திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Wednesday, October 9, 2019

முடிவுக்கு வந்தது Jio வின் இலவச அழைப்பு.. மற்ற நெட்வொர்க்குடன் பேசினால் நிமிடத்திற்கு 6 காசு..ஜியோ அறிவிப்பு

இனி ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைத்தால் நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூளிக்கப்படும்.

அதேவேளை, ஜியோ டூ ஜியோ அழைப்புகள் முற்றிலும் இலவசம் எனவும், அழைப்பு கட்டணத்திற்கு ஏற்ப கூடுதலாக டேட்டா வழங்கவும் ஜியோ முடிவெடுத்துள்ளது.

நாடு முழுவதும் அனைத்து நெட்வொர்கிற்கும் இலவச அழைப்புகள் என்ற அறிவிப்புடன் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ கடந்த செப்டம்பர் 2016ங முதல் இலவசமாக அழைப்புகளை வழங்கி வந்தது. இந்நிலையில், இன்றைக்கு வெளியிட்ட அறிக்கையில் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அழைத்தால் நிமிடத்திற்கு 6 பைசா கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல், சந்தையிலிருந்து வெளியேறிய ஏர்செல் போன்ற நிறுவனங்கள் ஜியோ வருகைக்குப் பின்னர் கடுமையான நிதி சிக்கலில் தவித்து வருகின்றது.

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனமான ட்ராய் இடம் அவர்கள் புகார் அளித்தனார். அந்த புகாரின் அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோவிற்கு ட்ராய் புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

ஜியோ சிம் கார்டில் இருந்து மற்றொரு ஜியோ சிம்மிற்கு போன் செய்தாலோ, லேன் லைண்ட்க்கு போன் செய்தாலோ இந்த கட்டணம் கிடையாது. அதேபோல், வாட்ஸ் அப், பேஸ்டைம் உள்ளிட்ட கால்களுக்கும் கட்டணம் கிடையாது. வழக்கம் போல் மற்ற நெட்வொர்கில் இருந்து வரும் கால்கள் இலவசம்தான்.

இருப்பினும், வாய்ஸ் கால்க்கு செலுத்தும் இந்த கட்டணத்திற்கு இணையாக டேட்டா இலவசமாக வழங்கப்படும் எனவும் ரிலையன்ஸ் ஜியோ தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Flash News : பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு!


பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தீபாவளி தினத்தை முன்னிட்டு வரும் அக்., 26, 27 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை.

அக்., 28 ம் தேதி வேலைநாள் என்பதால், அந்த நாளில் விடுமுறை விட விரும்பும் பள்ளிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் அனுமதிப்பெற்று விடுமுறை விடலாம். அவ்வாறு வேலைநாளில் விடுமுறை விடும் பள்ளிகள், ஏதேனும் ஒரு சனிக்கிழமை பள்ளி வேலைநாளாக அறிவிக்கலாம். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு என அறிவிப்பு


DEO TO CEO PROMOTION & TRANSFER ORDER





Tuesday, October 8, 2019

வந்துவிட்டது இந்தியாவின் "NAVIC" நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் ! உங்கள் மொபைலில்

இந்திய அரசு தொழில்நுட்பம் மற்றும் நாட்டின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அதிரடியான முடிவினை எடுத்துள்ளது. இந்தியா முழுவதும் தற்போது போக்குவரத்து மற்றும் இருப்பிடத்தை அறிய அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான GPS அமைப்பை தான் பயன்படுத்தி வருகிறோம்.

இதன் உதவியுடன்தான் கூகுள் மேப் உள்ளிட்ட அனைத்து ஆப்களும் இயங்கி வருகின்றன. மேலும் இவற்றின் மூலம் தற்போது இந்தியாவின் அனைத்து இருப்பிடங்களும் அண்டை நாடுகளுக்கும் குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் தெரியும் வகையில் அமைந்து விட்டது. வளர்ந்த நாடுகளான ரஷியா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா ஆகியவை தங்களுக்கு என்று பிரத்தியேக புவி சார் இருப்பிட அமைப்பை தங்கள் நாடுகளில் பயன் படுத்தி வருகின்றன.

அமெரிக்காவின் ஜி.பி.எஸ் தவிர ரஷ்யாவின் க்ளோனாஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் கலிலியோ, சீனாவின் பெய்டோ ஆகிய இருப்பிடத்தை அறியும் செயற்கைக்கோள் அமைப்புகள் உள்ளன. எனவே இந்தியாவும் தனது நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கடந்த 2017- ம் ஆண்டு ₹ 1470 கோடி செலவில் IRNSS 1-G செயற்கைகோளை விண்ணில் ஏவி இந்தியாவிற்கு என்று பிரத்தியேகமான பயன்பாடான NaviC எனப்படும் இருப்பிட பயன்பாட்டு முறையை கொண்டுவந்தது.

இதன்மூலம் இந்தியா மற்றும் இந்தியர்கள் பிற நாட்டவர்களின் உதவியில்லாமல் தங்கள் நாட்டின் NAVIC தொழிநுட்பத்தை பயன்படுத்து 5 மீட்டர் அக்குரஸி உடன் 1500 கிலோமீட்டர் தொலைவை கடக்கலாம் எனும் மிக பெரிய சாதனையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ நிகழ்த்தியது. அமெரிக்காவின் தயாரிப்பான GPS அக்குரஸி 20-30 மீட்டர் ஆகும்.

அதனை தொடர்ந்து நாடுமுழுவதும் NAVIC பயன்படுத்துவது குறித்தும், அதனை நடைமுறை படுத்துவது குறித்தும் அதனால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்தும் மத்திய அரசு ஆராய்ந்து வந்தது, தற்போது அதில் அதிரடி முடிவினை எடுத்துள்ளார் மோடி, வருகிற 2020 – ஆண்டில் இருந்து இந்தியாவில் அனைத்து செயல்பாடுகளும் செல்போன், மேப், போக்குவரத்து, கடல் பயணம், விமானப்பயணம், இராணுவ பயன்பாடு உள்ளிட்ட அனைத்திலும் நமது தயாரிப்பான NAVIC செயல்பாட்டிற்கு வர இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஒரு நாடு வல்லரசு ஆவதற்கு முன்பு மற்ற நாடுகளின் உதவியின்றி அனைத்திலும் தன்னிறைவு பெறவேண்டும் அதனை கருத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு அதிரடியாக பல மாற்றங்களை செய்து வருகிறது. தற்போது மத்திய அரசின் இந்த திட்டத்தால் நாடு பாதுக்காப்பு அடைவது மட்டுமல்லாமல், ஆண்டிற்கு $45 மில்லியன் டாலர் பணம் மிச்சமாகும் என்றும் அது இந்தியாவிற்கு கிடைக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அதிரடியை தொடர்ந்து நமது செல்போன் முதல் அனைத்திலும் இனி இந்தியாவின் தயாரிப்பான NAVIC இடம்பெறும் ஒவ்வொரு இந்தியர்களும் பெருமை படக்கூடிய நிகழ்வு இது.

Monday, October 7, 2019

மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு

உலகின் உயரிய விருதாக மதிக்கப்படும் நோபல் பரிசு, இயற்பியல், மருத்துவம், அமைதி, வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்): நடப்பாண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வில்லியம் ஜி கலின், சர் பீட்டர் ஜெ.ரேட்கிளிஃப், கெர்க் எல்.செமென்ஸ் ஆகிய மூவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் உயரிய விருதாக மதிக்கப்படும் நோபல் பரிசு, இயற்பியல், மருத்துவம், அமைதி, வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மருத்துவத்துக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று (அக்.,07ஆம் தேதி) அறிவிக்கப்பட்டது. இயற்பியல், வேதியல் துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் நோபல் பரிசுகள் அறிவிக்கப்படவுள்ளது.

அதன்படி, 2019ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வில்லியம் ஜி கலின், சர் பீட்டர் ஜெ.ரேட்கிளிஃப், கெர்க் எல்.செமென்ஸ் ஆகிய மூவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிராண வாயுவை திசுக்கள் எப்படி எடுத்து கொள்கின்றன என்பது பற்றிய ஆய்வுக்காக நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

QUESTION AND ANSWER CHALLENGE FOR THE POST OF FOREST WATCHER