அறிவுரைகளை வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* 3.6.2019 அன்று அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.

* பள்ளி திறப்பதற்கு முன் தினம் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து பள்ளி வளாகம் மற்றும் பள்ளி வகுப்பறைகள் தூய்மையாக உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

* அனைத்து பள்ளிகளிலும் உள்ள தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள் பயன்பாட்டில் உள்ளதை பள்ளி திறக்கும் முன் தினமே உறுதி செய்து கொள்ள வேண்டும். கழிப்பறைகளில் ஏதேனும் பழுதுகள் இருந்தால் அதனை சரி செய்து மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் அமைத்திட வேண்டும்.

* பள்ளி திறக்கும் நாளன்று மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரியும் போது அவர்களை அன்புடன் வரவேற்று நல்லதொரு கற்றல் சூழலை உருவாக்கித் தருவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

* மாணவர்களுக்கு பாடப்புத்தகம், சீருடைகள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் போன்றவை அனைத்தும் பள்ளி திறக்கும் நாளன்றே வழங்கப்பட வேண்டும்.

* பேருந்து பயண அட்ைட தேவைப்படும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் காலதாமதமின்றி பேருந்து பயண அட்டைகள் பெற்றுத் தருவதற்கு போக்குவரத்து அலுவலர்களை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள தண்ணீர் ெதாட்டிகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை கிருமி நாசினி பயன்படுத்தி தூய்மையாக பராமரித்து மாணவர்களுக்கு பாதுகாப்பான சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

* பள்ளி மாணவர்களுக்கு வசதியான காற்றோட்டமான சூழ்நிலையை உருவாக்கித் தரும் பொருட்டு வகுப்பறைகளில் பழுதடைந்த நிலையில் மின் விசிறி, மின் விளக்கு மற்றும் மின் இணைப்பு ஏதேனும் இருப்பின் அவற்றை பழுது நீக்கி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்.

* பள்ளி குழந்தைகளுக்கு ஊறுவிளைவிக்கும் விதத்தில் திறந்தவெளி கிணறுகள், உயர்மின்னழுத்த மின் கம்பிகள், மின் கசிவுகள், பழுதடைந்த கட்டடங்கள், புல் புதர்கள், குழிகள் போன்றவை பள்ளி வளாகத்தில் இருந்தால் அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட தகவலினை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, May 29, 2019

LIC ADO Recruitment 2019 – Apply Online for 8581 Various Vacancies

Name of the Post       : LIC Apprentice Development Officer Online Form 2019

Post Date                    20-05-2019

Total Vacancy             : 8581


Brief Information: Life Insurance Corporation of India (LIC) has published notification for the recruitment of Apprentice Development Officer vacancies in Various Zones. Those Candidates who are interested in the vacancy details & completed all eligibility criteria can read the Notification & Apply Online.

Life Insurance Corporation of India
Apprentice Development Officer Vacancies 2019

Application Fee
  • For Others: Rs.600/- plus Transaction Charges
  • For SC/ST/PWD candidates: Rs. 50/- plus Transaction Charges
  • Payment Mode (Online): Debit/ Credit Card, Internet Banking, IMPS, Cash Cards/ Mobile Wallets.
Important Dates
  • Starting Date for Apply Online & Payment of Fee: 20-05-2019
  • Last Date to Apply Online & Payment of Fee: 09-06-2019
  • Last Date for Editing Application Details: 09-06-2019
  • Last Date for Printing Your Application: 24-06-2019
  • Date for Download of Online Exam Call Letter: 29-06-2019 On wards
  • Dates of Online Examination-Preliminary (Tentative): 06 & 13-07-2019 
  • Dates of Online Examination-Main (Tentative): 10-08-2019
Age Limit (as on 01-05-2019)
  • Minimum Age: 21 Years
  • Maximum Age: 30 Years
  • Age relaxation is admissible for SC/ST/OBC/ PH/ Ex-servicemen candidates as per rules.
Educational Qualification
  • Candidates should possess Bachelors Degree from a recognised University.
Vacancy Details
Apprentice Development Officer
Sl NoZonal NameTotal
1Central Zonal Office, Bhopal525
2Eastern Zonal Office, Kolkata922
3East Central Zonal Office, Patna701
4South Central Zonal Office, Hyderabad1251
5Northern Zonal Office, New Delhi1130
6North Central Zonal Office, Kanpur1042
7Southern Zonal Office, Chennai1257
8Western Zonal Office, Mumbai1753
Interested Candidates Can Read the Full Notification Before Apply Online
Important Links
Apply OnlineRegistrationLogin