திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Saturday, April 18, 2020

மாற்றுத்திறனாளிகள் 03.05.2020 வரை அரசுப் பணிக்கு திரும்ப விலக்கு அளித்து அரசாணை வெளியிடு.


கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தவிர்க்க. அத்தியாவசிய பணிக்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உட்பட பல்வேறு துறைகள் பணியாற்றிட வேண்டும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 

மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அவர்களின் கோரிக்கையை ஏற்று பல்வேறு துறைகளிலும் உள்ள மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களின் உடல் குறைபாட்டையும் , பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு , தடை உத்தவு பிறப்பிக்கப்பட்ட நாளான 24.03.2020 முதல் 14.04.2020 வரை அவர்கள் தங்கள் அலுவலகத்தில் பணி மேற்கொள்வதிலிருந்து விலக்களித்து ( Exemption ) ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

GO NO : 03 , Date : 17.04.2020

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் தங்கள் அலுவலக பணிகள் மேற்கொள்வதிலிருந்து 15.04.2020 முதல் 03.05.2020 வரை மற்றும் மீண்டும் கால நீட்டிப்பு செய்யும் நேர்வில் அந்த காலத்திற்கும் சேர்த்து மாற்றுத்திறனாளிகள் அலுவலக பணிகள் மேற்கொள்வதிலிருந்து விலக்களித்து ஆணை வழங்குமாறு அரசினை கோரியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அவர்களின் கோரிக்கையை ஏற்று  அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு துறைகளிலும் உள்ள மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களின் உடல் குறைபாட்டையும் , பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு , தடை உத்தரவு நீட்டிக்கப்பட்ட நாளான 15.04.2020 முதல் 03.05.2020 வரை அவர்கள் தங்கள் அலுவலகத்தில் பணி மேற்கொள்வதிலிருந்து விலக்களித்து ( Exemption ) அரசு ஆணையிடுகிறது.

மே 26 முதல் பத்தாம் வகுப்பு தேர்வு - தமிழக அரசு ஆலோசனை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மே 26 முதல் 5 நாட்களில் நடத்தி முடிக்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.


ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரலில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்துவிடும். இந்தாண்டு கொரோனா தொற்று பரவியதால், மார்ச் 22ம் தேதி ஒருநாளும், பின் மார்ச் 25 முதல் ஏப்.14 வரை தொடர்ந்தும் ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் இருந்தது.

பிளஸ்2தேர்வுகள் முடிந்து விட்ட நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்குவது தடைபட்டு உள்ளது.தற்போது ஊரடங்கு 2வது கட்டமாக மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளதால், அடுத்து எப்போது தேர்வை நடத்தலாம் என கல்வி, தேர்வுத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

மே 3ல் ஊரடங்கு முடிந்தாலும், கொரோனா பாதிப்பு முற்றிலும் முடிவுக்கு வர எத்தனை நாளாகும் என தெரியவில்லை.புதிய கல்வி ஆண்டு பாதிக்காத வகையில் பொதுத் தேர்வை நடத்தி முடித்துவிட வேண்டும் என கல்வி அதிகாரிகள் கருதுகின்றனர். எனவே, பத்தாம் வகுப்பு தேர்வை மே 26 முதல் 30க்குள் தொடர்ந்து 5 நாட்களில் நடத்தலாம். உடனே விடைத்தாள் திருத்தும் பணியை துவக்கலாம் என அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

மேலும் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணியை மே 3வது வாரத்திலேயே துவங்கலாம். 120க்கும் மேற்பட்ட கல்வி மாவட்ட அதிகாரிகள் உள்ளதால் பத்து நாட்களில் இப்பணியையும் முடித்து விரைவாக தேர்வு முடிவை ஜூன் மாதத்திற்குள்ளாக 10, 12வது வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடலாம்.

இதனால் கல்வி ஆண்டு அதிகம் பாதிக்காத வகையில் வகுப்புகளை துவக்கலாம் எனவும் கருதுகின்றனர். அரசு ஒப்புதல் கிடைத்ததும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலூர் செய்தி


ஊதிய நிறுத்தம், பணி நீக்க நடவடிக்கைகளில் பொறியியல் கல்லூரிகள் ஈடுபடக் கூடாது - AICTE அறிவுரை!


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், ஊதிய நிறுத்தம், பணி நீக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதை பொறியியல் கல்லூரிகள் கைவிட வேண்டும் என ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில்) அறிவுறுத்தியுள்ளது. 

