நோபல் தேர்வு குழுவின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டதால், 2018ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு 2019ஆம் ஆண்டுடன் சேர்த்து வழங்கப்படும் என நோபல் அறக்கட்டளை அறிக்கை வெளியிட்டது
ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்): பாலியல் புகார் காரணமாக கடந்த ஆண்டில் விடுபட்ட இலக்கியத்துக்கான நோபல் பரிசு நடப்பாண்டுடன் சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் உயரிய விருதாக மதிக்கப்படும் நோபல் பரிசு, இயற்பியல், மருத்துவம், அமைதி, வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மருத்துவம், வேதியியல் துறைக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த பீட்டர் ஹேன்ட்கேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 2018அம் ஆண்டுக்கான இலக்கியதுக்கான நோபல் பரிசு போலந்து நாட்டை சேர்ந்த ஓல்கா டோகார்சுக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியதுக்கான நோபல் பரிசு பெறும் நபரை தேர்ந்தெடுத்து பரிந்துரைக்கும் பணியை ஸ்வீடன் இலக்கிய அகாடமி மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டில் இந்த அகாடமியின் உறுப்பினர் ஒருவரது கணவர் மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டு பூதாகரமானது.
அத்துடன் நோபல் தேர்வு குழுவின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டதால், 2018ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு 2019ஆம் ஆண்டுடன் சேர்த்து வழங்கப்படும் என நோபல் அறக்கட்டளை அறிக்கை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment