பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை: (14.04.2020)
இன்றுடன் லாக்டவுன் நிறைவடையும் நிலையில் மேலும் 19 நாட்கள் அதாவது மே 3 வரை நாடு முழுவதும் கொரோனாவை தடுக்கும் விதமாக நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கான உரையில் அறிவிப்பு.
ஏப்ரல் 20 வரை ஊரடங்கை மிகவும் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும். ஏப்ரல் 21 க்கு பிறகு சில பகுதிகளுக்கு தளர்வு அளிக்கப்படும்.
கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்படும் பகுதிகளுக்கு ஏப்ரல் 21 க்கு பிறகு தளர்வு அளிக்கப்படும்.
ஏப்ரல் 20 க்கு பின்பு சில நிபந்தனைகளுடன் தளர்வு அளிக்கப்படும்.ஊரடங்கு உத்தரவை மீறினால் தளர்வு ரத்து செய்யப்படும் என பிரதமர் மோடி எச்சரிக்கை.
ஆரோக்கிய சேது மொபைல் செயலியினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊரடங்கு தொடர்பான விரிவான வழிகாட்டி விதிமுறைகள் நாளை வெளியிடப்படும்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் போன்று செயல்பட்டு வருகின்றனர்.
சவால் நிறைந்தது வாழ்க்கை என்பதற்கு சட்டமேதை அம்பேத்கரின் வாழ்க்கையை உதாரணம்.
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.
தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை மக்கள் வீட்டிலேயே இருந்து கொண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது இந்தியாவில் 500 பேருக்கு கொரோனா இருந்தது.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது.
No comments:
Post a Comment