இதுதொடா்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளா்களுக்கும் ஏஐசிடிஇ கடிதம் அனுப்பியுள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல், மே, ஜூன் மாத ஊதியச் செலவை மிச்சப்படுத்தும் வகையில் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இயங்கிவரும் பல பொறியியல் கல்லூரிகளின் நிா்வாகம் பேராசிரியா்களை பணி நீக்கம் செய்துள்ளது. சில கல்லூரிகள் பேராசிரியா்களுக்கு 50 சதவீத ஊதியத்தைமட்டுமே அளித்துள்ளன. மேலும் சில கல்லூரிகள் கல்விக் கட்டணத்தைச் செலுத்த மாணவா்களை வற்புறுத்தி வருகின்றன.இதுதொடா்பாக, ஏஐசிடிஇ-க்கும் புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், அனைத்துப் பொறியியல் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை புதன்கிழமை வெளியிட்டது.

அதில் கூறியிருப்பதாவது:

இந்த ஊரடங்கு நேரத்தில் சில கல்லூரிகள் கல்விக் கட்டணம் மற்றும் சோ்க்கைக் கட்டணத்தை செலுத்துமாறு மாணவா்களை வலியுறுத்துவதாகப் புகாா்கள் வந்துள்ளன. கல்லூரிகள் இவ்வாறு வலியுறுத்தக் கூடாது. இதுதொடா்பாக உரிய வழிகாட்டுதலை ஏஐசிடிஇ வெளியிடும்.அதுபோல, சில கல்லூரிகள் அங்கு பணிபுரியும் பேராசிரியா்கள் மற்றும் ஊழியா்களுக்கு ஊதியத்தை நிறுத்தி வைத்திருப்பதாகவும், சில கல்லூரிகளில் பேராசிரியா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் புகாா்கள் வருகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளை கல்லூரிகள் உடனடியாகக் கைவிடவேண்டும். கல்லூரிகள் ஏஐசிடிஇ அமைப்பின் சுற்றறிக்கையை பின்பற்றுவதை உறுதி செய்யவும், இதுதொடா்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளா்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பருவத் தோ்வு அட்டவணை:

மாணவா்கள் வீட்டிலிருந்தபடி கல்வியைத் தொடரும் வகையில் ஆன்-லைன் வகுப்புகளை கல்லூரிகள் தொடரலாம். வரும் கல்வியாண்டுக்கான திருத்தப்பட்ட கல்வித் திட்டத்தை ஏஐசிடிஇ விரைவில் வெளியிடும். மேலும், பருவத் தோ்வுகள் மாற்றியமைப்பது தொடா்பாக யுஜிசி குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்தக் குழுப் பரிந்துரையின் அடிப்படையில், பருவத் தோ்வுகள் தொடா்பான அறிவிப்புகள் வெளியிடப்படும்.தொழில் பயிற்சி: கல்விக்கு இடையேயான தொழில் பயிற்சியை, மாணவா்கள் வீட்டிலிருந்தபடியே மேற்கொள்ளலாம். அவ்வாறு செய்ய முடியாதவா்கள் டிசம்பா் மாதத்தில் செய்துகொள்ளலாம்.

வருகைப் பதிவேட்டில் தளா்வு:

இந்த ஊரடங்கு நேரத்தில் கல்லூரிகள், அதன் சுற்று வட்டாரத்தில் குடியிருக்கும் வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கும் வலைதள வசதியைப் பயன்படுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். மேலும், மாணவா் வருகைப் பதிவேட்டிலும் கல்லூரிகள் தளா்வு அளிக்கலாம் என ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது,.

தேர்வுகள், வகுப்புகள் குறித்த புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் அண்ணா பல்கலைக்கழகம் தகவல்


தேர்வுகள், அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் என்று உயர்க்கல்வி துறை அறிவித்து இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழகம் அதன் கீழ் செயல்படும் என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளுக்கு அது தொடர்பாக அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் வளாக கல்லூரிகள், அதன் கீழ் செயல்படும் இணைப்பு கல்லூரிகளில் அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த வகுப்புகள், செமஸ்டர் தேர்வுகள், திட்ட மதிப்பீடுகள் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.

மீண்டும் வகுப்புகள் தொடங்குவதற்கான தேதி மற்றும் இறுதி செமஸ்டர் தேர்வுகள், திட்ட மதிப்பீடுகள் அந்த சமயத்தில் எப்போது நடக்கும்? என்பது குறித்து புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்கொள்வது எப்படி?


கொரோனா நோய்த் தொற்று காரணமாக மார்ச் 27-ந் தேதி தொடங்க வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 14-ந் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. 

தொடர்ந்து மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதன்பிறகான நாட்களில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் முதன் முதலாக புதிய பாடத்திட்டத்தின்படியும், வினாத்தாள் வடிவமைப்பு இல்லாமலும், நன்கு சிந்தித்து எழுதக்கூடிய கேள்விகள் இடம்பெறும் வினாத்தாள்களுக்கும் விடையளிக்க உள்ளனர். மேலும் இரு தாள்களாக எழுதப்பட்ட தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழித்தாள்கள் ஒரே தாளாக மாற்றப்பட்டுள்ளது. இத்தகைய மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும்.ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணையில், ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே அதிகளவில் விடுமுறை விடப்பட்டிருந்தது. இனிவரக் கூடிய தேர்வுகளுக்கு விடுமுறை குறைவாக இருக்கவே வாய்ப்புள்ளது. மாணவர்கள் இதற்கு தகுந்தவாறு தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.

பொதுவாக எந்த பொதுத்தேர்வு தொடங்குவதற்கு 2 அல்லது 3 வாரத்திற்கு முன்னர், புதிதாக எந்தப் பாடப் பகுதியையும் படிக்காமல், ஏற்கனவே படித்த பாடங்களை திருப்புதல் (revise) செய்வது வழக்கம். ஏனெனில் படிக்காமல் உள்ள புதிய பாடப் பகுதிகளை படிக்க அதிக நேரமாகும். ஆனால் இப்போது புதிதாக தேர்வு கால அட்டவணை அறிவிக்கப்பட இருப்பதாலும், அதிக விடுமுறை நாட்கள் உள்ளதாலும் மாணவர்கள் படிக்காமல் விட்ட புதிய பாடப் பகுதிகளையும் படித்து அதிக மதிப்பெண்கள் பெற முயற்சி செய்ய வேண்டும்.

மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கைப்பேசி மூலமாக ஆசிரியர்களிடமோ அல்லது சக மாணவர்களிடமோ கேட்டுத் தெளிவு பெறலாம்.மேலும் வீட்டிலிருந்தே மாணவர்கள் பாடங்களை கற்கும் வகையில் இணைய வழிக் கல்வி வலைதளம் e-learn.tnschools.gov.in தமிழக பள்ளிக் கல்வித் துறையால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்துப்பாடங்களும் வீடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கணினி வசதி இல்லாத மாணவர்களும் தங்கள் செல்போன் மூலமாக,தாங்களே கற்றுக்கொள்ளும் வகையில் எளிய வடிவில் இது உள்ளது.இதைத் தவிர மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் கல்வித்தொலைக்காட்சி வழியாக தினமும் பாடம் சார்ந்த வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

டி.டி. பொதிகை தொலைக்காட்சியிலும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை பாடம் சார்ந்த நிகழ்வுகள் ஒளிபரப்பப்படுகின்றன. மாணவர்கள் இவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ், ஆங்கிலப் பாடங்களில் மனப்பாடப்பகுதிகள் மற்றும்இலக்கணம் சார்ந்த பகுதிகள், கணிதப் பாடத்தில் செய்முறை வடிவியல் பகுதி மற்றும் வரைபடம், அறிவியல் பாடப்பகுதியில் உள்ள படங்கள், சமூக அறிவியல் பாடத்தின் வரைபடங்கள் மற்றும் காலக்கோடுகள் போன்றவற்றை அவ்வப்போது திருப்புதல் செய்யவேண்டும். கூடுதலாக அனைத்துப் பாடங்களிலும் ஒரு மதிப்பெண் வினாக்களை தயார்செய்து படிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் தாமதமின்றி வழங்கப்படும் தமிழ்நாடு பாடநூல் கழகம் தகவல்


வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் தாமத மின்றி வழங்கப்படும் என்று தமிழ் நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக் கான பாடப்புத்தக்கங்கள் அச்சிடும் பணி 60 சதவீதம் முடிந்தநிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அச்சிடுதல் பணி நிறுத்தி வைக்கப் பட்டது.

இதனால் பாடபுத்தகம் விநியோகம் தாமதமாகுமோ என்ற அச்சம் நிலவியது.இந்நிலையில் பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் ஜெயந்தி கூறும்போது, ‘‘புதிய பாடத்திட்டத் தில் திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்ட சில வகுப்புகளுக்கான பாட நூல்கள் அச்சிடும் பணிகளே இன்னும் மீதமுள்ளன.

தற்போது அவையும் அடுத்த வாரம் முதல் குறைந்த அளவிலான பணியாளர் களை கொண்டு அச்சிடப்பட உள்ளன. எனவே, நடப்பாண்டு மாணவர்களுக்கு பாடநூல் கிடைப்பதில் தாமதம் ஏற்படாது’’ என்றார்.

அடுத்த கல்வியாண்டில் விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வு


'அடுத்த கல்வியாண்டில், காலை, மாலை இரு வேளைகளிலும், விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வு நடத்தப்படும்' என, உயர்கல்வி துறை அறிவித்துள்ளது'.

சென்னை பல்கலையும், இந்த தேர்வு முறையை அறிவித்துள்ளது.கொரோனா பரவலை தடுக்க, மே, 3ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதனால், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், மே மாதம் நடத்தப்படவிருந்த செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. 'அடுத்த கல்வி ஆண்டின் துவக்கத்தில், முதல் செமஸ்டர் கால ஆரம்பத்தில், தேர்வுகள் நடத்தப் படும்' என, உயர்கல்வி துறை செயலர், அபூர்வா அறிவித்தார்.

இந்நிலையில், அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளுக்கு, உயர்கல்வி செயலர், அபூர்வா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக, தேர்வுகள் மற்றும் சிறப்பு வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்த செமஸ்டர் காலத்தில் நடத்த வேண்டிய தேர்வுகளை, அடுத்த கல்வி ஆண்டின் துவக்கத்தில் நடத்துவதற்கு, பல்கலைகளும், கல்லுாரிகளும் திட்டமிட வேண்டும்.

காலை மற்றும் மாலை என, இடைவேளை இல்லாமல், வரிசையாக அனைத்து தேர்வுகளையும் நடத்த வேண்டும். விடுமுறை இல்லாமல், தேர்வுகளை முடிக்க, கல்லுாரிகள் திட்டமிட வேண்டும்.அதற்கு ஏற்ற வகையில், மாணவர்கள் இந்த விடுமுறை காலத்தை பயன்படுத்தி, தேர்வுக்கு தயாராவதற்கான வழிமுறைகளை, கல்வி நிறுவனங்கள் சார்பில், மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை பின்பற்றி, சென்னை பல்கலையில் தேர்வுகள் நடத்தப்படும் என, பல்கலை பதிவாளர் சார்பில், கல்லுாரிகள், பல்கலைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Thursday, April 16, 2020

ஸூம் செயலி பாதுகாப்பானது இல்லை: மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

ஸூம் (ZOOM APP) செயலி பாதுகாப்பானது இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், ஐடி துறை உள்பட தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி அளித்துள்ளது.

இந்த சூழலில், ஊழியர்கள் பலர் வீட்டில் இருந்தபடி தங்கள் மேலதிகாரிகளை வீடியோ கான்பரன்சிங் மூலமாக தொடர்பு கொண்டு கலந்துரையாடுகின்றனர்.  இதனால், ஸூம் என்ற செயலின் பயன்பாடு தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்மூலமாக பலர் வீடியோ அழைப்பு மூலமாக ஒரே நேரத்தில் கலந்துரையாட முடியும். அரசு அலுவலக ஊழியர்கள்கூட இந்த செயலியைப் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் செயலியைப் பயன்படுத்தி 5 லட்சம் கணக்குகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. 

இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி “ஸூம்” செயலி பாதுகாப்பானது அல்ல என்றும் இதனை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

ஸூம் செயலியை பயன்படுத்த தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

சிங்கப்பூரில், ஆசிரியர்கள் ஸூம் செயலியை பயன்படுத்த  தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, தைவான் உள்ளிட்ட நாடுகளிலும் ஸூம் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளன. 

செமஸ்டர் தேர்வுகள் அடுத்த பருவத்தின் தொடக்கத்தின்போது நடத்தப்படும்-உயர்கல்வித்துறை அறிவிப்பு

அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் கல்லூரி பருவத்தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், நிகழாண்டு செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற கேள்விகள் மாணவர்கள் மத்தியில் எழுந்தன. 

இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து  கல்லூரிகள் தொடங்கும் போது, கல்வி ஆண்டின் தொடக்கத்தில் கல்லூரி பருவத்தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை  தெரிவித்துள்ளது.

கலை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளுக்கும், இந்த ஆண்டில் நடத்தப்பட வேண்டிய பருவத்தேர்வுகள் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ள உயர்கல்வித்துறை முதலில் தேர்வுகளை  நடத்திவிட்டு அடுத்த கல்வியாண்டுக்கான பாடங்கள் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளது.