திருக்குறள்:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
தமிழன்... டா !
Pages
title
Thursday, October 17, 2019
நாட்டிலேயே முதல் முறையாக மகப்பேறு நலன் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கும் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு - எந்த மாநிலத்தில் தெரியுமா?
நமது அண்டை மாநிலமான கேரளாதான்.
மகப்பேறு நலன் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகள், பெண் ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கும் திட்டத்தை கேரள அரசு கொண்டு வர உள்ளது. தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கும் மகப்பேறு நலன்கள், பலன்கள் கிடைக்க வேண்டும் என்ற கேரள அரசு கொண்டு வந்த இந்த அறிவிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என கேரள அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கேரள அரசு வெளியிட்ட அறிவிப்பில், கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி மாநில அமைச்சரவை கூடி எடுத்த முடிவான தனியார் பள்ளிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், ஆசிரியைகளுக்கும் மகப்பேறு நலன் சட்டத்தின் கீழ் பலன் கிடைக்க வேண்டும் என்று அனுமதி கோரி அனுப்பப்பட்ட அறிவிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த உத்தரவு மூலம் மாநிலத்தில் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், ஆசிரியைகள் 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பை ஊதியத்துடன் எடுக்க முடியும். மேலும் மகப்பேறு காலத்தில் குழந்தை பிறக்கும் வரை மாதம் ரூ.1,000 மருத்துவச் செலவுக்காக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மகப்பேறு நலச்சட்டத்தின்கீழ் நாட்டிலேயே முதல் முறையாக தனியார் பள்ளிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், ஆசிரியைகளுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட உள்ளது.
ஏற்கெனவே தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்களும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
Wednesday, October 16, 2019
போலி ஆசிரியர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை
போலி சான்றிதழ் தயாரித்து, அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய, பெண் உள்பட இருவருக்கு, தலா, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, தி.மலை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர், புனிதவதி, 35. வேலுார் மாவட்டம், ஆற்காடைச் சேர்ந்தவர், விஜயகுமார், 37. இருவரும், செய்யாறு அடுத்த மேல்மட்டை விண்ணமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 2014- முதல், 2017- வரை ஆசிரியராக பணியாற்றினர்.கடந்த, 2017 ஏப்ரலில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய ஜெயக்குமார், அப்பள்ளியில் ஆய்வு செய்தார். இதில் இருவரும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல், போலி சான்றிதழ் தயாரித்து, ஆசிரியராக பணியில் சேர்ந்தது தெரிந்தது.இது குறித்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், புனிதவதி, விஜயகுமார் ஆகியோர், போலி சான்றிதழ் தயாரித்தது உறுதியானது.
இது குறித்த வழக்கு, திருவண்ணாமலை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த, நீதிபதி விக்னேஷ்பிரபு, போலி சான்றிதழ் தயாரித்து பணியாற்றிய குற்றத்திற்காக புனிதவதி மற்றும் விஜயகுமாருக்கு, தலா, இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து, தீர்ப்பளித்தார்.
Monday, October 14, 2019
அரசுப் பள்ளியில் படிக்கும் மாவட்ட ஆட்சியரின் மகள்....ஆச்சர்யத்தில் மக்கள் !!
அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை தங்கள் பிள்ளைகளை கான்வென்ட் ஸ்கூலில் சேர்த்து படிக்க வைக்க வேண்டுமென எண்ணும் இந்த காலத்தில், சத்தீஸ்கர் மாநிலத்தில், மாவட்ட ஆட்சியர் ஒருவர் தனது மகளை அரசுப் பள்ளி படிக்க வைத்து அசத்தி வருகிறார்.
தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படித்தால் தான் தங்களின் பிள்ளைகளால் வாழ்வில் உயர்ந்த நிலையை எட்ட முடியும் என பெற்றோர் உறுதியாக நம்புகிறார்கள்.
இதற்காக பலர் தங்களது சக்தியையும் தாண்டி லட்சக்கணக்கில் பணத்தை செலவழித்து, தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர்.
