திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Tuesday, April 14, 2020

தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் இணையவழிக் கல்வி வலைதளம் அறிமுகம்

அரசுப் பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கற்றல் பணிகளைத் தொடர புதிதாக இணையவழிக் கல்வி வலைதளத்தை பள்ளிக் கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 59 ஆயிரம் பள்ளி கள் இயங்குகின்றன. இதில் 1.3 கோடி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சுமார் 5.7 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 

இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை தரப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதைத் தவிர்க்க இணையவழிக் கல்வியை ஊக்குவிக்குமாறு கல்வி நிறுவனங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியது. 

அதற்கேற்ப ஸ்வயம், பாடசாலா, தீக் ஷா உட்பட பல்வேறு கல்வி சார்ந்த வலைதளங்களும் பொது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. மேலும் ஸ்கைப், கூகுள் கிளாஸ், ஜூம் உட்பட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தனியார் பள்ளிகள் இணைய வகுப்புகளை நடத்திவருகின்றன.

இந்நிலையில், முறையான கணினி, இணையதள வசதியில்லாததால் அரசுப் பள்ளி மாணவர்கள் இணையவழிக் கல்வியை பின்பற்ற முடியாமல் தவிப்பில் ஆழ்ந்தனர். இதைத் தவிர்க்க செல் போன் மூலம் எளிய முறையில் படிக்கும் வகையிலான புதிய இணையவழிக்கல்வி வலை தளத்தை பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய அரசு அறிமுகம் செய்த கல்வி வலைதளங்களில் 80 சதவீதம் வரை உயர்கல்வி தொடர்பானதாக உள்ளதாகவும், பள்ளி மாணவர்களுக்கான தீக் ஷா செயலியை செல்போன் வழியாக பயன்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளதாகவும் மாணவர்கள், ஆசிரியர்கள் தரப் பில் தெரிவிக்கப்பட்டது.

மேல்நிலை வகுப்புகளை தவிர இதர அரசுப் பள்ளி மாணவர்களில் பலரிடம் கணினி வசதிகள் இல்லை. எனவே, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் கல்வி தொலைக்காட்சி வழியாக தினமும் பாடம் சார்ந்த வீடியோக்கள் பதிவேற்றப்பட்டன. 

இவை மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. அதே நேரம் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் இருப்பதால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செல்போன் விளையாட்டுகளில் பிள்ளைகளின் கவனம் மூழ்கிவிடுவதாகவும், தொடர் பொழுதுபோக்கு மனநிலையில் இருந்தால் அவர்களின் கற்றல் திறன் குறையக்கூடும் என பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் பாடங்களை கற்கும் வகையில் இணைய வழிக்கல்வி வலைதளம் (https://e-learn.tnschools.gov.in/) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் முதல்கட்டமாக 1 முதல் 12-ம் வகுப்பு வரையான அனைத்து பாடங்களும் வீடியோ வடிவில் பதிவேற்றப்பட்டுள்ளன. இதை செல்போன் வழியாகவே யாருடைய உதவியும் இன்றி மாணவர்கள் எளிய முறையில் கற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தளத்தை ஆசிரியர்கள், மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்தகட்டமாக பாடக்கருத்துகள் தொடர்பாக மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களை வலைதளம் மூலம் சேகரித்து பதில்களை பதிவேற்றவும், இதர பாடம் சாராத பொது அறிவு, வரலாற்று நிகழ்வுகள், ஆங்கிலத்தில் தவறின்றி எழுதும் பயிற்சி, அறிவியல் வளர்ச்சி உட்பட இதர கற்றல் அம்சங்கள் சார்ந்த வீடியோக்களும், கல்வியாளர்களின் வழிகாட்டுதல், மனநல ஆலோசனைகள், பள்ளி குழந்தைகளுக்கான கதைகளும் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், செல்போன் வசதியில்லாத மாணவர்கள் தங்கள் வீட்டில் உள்ள கல்வி தொலைக்காட்சி வழியாக கற்றல் பணிகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment