மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு
உலகின் உயரிய விருதாக மதிக்கப்படும் நோபல் பரிசு, இயற்பியல், மருத்துவம், அமைதி, வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்): நடப்பாண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வில்லியம் ஜி கலின், சர் பீட்டர் ஜெ.ரேட்கிளிஃப், கெர்க் எல்.செமென்ஸ் ஆகிய மூவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் உயரிய விருதாக மதிக்கப்படும் நோபல் பரிசு, இயற்பியல், மருத்துவம், அமைதி, வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மருத்துவத்துக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று (அக்.,07ஆம் தேதி) அறிவிக்கப்பட்டது. இயற்பியல், வேதியல் துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் நோபல் பரிசுகள் அறிவிக்கப்படவுள்ளது.
அதன்படி, 2019ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வில்லியம் ஜி கலின், சர் பீட்டர் ஜெ.ரேட்கிளிஃப், கெர்க் எல்.செமென்ஸ் ஆகிய மூவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிராண வாயுவை திசுக்கள் எப்படி எடுத்து கொள்கின்றன என்பது பற்றிய ஆய்வுக்காக நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment