ஊரடங்கால் நாசாவின் செயற்கைக்கோள் படம்பிடித்த இந்தியாவின் புகைப்படம் நம்பமுடியாத சில அதிர்ச்சி தகவலைப் பதிவு செய்துள்ளது.
மார்ச் 25, 2020 அன்று, மத்திய அரசு ஊரடங்கை அறிவித்தது. இதனால் நாசா செயற்கைக்கோள் சென்சார்கள் வட இந்தியாவில் இந்த ஆண்டுக்கான 20 ஆண்டு குறைந்த அளவில் காற்று மாசை (ஏரோசோல்) அளவை படம் பிடித்து உள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பினால், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், காற்று மாசுபாட்டின் அளவு பெரியளவில் குறைந்துள்ளது என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும். இப்போது, இதை உறுதிப்படுத்தும் விதமாக நாசாவின் செயற்கைக்கோள் படம்பிடித்த இந்தியாவின் புகைப்படம் நம்பமுடியாத சில அதிர்ச்சி தகவலைப் பதிவு செய்துள்ளது. நாசா செயற்கைக்கோள் பதிவு செய்துள்ள தகவலின் விபரங்களைப் பார்க்கலாம்.
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயற்கைக்கோள், மார்ச் 31ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதிக்கு இடையில் படம்பிடித்துள்ள புகைப்படத்தில் வட இந்தியாவில் காணப்படும் காற்றுமாசின்( ஏரோசோல்) அளவு இதுவரை காணப்படாத அளவிற்குக் குறைந்துள்ளது என்று பதிவாகியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் பதிவு செய்யப்படாத மிகக் குறைந்த அளவு காற்றுமாசு மதிப்பீடு இந்த ஆண்டு தான் பதிவாகியுள்ளது என்று நாசா அதிர்ச்சி தகவலை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளது.
நாசாவால் ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்படும் இந்த பதிவு, இந்த ஆண்டு நம்பமுடியாத தகவலைப் பதிவு செய்துள்ளது. மானுடவியல் என்று சொல்லப்படும் மனிதனால் உருவாக்கப்பட்ட மூலங்களிலிருந்து வெளிவரும் நஞ்சு காற்றுமாசுகள் பல இந்திய நகரங்களில் ஆரோக்கியமற்ற அளவிலான காற்று மாசுபாட்டிற்கு காரணமாக இருக்கிறது என்று சமீபத்திய அறிக்கை கூறுகிறது. இந்த காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணம் மனிதர்கள் தான் என்பதே உண்மை.
காற்று மாசு (ஏரோசோல்கள்) இயற்கையாக உருவாகும் ஏரோசோல்கள் என்று ஒரு வகையும், மற்றொன்று மனிதனால் உருவாக்கப்படும் ஏரோசோல்கள் என்று மொத்தம் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இயற்கையில் உருவாகும் தூசி புயல்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் காட்டுத் தீ போன்ற இயற்கை ஆதாரங்கள் ஒரு வகை ஏரோசோல்களை வெளியிடுகின்றன.
அதேபோல், புதை படிவ எரிபொருள்கள் மற்றும் பயிர்நிலங்களை எரிப்பது போன்ற மனித நடவடிக்கைகளிலிருந்து வெளிவரும் ஏரோசோல்கள் காற்றை மாசுபடுத்துகிறது. முக்கியமாக புதைபடிவ எரிமம் மூலம் மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரோசோல்கள் தான் மனித வளத்தின் ஆரோக்கியத்தைச் சேதப்படுத்தும் அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது என்கிறது ஆய்வாளர்களின் அறிக்கை.
பொதுவாக, வசந்த காலத்தின் துவக்கத்தில், வட இந்தியாவின் கங்கை பள்ளத்தாக்கில், மனித நடவடிக்கைகள் தான் ஏரோசோல்களின் பெரும்பகுதியை உருவாக்குகின்றன. அதுமட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகள், நிலக்கரி எரியும் மின் உற்பத்தி நிலையங்கள், வாகனங்களிலிருந்து வெளியேறும் நைட்ரேட்டுகள், சல்பேட்டுகள் மற்றும் பிற கார்பன் நிறைந்த துகள்களை இந்த பகுத்து பெருமளவில் உற்பத்தி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய அளவில் மனிதனின் ஆரோக்கியத்தைச் சீரழிக்க, இந்த சிறிய துகள்கள் தான் பெரும்பாலான பங்களிப்பை மேற்கொள்கிறது என்கிறது அறிவியல் உண்மை. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தான் இதற்கு அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது சமீபத்திய கணக்கெடுப்பு.
நாசாவின் மார்ஷல் விண்வெளி விமான மையத்தின் பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சி சங்கத்தின் (யுஎஸ்ஆர்ஏ) விஞ்ஞானி பவன் குப்தா கூறும்போது:-
ஊரடங்கின் போது பல இடங்களில் வளிமண்டல அமைப்பில் மாற்றங்களைக் காண்போம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் இந்த ஆண்டு இந்தோ-கங்கை சமவெளியில் ஏரோசல் மதிப்புகள் மிகக் குறைவாக இருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை, இது நம்பமுடியாத உண்மையாக உள்ளது என்று கூறி உள்ளார்.
No comments:
Post a Comment