திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Wednesday, October 9, 2019

முடிவுக்கு வந்தது Jio வின் இலவச அழைப்பு.. மற்ற நெட்வொர்க்குடன் பேசினால் நிமிடத்திற்கு 6 காசு..ஜியோ அறிவிப்பு

இனி ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைத்தால் நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூளிக்கப்படும்.

அதேவேளை, ஜியோ டூ ஜியோ அழைப்புகள் முற்றிலும் இலவசம் எனவும், அழைப்பு கட்டணத்திற்கு ஏற்ப கூடுதலாக டேட்டா வழங்கவும் ஜியோ முடிவெடுத்துள்ளது.

நாடு முழுவதும் அனைத்து நெட்வொர்கிற்கும் இலவச அழைப்புகள் என்ற அறிவிப்புடன் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ கடந்த செப்டம்பர் 2016ங முதல் இலவசமாக அழைப்புகளை வழங்கி வந்தது. இந்நிலையில், இன்றைக்கு வெளியிட்ட அறிக்கையில் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அழைத்தால் நிமிடத்திற்கு 6 பைசா கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல், சந்தையிலிருந்து வெளியேறிய ஏர்செல் போன்ற நிறுவனங்கள் ஜியோ வருகைக்குப் பின்னர் கடுமையான நிதி சிக்கலில் தவித்து வருகின்றது.

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனமான ட்ராய் இடம் அவர்கள் புகார் அளித்தனார். அந்த புகாரின் அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோவிற்கு ட்ராய் புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

ஜியோ சிம் கார்டில் இருந்து மற்றொரு ஜியோ சிம்மிற்கு போன் செய்தாலோ, லேன் லைண்ட்க்கு போன் செய்தாலோ இந்த கட்டணம் கிடையாது. அதேபோல், வாட்ஸ் அப், பேஸ்டைம் உள்ளிட்ட கால்களுக்கும் கட்டணம் கிடையாது. வழக்கம் போல் மற்ற நெட்வொர்கில் இருந்து வரும் கால்கள் இலவசம்தான்.

இருப்பினும், வாய்ஸ் கால்க்கு செலுத்தும் இந்த கட்டணத்திற்கு இணையாக டேட்டா இலவசமாக வழங்கப்படும் எனவும் ரிலையன்ஸ் ஜியோ தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment