திருக்குறள்:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
தமிழன்... டா !
Pages
title
Saturday, December 5, 2020
Sunday, May 31, 2020
மாநில திட்ட இயக்குநராக கூடுதல் பொறுப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
பள்ளிக்கல்வித்துறையில் மாநில திட்ட இயக்குநர் சுடலைக் கண்ணன் IAS ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து திரு.N. வெங்கடேஷ், IAS, மாநில திட்ட இயக்குநராக கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ளார்.
Tuesday, May 12, 2020
ஜூன் 1ந்தேதி முதல் 12ந்தேதி வரை 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும்
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. அதனை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இதனை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் 10ம் வகுப்பு பொது தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அரசு தெரிவித்தது.
இந்த நிலையில், தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்பொழுது, ஜூன் 1ந்தேதி முதல் 12ந்தேதி வரை 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும். சுகாதார துறையினரின் அறிவுறுத்தலின்படி, சமூக இடைவெளியுடன் தேர்வு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பள்ளி திறப்பு குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேர்வுகளை நடத்துவதில் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது.
10ம் வகுப்பு பொது தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி,
ஜூன் 1ல் மொழிப்பாடம்
ஜூன் 3ல் ஆங்கிலம்
ஜூன் 5ல் கணிதம்
ஜூன் 6ல் விருப்ப மொழிப்பாடம்
ஜூன் 8ல் அறிவியல்
ஜூன் 10ல் சமூக அறிவியல்
தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான ஒரு பாடத்திற்கான தேர்வு ஜூன் 2ந்தேதி நடைபெறும். இதேபோன்று வரும் 27ந்தேதி பிளஸ் 2 பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் என தெரிவித்து உள்ளார்.
Monday, May 4, 2020
சென்னையில் உள்ள 900 பள்ளிகளில் சிறப்பு மையங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு!
மாநகராட்சி அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் அமைக்க திட்டம்
பாதிப்பு அதிகமுள்ள திருவிக நகர் ராயபுரம் தேனாம்பேட்டை கோடம்பாக்கம் தண்டையார்பேட்டை மண்டலங்களில் முகாம் அமைக்கும் பணி தொடக்கம்.
முதல்கட்டமாக 134 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள 1500 அறைகளில் 6500 படுக்கைகள் அமைக்க திட்டம்
ஒரு அறைக்கு 4 படுக்கைகள் வீதம் 21 பள்ளிகளில் உள்ள 501 அறைகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் அமைக்கும் பணியை சில நாட்களில் முடிக்க முடிவு.
Saturday, May 2, 2020
தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியத்தை உடன் வழங்க உத்தரவு
அனைத்து மெட்ரிக் / சுயநிதி / மழலையர் மற்றும் துவக்கப்பள்ளிகள் / சி.பி.எஸ்.இ மற்றும் பிறவாரிய பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள்/பணியாளர்களுக்கான ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஊதியத்தினை எவ்வித காலதாமதமும் இன்றி உடன் வழங்கிட்டு அதன் விவரத்தினை பெற்று தொகுத்து அனுப்பிட தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்கநர் / தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் / தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கான ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஊதியத்தினை எவ்வித காலதாமதமும் இன்றி உடன் வழங்கிவிட்டு அதன் விவரத்தினை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலருக்கு அனுப்பிடவும் அனைத்து வகை தனியார் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Friday, May 1, 2020
நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு- உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா, உயிரிழப்பு மற்றும் நோய்த்தொற்றை ஏற்படுத்துவது மட்டுமின்றி அனைத்து நாடுகளையும் பொருளாதார பாதிப்புக்கும் உள்ளாக்கி வருகிறது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளதால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை எப்படியாவது சரிகட்டிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பல்வேறு நாடுகளும் தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை.
இந்த நிலையில், நாடு முழுவதும் மேலும் இருவாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.192 குறைவு
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மே 3 ஆம் தேதி ஊரடங்கு அமலில் உள்ளது.
அதன்படி, தமிழகத்திலும் கொரோனா தீவிரமடைந்து வருவதால் வரும் 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் 3 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு சார்ந்த துறைகளும் முடங்கி போயுள்ளதால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் முடங்கி போயுள்ளது.
இந்தநிலையில், ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 காஸ் சிலிண்டர்கள் (14.2 கிலோ எடை கொண்டவை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.
இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தொடர்ந்து உயர்ந்து வந்த சிலிண்டர் விலை, கடந்த மார்ச் முதல் தொடர்ந்து 3வது மாதமாக குறைந்துள்ளது. தற்போது தமிழகத்தில் மானியமில்லா வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.192 குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஏப்ரல் மாதத்தில் ரூ.761.50 ஆக இருந்த சிலிண்டர் விலை தற்போது ரூ.569.50 ஆக குறைந்துள்ளது. இதனால் குடும்பத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் மானியமில்லாத வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை இதுவரை ரூ.1404 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.259.50 குறைந்து, ரூ.1144.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
மானிய விலை சிலிண்டராக இருந்தாலும், மானியத்தை கழிக்காமல் முழு தொகையையும் அளித்துத்தான் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் வாங்க வேண்டும். பின்னர், மானியத்தொகை, வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லுாரி சேர்க்கைக்கு நுழைவு தேர்வு இல்லை - யுஜிசி அறிவிப்பு.
கல்லுாரிகளில், இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, நுழைவு தேர்வு நடத்த வேண்டும் என்ற பரிந்துரையை, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., நிராகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் தாமதமாகியுள்ள பல்கலை, கல்லுாரி தேர்வுகள், புதிய மாணவர் சேர்க்கை குறித்து ஆராய, ஹரியானா மத்திய பல்கலையின் துணைவேந்தர், குகாத் தலைமையிலான குழுவை, மத்திய அரசு அமைத்தது.இந்த குழுவினர், பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து, யு.ஜி.சி.,யிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
அறிக்கையில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை ஆய்வு செய்து, புதிய கல்வி ஆண்டுக்கான உத்தேச கால அட்டவணையை, யு.ஜி.சி., நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. அதில், பிளஸ் 2 முடித்தோருக்கு நுழைவு தேர்வு நடத்தி, இளநிலை பட்டப்படிப்பில் சேர்க்க வேண்டும் என, நிபுணர் குழு பரிந்துரைத்தது.இந்த பரிந்துரையை நிராகரித்த, யு.ஜி.சி., 'முந்தைய ஆண்டுகளை போல், இளநிலை பட்ட படிப்பில் மாணவர்களை சேர்க்கலாம்' என, அறிவித்துள்ளது.
ஏற்கனவே, மூன்று ஆண்டுகளுக்கு முன், இன்ஜினியரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, நுழைவு தேர்வு நடத்த வேண்டும் என்ற, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்த பரிந்துரையை, இதுவரை செயல்படுத்த முடியவில்லை.
நான்கு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை தயார் நிலையில் வைக்கவும், தலைமை ஆசிரியர்கள் தினசரி வருகை தரவும் ஆட்சியர் உத்தரவு.
சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளூர் , செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளையும் தயார் நிலையில் இருக்க நான்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சென்னை ஆட்சியர் உத்தரவு.
கொரோனா தொற்று நோய் தொடர்பாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை. கட்டிட ஸ்திர தன்மை Parking மற்றும் சுகாதார வசதிகள் இருப்பதை ஊர்ஜிதம் செய்து, பேரிடர் மேலாண்மை முகாம்கள் பள்ளிகளில் இயக்க தயார் நிலையில் இருக்க சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் துணை தலைமை ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் பள்ளிகளில் முகாம்கள் அமைப்பது தொடர்பாக உயர் அலுவலர்கள் பார்வையிட வருவதால் இன்று முதல் பள்ளி தலைமை ஆசிரியர்/துணை தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளில் தவறாமல் இருப்பதுடன், பார்வையிட வரும் உயர் அலுவலர்களுக்கு தக்க விவரங்களை தெரிவிக்கவும் அறிவுரைகள் வழங்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Wednesday, April 29, 2020
கல்லூரிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடத்துவது எப்போது? யூஜிசி அறிவிப்பு.
கல்லூரி ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வை ஜூலையில் நடத்தலாம். முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வின்றி இன்டர்னல் மதிப்பெண் கொண்டு கிரேட் வழங்கலாம்.
இன்டெர்னல் மதிப்பெண் 50 % முந்தைய தேர்வு மதிப்பெண் 50 % எடுத்துக்கொள்ளலாம். ஆகஸ்ட்டில் புதிதாக சேறும் மாணவர்களுக்கும் வகுப்புகளை தொடங்கலாம். பல்கலைக்கழகங்கள் தங்களது சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கலாம்.
கலை அறிவியல் தேர்வுக்கு நுழைவுத் தேர்வு என்ற பரிந்துரையினை ஏற்கவில்லை என யுஜிசி தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவால் வேலை இழந்த வெளிநாட்டினர் 2 லட்சம் பேர் வெளியேறும் நிலை
அமெரிக்காவில் கொரோனாவால் வேலை இழந்த வெளிநாட்டினரில் சுமார் 2 லட்சம் பேர் வரும் ஜூன் மாதத்திற்குள் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த எச்-1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவில் பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் எச்-1 பி விசாவில் பணியாற்றி வருகின்றனர். எச்-1 பி விசா வைத்துள்ள ஒருவர் 60 நாட்கள் மட்டுமே சம்பளம் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்க முடியும், அதன் பின்பு தாய்நாட்டு திரும்ப வேண்டும் என்பது அங்கு சட்டமாக உள்ளது.
அமெரிக்கக் குடியுரிமை கோரும் 2.5 லட்சம் பேரில் சுமார் 2 லட்சம் பேர் எச்-1பி விசாவில் பணியாற்றி வருகின்றனர். அமெரிக்காவில் ஊரடங்கு இன்னும் முடியாத நிலையில், மாற்று வேலையைத் தேட வழியில்லை என்பதுடன் 60 நாட்களுக்குப் பின் கால நீட்டிப்பிற்காகவும் அனுமதி கோர முடியாது.
ஏற்கனவே பலர் 30 முதல் 40 நாட்கள் வரையிலான காலத்திற்கு வேலை இல்லாமலும், சம்பளம் இல்லாமலும் இருக்கின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் எச்-1 பி விசாவில் பணியாற்றும் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் தாய்நாட்டிற்குத் திரும்பும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
ஆனால சர்வதேச விமான சேவைகள் இல்லாததால் அவர்கள் எப்படி வருவார்கள் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
ஊரடங்கு முடிந்த பின் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படும்- சிபிஎஸ்இ
ஊரடங்கு காலம் முடிந்த பின் 10 மற்றும் 12 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடக்கும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு உட்பட சில தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு முடிந்த பின் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு, ஏனைய பாடங்களுக்கான பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடக்கும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. போதிய கால அவகாசம் இருப்பதால் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
தேர்வுகள் துவங்குவதற்கு 10 நாட்கள் முன்பாகவே தேர்வுகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மேலும், ஏற்கனவே நடந்த தேர்வுகளுக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியை மாநில அரசுகள் துவங்க வேண்டும் என்று மத்திய மனிதவள அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - தொடக்க கல்வி இயக்குநர் சுற்றறிக்கை!
பள்ளிக் கல்வி இயக்குநர் செயல் முறையில் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் உரிய அறிவுரைகள் வழங்கவும் தெரிவிக்கப்பட்டது.
இதை அடிப்படையாக கொண்டு தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும், நர்சரி, பிரைமரி பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் அனைவருக்கும் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியின் தேர்ச்சி பட்டியலில் உரிய பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
அதற்கான தொடர் நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Tuesday, April 28, 2020
ஆராய்ச்சி படிப்பு உதவி தொகை புதிய விதிமுறைகள் வெளியீடு
ஆராய்ச்சி படிப்புக்கான உதவித் தொகை பெற, புதிய விதிகளை, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இந்த தொகையைப் பெற, யு.ஜி.சி., நடத்தும் நுழைவுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற வேண்டும்.தேர்வு செய்யப்படுவோருக்கு, மாதந்தோறும் உதவித் தொகையும், கல்லுாரிகள், பல்கலைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ள தேவையானசெலவுத் தொகையும் வழங்கப்படும்.இதில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கான, புதிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி இனி, உதவித் தொகை பெற ஆண்டுதோறும், 1,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். முழு நேர, பிஎச்.டி., அல்லது எம்.பில்., படிப்பவர்களுக்குமட்டுமே, உதவித் தொகை வழங்கப்படும்.அவர்களில், 4 சதவீதம் பேர் மாற்றுத் திறனாளிகளாக இருக்க வேண்டும்.
எம்.பில்., படிப்பவர்களுக்கு, இரண்டு ஆண்டுகள்; பிஎச்.டி.,க்கு, ஐந்து ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படும்.முதல் இரண்டு ஆண்டு களுக்கு, மாதம், 31 ஆயிரம் ரூபாயும்; பின், மூன்று ஆண்டுகளுக்கு, 35 ஆயிரம் ரூபாயும் உதவித் தொகை வழங்கப் படும்.இது தவிர, செலவுத் தொகையாக மாதம், 10 ஆயிரம் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும்.முழு விபரங்களை, யு.ஜி.சி., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
1564 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு ஊதிய கொடுப்பாணை ( Pay Authorization ) வெளியீடு.
கணினி கல்வித் திட்டம் செயல்படுத்தும் பொருட்டு தோற்றுவிக்கப்பட்ட 1880 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு அரசாணையின்படி 1564 பணியிடங்களுக்கு 01.01.2019 முதல் 31.12.2019 வரை தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து 1564 பணியிடங்களுக்கு 01.01.2020 முதல் மேலும் மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் அரசைக் கோரியிருந்தார்.