அரசுப் பள்ளிகளில் படித்து வாழ்வில் உச்சத்தை தொட்ட அப்துல் கலாம் தொடங்கி இஸ்ரோ தலைவர் சிவன் வரை யாரை உதாரணம் சொன்னாலும் நம் சமூகத்தில் எடுபடுவதில்லை.
இத்தகைய சூழலில், மாவட்ட ஆட்சியர் ஒருவர் தனது மகளை அரசுப் பள்ளியில் படிக்க வைத்து வருகிறார்.
ஆம்... 2009-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர் அவனீஸ் ஷரன். இவர் சத்தீஸ்கர் மாநிலம், கபீர்தம் மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.
அவனீஸ் தனது பெண் பிள்ளை வேதிகா ஷரனை அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் அண்மையில் சேர்த்துள்ளார். தனது மகள் அரசுப் பள்ளி சீருடையில் இருக்கும் புகைபடங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷரன் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த சத்தீஸ்கர் மாநில மக்கள் பலரும், மாவட்ட ஆட்சியர் அவனிஷ் ஷரனின் செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
"உங்களை போல் எல்லா அரசு அதிகாரிகளும் முடிவு எடுத்தால் நிச்சயம் அரசு பள்ளிகளின் தரம் உயரும் என்றும், உங்கள் முடிவு பாராட்டுக்கு உரியது" என்றும் அவர்கள் வாழ்த்தி உள்ளனர்.
"உண்மையில் உங்கள் செயல்பாடு உத்வேகம் அளிக்கிறது. இந்தியாவில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது அரிது" என்றும் அந்த மாநில மக்கள் ஷரனை வியந்து வாழ்த்திய வண்ணம் உள்ளனர்.
Sunday, October 13, 2019
வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், 2020, ஜனவரி, 1க்குள், கே.ஒய்.சி., எனப்படும், வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் படிவத்தை புதுப்பிக்காவிட்டால், அந்த வங்கி கணக்கு முடக்கப்படும்' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதையடுத்து, அந்த கணக்கில் இருந்து, நேரடியாகவோ, 'ஆன்லைன்' மூலமோ, பணப்பரிமாற்றம் செய்ய முடியாது என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், வங்கிகளில் கணக்கு துவங்கும் போது, குறிப்பிட்ட நபரை பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள, கே.ஒய்.சி., எனப்படும், சுய விபரக் குறிப்புகள் கொண்ட படிவத்தை சமர்ப்பிக்கும் நடைமுறை, பின்பற்றப்படுகிறது. இதன்படி, வாடிக்கையாளரின் அடையாள சான்று, இருப்பிட சான்று, தொலைபேசி மற்றும் 'மொபைல்' எண், 'இ - மெயில்' முகவரி, புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை, வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.உத்தரவுஇந்த, கே.ஒய்.சி., ஆவணங்களை, குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.பணப் பரிமாற்ற மோசடிகளை தவிர்க்கவும், வங்கி கணக்கு மூலம், பயங்கரவாத அமைப்புகளுக்கு பணப் பரிமாற்றம் செய்யப்படுவதை தவிர்க்கவும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதியும், இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.வாடிக்கையாளர்களின் பணப் பரிமாற்ற முறை மற்றும் இதர தன்மைகளின் அடிப்படையில், கே.ஒய்.சி., புதுப்பிப்பதற்கான கால அளவு மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இரண்டு ஆண்டுகள், எட்டு ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்த, கே.ஒய்.சி., படிவம், புதுப்பிக்கப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.சமர்ப்பிக்கவும்'கே.ஒய்.சி., படிவத்தை புதுப்பிக்க, கணக்கு வைத்துள்ள வங்கி கிளைக்கு சென்று, அங்கு தரப்படும் படிவத்தை பூர்த்தி செய்து, கேட்கப்படும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
'சுய விபரக்குறிப்பில் மாற்றம் எதுவும் இல்லாத வாடிக்கையாளர்கள், வங்கியின் இணைய தளத்தில், 'கே.ஒய்.சி.,யில் மாற்றமில்லை' என்ற இணைப்பை, 'கிளிக்' செய்வதன் மூலம், புதுப்பிக்கும் பணியை செய்து கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், எஸ்.பி.ஐ., ஐ.டி.பி.ஐ., மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, இது தொடர்பான குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பி வருகின்றன. அதில், வரும், 2020, ஜனவரி, 1க்குள், கே.ஒய்.சி., விபரங்களை புதுப்பிக்குமாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.'ஜனவரி, 1க்குள் புதுப்பிக்கப்படாத வங்கி கணக்குகள், முடக்கப்படும் என்றும், அந்த கணக்கில் இருந்து, நேரடியாகவோ அல்லது 'ஆன்லைன்' மூலமோ, பணப் பரிமாற்றம் செய்ய முடியாது' என, ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
Saturday, October 12, 2019
இளைஞர் எழுச்சி நாள் - அக்டோபர் 15 சிறப்பு கட்டுரை
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.
பிறப்பு: அக்டோபர் 15, 1931
மரணம்: ஜூலை 27, 2015
இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)
பிறப்பு:
1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.
இளமைப் பருவம்:
அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.
கல்லூரி வாழ்க்கை:
தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார்.
1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.
1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.
மரணம்:
அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மறித்தார்.
விருதுகள்:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:
அக்னி சிறகுகள்
இந்தியா 2020
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.
உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
Cambridge English organised conference for teachers
Cambridge Assessment English, a department of the University of Cambridge has organised a conference on “Artificial Intelligence and English language learning, teaching and assessment” on 09th October, 2019 in New Delhi.
More than 50 language teachers from various schools / colleges participated in the conference held at The Metropolitan Hotel, Bangla Sahib Road, New Delhi.
With the development of Internet, Information Technology in today’s digital era, Artificial Intelligence (AI) has made many breakthroughs in the field of education. The conference aimed to focus the application of Artificial Intelligence in English learning, how Artificial Intelligence optimizes English teaching and assessment.
Dr. Angeliki Salamoura, Principal Research Manager, Cambridge Assessment English, UK was the keynote speaker of the conference and she explained the recent techniques of language learning through Artificial Intelligence and how it is more effective than traditional learning / teaching methods.
As a part of the teacher support program, the conference offered guidelines to the teachers to improve the learning atmosphere in the English classroom and an in-depth exploration of the value of modern information technology. Topics like artificial intelligence, technological innovation to improve the language learning, English language teaching were discussed in the conference for the better understanding of the participants.
The teachers gathered quality information on Artificial Intelligence and its application in English language learning and assessment through this conference which will help them to use technology in the process of modern English teaching, learning and assessment.
Cambridge Assessment English is a not-for-profit department of the University of Cambridge. It exists to help people learn English and prove their skills to the world, and every year provides English language exams and tests for more than five million people in 130 countries.
Dr. Angeliki Salamoura, Principal Research Manager, Cambridge Assessment English, UK was the keynote speaker of the conference and she explained the recent techniques of language learning through Artificial Intelligence and how it is more effective than traditional learning / teaching methods.
As a part of the teacher support program, the conference offered guidelines to the teachers to improve the learning atmosphere in the English classroom and an in-depth exploration of the value of modern information technology. Topics like artificial intelligence, technological innovation to improve the language learning, English language teaching were discussed in the conference for the better understanding of the participants.
The teachers gathered quality information on Artificial Intelligence and its application in English language learning and assessment through this conference which will help them to use technology in the process of modern English teaching, learning and assessment.
Cambridge Assessment English is a not-for-profit department of the University of Cambridge. It exists to help people learn English and prove their skills to the world, and every year provides English language exams and tests for more than five million people in 130 countries.
Subscribe to:
Posts (Atom)




