திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Friday, October 11, 2019

பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி!

ஆசிரியர்களின் பிள்ளைகள் எந்த பள்ளியில் படிக்கின்றனர் என்பதை பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


   அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் தான் படிக்கிறார்களா என்பது பற்றிய விபரங்களைப் பதிவு செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்த விவகாரம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வியில் பாடத்திட்டம் மாற்றம், தேர்வு முறை மாற்றம், புதிய கட்டமைப்பு, தொழில்நுட்ப மேம்பாடு என அடுத்தடுத்து மாற்றங்களை பள்ளிக் கல்வித்துறை செய்து வருகிறது. அந்த வகையில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தங்களது பிள்ளைகள் அரசுப் பள்ளியில் தான் படிக்கிறார்களா அல்லது வேறு பள்ளிகளில் படிக்கிறார்களா என்பது பற்றிய விபரங்களைப் பதிவு செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது.

முன்னதாக அரசுப்பள்ளி நிர்வாகத்தை ஒன்றிணைக்கும் வகையில், கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு - இமிஎஸ் எனப்படும் இ-கவர்னன்ஸ் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் ஆசிரியரின் சுயவிவரங்கள், கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் பதிவாகியுள்ளது. தற்போது இமிஎஸ் தளத்தில், அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் பற்றிய விபரங்களையும் பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரையில், 1% ஆசிரியர்கள் கூட தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைப்பதில்லை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் கூறுகிறது. இது பற்றிய செய்தியைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும். மேலும், இது தொடர்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மன்றத்தின் பொதுச்செயலாளர் மீனாட்சி கூறுகையில்,

‘ஆசிரியர்கள் மட்டுமில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட அனைத்து அரசு அலுவலர்களும் தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும். அப்போது தான் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் மிகச்சிறப்பாக செயல்படும். ஆனால், இப்போது உள்ள சூழலில், பெரும்பாலான அரசுப்பள்ளிகள் வெறும் இரண்டே இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். சரியான உள்கட்டமைப்பு வசதி கிடையாது. கழிப்பிட வசதி கிடையாது. அரசுப்பள்ளிகள் தரம் கெட்டுப் போவதற்கு இதுவே முதன்மையான காரணம்.

No comments:

Post a Comment