அக்கருத்துரு மீது அரசின் கடிதத்தில் சில கூடுதல் விவரங்கள் கோரப்பட்டு, அப்பணியிடங்களின் சார்பான விவரங்களை சம்மந்தப்பட்ட அலுவலரிடம் தொகுத்து பெற்று வழங்க கால தாமதம் ஆகும். எனவே, 01.01.2020 முதல் 31.03.2020 வரை 3 மாதங்களுக்கு துறைத் தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் 1564 பணியிடங்களுக்கு தொடர்ந்து ஊதியம் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Monday, April 27, 2020
கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஆபத்து
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு இந்தியா போராடி வரும் நிலையில், வெட்டுக்கிளிகளால் அந்நாடு மிகப் பெரிய பாதிப்பை சந்திக்கும் என்று ஐ.நா எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீடித்து வருகிறது. இதனால் 3-ஆம் தேதி வரை இருக்கும் ஊரடங்கு உத்தரவை வரும் 18-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில்,அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியாவில் உள்ள விளை நிலங்களை மிகப்பெரிய அளவிலான வெட்டுக்கிளிகள் ம் கூட்ட்கூட்டம் தாக்கக் கூடும் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில், ஆப்ரிக்காவில் இருந்து கிளம்பும் வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகளுடன் இணைந்து ஏமன், ஈரான், சவுதி அரேபியா, பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு வந்தடையும் என்றும், அதன் பின் இந்தியாவின் பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள விளை நிலங்கள் வெட்டுக்கிளிகளால் கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகும் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவை வெட்டுக்கிளிகள் தாக்கும்போது உணவு உற்பத்தியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் இந்தியாவின் வேளாண்மை கடுமையாக பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.ஒரு சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் சுமார் 4 கோடி வெட்டுக்கிளிகள் இருக்கும். தினமும் 35 ஆயிரம் பேருக்கான உணவு தானியங்களை வெட்டுக்கிளிகள் அழித்து விடும் என்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிட்த்தக்கது.
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பு!!
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனாவால் ஈட்டிய விடுப்பு ஊதியத்தை நிறுத்தி வைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் கிடையாது என தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈட்டிய விடுப்பு ஊதியத்துக்கு விண்ணப்பித்திருந்தாலும் அதுவும் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் உள்ளாட்சி, வாரியம், பல்கலை., கூட்டுறவு உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு 15 நாள், 2 ஆண்டுகளுக்கு 30 நாள் ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்கப்படுகிறது.
ஆண்டு தோறும் அரசு ஊழியர்கள் எடுக்காத விடுமுறையை எழுதிக்கொடுத்து அதற்கு ஊதியத்தை பெறுவார்கள்.
Saturday, April 25, 2020
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை ஆணை வெளியீடு
2012 - 13 ஆம் கல்வியாண்டில் 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டு, அப்பள்ளிகளுக்கு 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது.
அப்பணியிடங்களுக்கு 01.01.2020 முதல் 31.12.2022 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
Friday, April 24, 2020
அரசு ஊழியர்களின் அகவிவைப்படி நிறுத்த உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை!
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை, கோவை உள்பட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
சென்னை, கோவை உள்பட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை, கோவை, மதுரையில் 26 - ம் தேதி காலை முதல் 29 - ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28 - ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ள முதல்வர் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் ஒத்துழைப்பை தர வேண்டும் எனவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
10ம் வகுப்பு திறனாய்வு தேர்வு தள்ளி வைப்பு
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்த வேண்டிய, தேசிய திறனாய்வு தேர்வு தேதி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில், கல்வி உதவி தொகை வழங்கப் படுகிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் படிக்கும் மாணவர்களில், உதவித்தொகைக்கு தகுதி பெறும் மாணவர்களை தேர்வு செய்ய, இரண்டு கட்டமாக திறன் தேர்வு நடத்தப்படுகிறது. என்.டி.எஸ்.இ., என்ற, இந்ததேசிய திறனாய்வு தேர்வு, மாநில அளவில் முதல் கட்டமாகவும், அதில், தேர்ச்சி பெறுவோருக்கு, தேசிய அளவிலும் நடத்தப்படுகிறது.
நடப்பு கல்வி ஆண்டுக்கான, மாநில அளவிலான முதல் கட்ட தேர்வு, நவம்பரில் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்வு, மே, 10ல் நடக்கும் என, மத்திய அரசு அறிவித்திருந்தது.இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, பல மாநிலங்களில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு,பொது தேர்வுகளே இன்னும் நடத்தப்படவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்டதும், பொது தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
பொது தேர்வு நடத்தப்படும் தேதியில், திறனாய்வு தேர்வையும் நடத்த முடியாது என்பதால்,மே, 10ல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த, தேசிய அளவிலான திறனாய்வு தேர்வு, கால வரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான புதிய தேதியை, உரிய நேரத்தில் அறிவிப்பதாக, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
B.Ed, நுழைவு தேர்வுக்கு மே 4ல் விண்ணப்பம்
நாடு முழுதும் செயல்படும், கல்வியியல் கல்லுாரிகளில், பட்டப்படிப்பு முடித்தவர்கள், பி.எட்., எம்.எட்., படிப்புகளில் சேரலாம்.
அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் சேர, நுழைவு தேர்வுகிடையாது. ஆனால், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்தும், கல்லுாரிகளில் சேருவதற்கு, பொது நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த நுழைவு தேர்வு, மே, 24ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது; விண்ணப்ப பதிவு, ஏப்., 6ல் துவங்கியது. இந்நிலையில், தேர்வை எழுத விருப்பம் உள்ள மாணவர்கள், மே, 4க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆதி திராவிடர் நல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் பட்டியல் தர உத்தரவு
ஆதி திராவிடர் நல பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தகுதியானவர் பட்டியலை சேகரிக்க, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் பள்ளிகளில், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை, பதவி உயர்வு வழியாக நிரப்ப, அரசு உத்தரவிட்டு உள்ளது.இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, ஆதிதிராவிடர் நல பள்ளிகளை கவனிக்கும் அதிகாரிகளுக்கு,
ஆதி திராவிடர் நலத்துறை கமிஷனர் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:
ஆதி திராவிட தொடக்க பள்ளிகளில், 2019 - 2020ம் கல்வி ஆண்டுக்கான, தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு, உரிய விதிகளை பின்பற்றி, தகுதியானவர்களின் பட்டியலை, விரைந்து தயாரித்து, கமிஷனரகத்துக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
Thursday, April 23, 2020
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு - மத்திய அரசு.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை தற்காலிகமாக நிறுத்திவைக்க மத்திய அரசு உத்தரவு. அதன்படி , மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் 01.01.2020 முதல் வழங்கப்பட வேண்டிய நான்கு சதவீத அகவிலைப்படி வழங்கப்படாது.
மேலும் 01.07.2020 & 01.01.2021 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியும் வழங்கப்படாது. அதுவரை தற்போதுள்ள 17% என்ற அளவிலேயே நீடிக்கும்.
ஒரு வேளை 01.07.2021 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட முடிவெடுக்கப்பட்டால் 01.01.2020,01.07.2020 & 01.01.2021 ஆகிய காலங்களுக்கான ஒட்டுமொத்த அகவிலைப்படி உயர்வுகளும் கணக்கில் கொள்ளப்பட்டு வழங்கப்படும்.
ஆனால் 01.01.2020 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவை தொகை கிடைக்காது.
அமெரிக்காவில் 2 வளர்ப்பு பூனைகளுக்கு முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2 வளர்ப்பு பூனைகளுக்கு முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரு வேறு பகுதிகளில் வசித்து வரும் 2 வளர்ப்பு பூனைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில், இவை இரண்டுக்கும் லேசான அறிகுறிகளே தென்படுகின்றன. அதனால், குணமடைந்து மீண்டும் பழைய நிலைக்கு அவை வரும் என தெரிவித்துள்ளது.
இவற்றில், முதல் பூனையை வளர்ப்போர் வீட்டில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. வீட்டிற்கு வெளியே கொரோனா வைரஸ் பாதித்த நபர் எவரேனுடனோ ஏற்பட்ட தொடர்பில் இந்த பூனைக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
2வது பூனையின் உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்பின்பே பூனைக்கு, சுவாச பாதிப்புக்கான அறிகுறிகள் தெரிய வந்தன என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலில் வளர்ப்பு பிராணிகளுக்கு எந்த பங்கும் இல்லை. அதற்கான சான்றுகளும் இல்லை. அதனால் வளர்ப்பு பிராணிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறப்படுவதில் எந்தவித நியாயமும் இல்லை என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிராங்ஸ் விலங்கியல் பூங்காவில் உள்ள புலி ஒன்றுக்கு, இந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட இருமலை தொடர்ந்து நடந்த பரிசோதனையில், கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதேபோன்று 6 புலிகள் மற்றும் சிங்கங்களுக்கும் அறிகுறிகள் தென்பட்டன. எந்தவித அறிகுறிகளும் தென்படாத ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட விலங்கியல் பணியாளரிடம் இருந்து இந்த விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்க கூடும் என கூறப்பட்டது.
Wednesday, April 22, 2020
ஊரடங்கால் இந்தியாவில் ஏற்பட்டு உள்ள மாற்றம் நாசா செயற்கை கோள் படம் உணர்த்தும் உண்மை
ஊரடங்கால் நாசாவின் செயற்கைக்கோள் படம்பிடித்த இந்தியாவின் புகைப்படம் நம்பமுடியாத சில அதிர்ச்சி தகவலைப் பதிவு செய்துள்ளது.
மார்ச் 25, 2020 அன்று, மத்திய அரசு ஊரடங்கை அறிவித்தது. இதனால் நாசா செயற்கைக்கோள் சென்சார்கள் வட இந்தியாவில் இந்த ஆண்டுக்கான 20 ஆண்டு குறைந்த அளவில் காற்று மாசை (ஏரோசோல்) அளவை படம் பிடித்து உள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பினால், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், காற்று மாசுபாட்டின் அளவு பெரியளவில் குறைந்துள்ளது என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும். இப்போது, இதை உறுதிப்படுத்தும் விதமாக நாசாவின் செயற்கைக்கோள் படம்பிடித்த இந்தியாவின் புகைப்படம் நம்பமுடியாத சில அதிர்ச்சி தகவலைப் பதிவு செய்துள்ளது. நாசா செயற்கைக்கோள் பதிவு செய்துள்ள தகவலின் விபரங்களைப் பார்க்கலாம்.
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயற்கைக்கோள், மார்ச் 31ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதிக்கு இடையில் படம்பிடித்துள்ள புகைப்படத்தில் வட இந்தியாவில் காணப்படும் காற்றுமாசின்( ஏரோசோல்) அளவு இதுவரை காணப்படாத அளவிற்குக் குறைந்துள்ளது என்று பதிவாகியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் பதிவு செய்யப்படாத மிகக் குறைந்த அளவு காற்றுமாசு மதிப்பீடு இந்த ஆண்டு தான் பதிவாகியுள்ளது என்று நாசா அதிர்ச்சி தகவலை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளது.
நாசாவால் ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்படும் இந்த பதிவு, இந்த ஆண்டு நம்பமுடியாத தகவலைப் பதிவு செய்துள்ளது. மானுடவியல் என்று சொல்லப்படும் மனிதனால் உருவாக்கப்பட்ட மூலங்களிலிருந்து வெளிவரும் நஞ்சு காற்றுமாசுகள் பல இந்திய நகரங்களில் ஆரோக்கியமற்ற அளவிலான காற்று மாசுபாட்டிற்கு காரணமாக இருக்கிறது என்று சமீபத்திய அறிக்கை கூறுகிறது. இந்த காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணம் மனிதர்கள் தான் என்பதே உண்மை.
காற்று மாசு (ஏரோசோல்கள்) இயற்கையாக உருவாகும் ஏரோசோல்கள் என்று ஒரு வகையும், மற்றொன்று மனிதனால் உருவாக்கப்படும் ஏரோசோல்கள் என்று மொத்தம் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இயற்கையில் உருவாகும் தூசி புயல்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் காட்டுத் தீ போன்ற இயற்கை ஆதாரங்கள் ஒரு வகை ஏரோசோல்களை வெளியிடுகின்றன.
அதேபோல், புதை படிவ எரிபொருள்கள் மற்றும் பயிர்நிலங்களை எரிப்பது போன்ற மனித நடவடிக்கைகளிலிருந்து வெளிவரும் ஏரோசோல்கள் காற்றை மாசுபடுத்துகிறது. முக்கியமாக புதைபடிவ எரிமம் மூலம் மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரோசோல்கள் தான் மனித வளத்தின் ஆரோக்கியத்தைச் சேதப்படுத்தும் அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது என்கிறது ஆய்வாளர்களின் அறிக்கை.
பொதுவாக, வசந்த காலத்தின் துவக்கத்தில், வட இந்தியாவின் கங்கை பள்ளத்தாக்கில், மனித நடவடிக்கைகள் தான் ஏரோசோல்களின் பெரும்பகுதியை உருவாக்குகின்றன. அதுமட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகள், நிலக்கரி எரியும் மின் உற்பத்தி நிலையங்கள், வாகனங்களிலிருந்து வெளியேறும் நைட்ரேட்டுகள், சல்பேட்டுகள் மற்றும் பிற கார்பன் நிறைந்த துகள்களை இந்த பகுத்து பெருமளவில் உற்பத்தி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய அளவில் மனிதனின் ஆரோக்கியத்தைச் சீரழிக்க, இந்த சிறிய துகள்கள் தான் பெரும்பாலான பங்களிப்பை மேற்கொள்கிறது என்கிறது அறிவியல் உண்மை. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தான் இதற்கு அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது சமீபத்திய கணக்கெடுப்பு.
நாசாவின் மார்ஷல் விண்வெளி விமான மையத்தின் பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சி சங்கத்தின் (யுஎஸ்ஆர்ஏ) விஞ்ஞானி பவன் குப்தா கூறும்போது:-
ஊரடங்கின் போது பல இடங்களில் வளிமண்டல அமைப்பில் மாற்றங்களைக் காண்போம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் இந்த ஆண்டு இந்தோ-கங்கை சமவெளியில் ஏரோசல் மதிப்புகள் மிகக் குறைவாக இருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை, இது நம்பமுடியாத உண்மையாக உள்ளது என்று கூறி உள்ளார்.
பழைய முறையிலேயே சம்பளப் பட்டியல் தயாரிப்பு!
அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு ஊதியப் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் முறை இல்லாமல் பழைய வழிமுறையிலேயே ஊதியப் பட்டியலை தயாரித்து அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசுக்கான வருவாய்களில் குறைவு ஏற்பட்டுள்ளதால், வரும் 30-ஆம் தேதியன்று ஊதியம் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
ரிசா்வ் வங்கியின் தளா்வு: இதனிடையே, அவசர தேவைகளுக்காக ரிசா்வ் வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் 60 சதவீதம் வரை கூடுதலாக கடன் பெறலாம் என அதன் ஆளுநா் சக்திகாந்த தாஸ் அறிவித்தாா். இந்த அறிவிப்பால் தமிழக அரசுக்கு நிம்மதி கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிதியைக் கொண்டு அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான ஊதியம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்கிட முடியும் என அரசுத் துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
பட்டியல் தயாரிப்பு தீவிரம்: அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான ஊதியப் பட்டியலைத் தயாரிக்கும் பணிகளில் ஒவ்வொரு அலுவலகத்திலும் உள்ள ஊதியம் வழங்கும் அலுவலா் ஈடுபட்டு வருகிறாா். தலைமைச் செயலகம் அடங்கிய சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் ஊதியம் வழங்குவதற்காக ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையின்படி, ஆன்லைனிலேயே ஊதியப் பட்டியலைத் தயாரித்து கருவூலம் மற்றும் கணக்கு உள்ளிட்ட துறைகளுக்கு அனுப்ப வேண்டும். இந்த முறையை ஏப்ரல் முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்த மாநில அரசு திட்டமிருந்தது.
கரோனா பாதிப்பு: கரோனா தொற்று பாதிப்பு காரணமாக, ஆன்லைனில் ஊதியப் பட்டியல் தயாரித்து அனுப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பே-ரோல் எனப்படும் தேசிய தகவலியல் மையத்தின் சாா்பில் உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள் வழியாக பட்டியலைத் தயாரித்து அவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறைக்கு அளிக்கலாம் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதற்கான பணிகளில் ஊதியம் வழங்கும் அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா். ஓரிரு நாள்களில் பணிகளை முடித்து கருவூலம் மற்றும் கணக்குத் துறைக்கு அளிப்பா் எனவும், வரும் 30-ஆம் தேதியன்றே அனைத்து அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்கள் உள்ளிட்டோருக்கு ஊதியம் கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது எனவும் அரசுத் துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
கொரோனா தடுப்பு பணி உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சமாக நிதியுதவி உயர்த்தி அறிவிப்பு
கொரோனா தடுப்பு பணியில் உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.50 லட்சமாக நிதியுதவியை உயர்த்தி அறிவித்துள்ளார்.
சென்னை கீழ்பாக்கத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனா பாதித்து உயிரிழந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த மருத்துவரின் உடலை சுமந்து வந்த ஆம்புலன்சு மீதும், அதில் இருந்த மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் மீதும் கற்கள் வீசப்பட்டன. இதில் அவர்கள் காயமடைந்து உள்ளனர். இதன்பின்பு அந்த பகுதியில் இருந்து மருத்துவரின் உடலை வேறிடத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளனர்.
இந்த தாக்குதலில் தொடர்புடைய 20 பேர் கைது செய்யப்பட்டனர். 90 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றால் இறந்த மருத்துவரின் மனைவி, மகனுடன் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசி முதல் அமைச்சர் பழனிசாமி ஆறுதல் வழங்கினார். எதிர்கால நலன் கருதி தைரியமாக இருக்க வேண்டும் என மருத்துவரின் மகனுக்கு அவர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இதன்பின்பு, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவம், காவல், உள்ளாட்சி, தூய்மைப்பணியாளர் உள்பட அனைத்து துறை பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டல் அவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரூ.50 லட்சமாக நிதியுதவியை உயர்த்தி அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழப்பவர்களின் உடல் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்.
தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விருது வழங்கப்படும். சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த கூடுதலாக 2 அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என கூறினார்.
Tuesday, April 21, 2020
கல்விக் கட்டணம் செலுத்த கட்டாயபடுத்தக் கூடாது - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
கொரோனா ஊரடங்கு நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களிடம் 2020-21-ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணம் மற்றும் 2019-20 நிலுவைத் தொகையினைச் செலுத்த கட்டாயபடுத்தக் கூடாது:
தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு: GO NO : 199 , Date : 20.04.2020
Disaster Management - Corona Virus Disease ( COVID - 19) - Restrictions in the territorial Jurisdictions of the State to contain the spread of COVID - 19 under the Disaster Management Act - Not to compel students or parents to pay fee during the Lockdown period - InstructionsIssued.
வாடிக்கையாளர்களுக்கு SBI எச்சரிக்கை!
ஆனால் ஆன்லைன் திருடர்கள், நெட் பேங்கிங் மோசடிக்காரர்கள் மற்றும் இணையத்தின் வழி வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடுபவர்களுக்கு எல்லாம் இந்த கொரோனா லாக் டவுன் செல்லுபடி ஆகாது போல் இருக்கிறது.
இந்த இணைய திருடர்களும் தங்கள் கை வரிசையை காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
எச்சரிக்கை
இப்படி ஒரு சம்பவத்தைப் பற்றித் தான் எஸ்பிஐ வங்கி நிர்வாகம், தன் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் சொல்லி இருக்கிறது. மோசடிக்காரர்கள் பல புதிய டெக்னிக்களைப் பயன்படுத்தி சைபர் திருட்டுத்தனங்களைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். உஷாராக இருக்கச் சொல்லி எச்சரித்து இருக்கிறது எஸ்பிஐ.
புதிய வழி
இப்போது ஆன்லைன் திருடர்கள், எஸ்பிஐ வங்கி எஸ் எம் எஸ் அனுப்புவது போலவே அனுப்புகிறார்கள். அந்த லிங்கை க்ளிக் செய்தால் அச்சு அசலாக எஸ்பிஐ வங்கியின் நெட் பேங்கிங் பேஜ் போலவே இருக்கும். அது போன்ற எஸ் எம் எஸ்-கள் வந்தால் அதை டெலிட் செய்து விடுங்கள் என எச்சரிக்கிறது எஸ்பிஐ.
க்ளிக் செய்யாதீங்க
அப்படி வரும் எஸ் எம் எஸ் லிங்குகளை க்ளிக் செய்து, எந்த நெட் பேங்கிங் சம்பந்தப்பட்ட விவரங்களையும் பகிர வேண்டாம் எனவும் தன் ட்விட்டர் பக்கத்தில் எச்சரித்து இருக்கிறது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. எஸ்பிஐ எச்சரித்த வலைதளம் (வெப் சைட்) இது தான் - http://www.onlinesbi.digital
எப்படி ஏமாற்றுவார்கள்
இந்த http://www.onlinesbi.digital லிங்கை அனுப்பி, உங்கள் நெட் பேங்கிங் பாஸ்வேர்டை அப்டேட் செய்யச் சொல்வார்கள் அல்லது, உங்கள் கணக்கு விவரங்களை அப்டேட் செய்யச் சொல்வார்கள். அப்படி ஏதாவது லிங்க் வந்தால் அதை தயர்வு செய்து க்ளிக் செய்ய வேண்டாம் எனச் சொல்லி இருக்கிறது எஸ்பிஐ. எஸ்பிஐயின் ட்விட்டைக் காண லிங்கை க்ளிக் செய்யவும்: https://twitter.com/TheOfficialSBI/status/1248932047768317953
ஏற்கனவே நம் கையில் போதுமான பணம் இல்லை. இதற்கு மத்தியில், ஆன்லைன் திருட்டு ஏதாவது நடந்து இருக்கும் பணமும் பறி போனால் கொரோனா லாக் டவுன் காலத்தில், யாரிடமும் சென்று முறையாக புகார் கூட கொடுக்க முடியாது. எனவே மக்களே நாம் தான் கொஞ்சம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். http://www.onlinesbi.digital என்கிற வலைதளத்தை நன்றாக பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்த 2 நாட்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த வேண்டாம்; இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
2 நாட்களுக்கு ரேபிட் கிட்டில் பரிசோதனை செய்ய வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
கொரோனா நோய் தொற்று இருப்பதை விரைவாக கண்டறிய உதவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ என்ற பரிசோதனை கருவிகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டன.
கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ரேபிட் கிட் மூலம் பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், ரேபிட் கிட்டின் பரிசோதனை முடிவுகள் துல்லியமானதாக இல்லை எனக்கூறி ராஜஸ்தான் அரசு நிறுத்திவைத்தது.
இந்த நிலையில், அடுத்த இரு நாட்களுக்கு கொரோனாவைக் கண்டறிய ரேபிட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ அராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. ரேபிட் கிட் கருவிகள் மாறுபட்ட முடிவுகளை காட்டுவதாக வெளியான தகவலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
"ரேபிட் கிட் டெஸ்ட் கருவிகளின் தரத்தினை பரிசோதித்து வருகிறோம், மீண்டும் இந்தக் கருவிகளை கொண்டு சோதனையை தொடங்குவது பற்றி விரைவில் அறிவுறுத்தல் வழங்கப்படும் " என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் ஜூன் 1 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிங்கப்பூரில் ஜூன் 1 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளை ஒருசேர கொரோனா பாதிப்பு உலுக்கி வருகிறது. கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்காததால், சமூக இடைவெளியை மக்கள் பின்பற்றுமாறு அனைத்து நாடுகளும் கோரி வருகின்றன.
இதனால், கொரோனா வைரஸ் தீவிரமாக உள்ள பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிங்கப்பூரில் ஜூன் 1 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே மே 4 ஆம் தேதிவரை ஊரடங்கு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில், மேலும் 4 வாரங்களை நீட்டித்து அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
Subscribe to:
Posts (Atom)