திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Wednesday, October 23, 2019

முக்கிய அறிவிப்பு.. TNPSC Group 2 தேர்வு பாடத்திட்டத்தில் மேலும் சில மாற்றங்கள்..

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி, குரூப் 2, குரூப் 2ஏ ஆகிய தேர்வுக்கான பாடத்திட்டங்களை மாற்றியமைத்தது. 

(அந்த செய்தியை படிக்க இங்கு க்ளிக்செய்யவும்) இதற்கு முன்பு முதல்நிலைத் தேர்வில் முதல் தாளில் இருந்த மொழிப்பாடம் நீக்கப்பட்டது. அதற்குப் பதிலாக திறனறிவு பாடம் புகுத்தப்பட்டது. மேலும், நீக்கப்பட்ட மொழிப்பாடம் பொது அறிவு பகுதியுடன் இணைக்கப்பட்டது.


இதற்கு மொழி ஆர்வலர்கள், தேர்வர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, டி.என்.பி.எஸ்.சி தரப்பில் இருந்து, குரூப் 2 தேர்வு பாடத்திட்டம் மாற்றியமைத்தற்கான காரணம் குறித்து விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த செய்தியை காண இங்கு க்ளிக் செய்யவும். இருப்பினும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 பாடத்திட்டம் மாற்றம் செய்ய்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது டி.என்.பி.எஸ்.சி நேற்று (அக்டோபர் 21) புதிதாக அறிவிக்கை ஒன்று வெளியிட்டது. அதன்படி, குரூப் 2 பாடத்திட்டத்தில் மேலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய பாடத்திட்டத்தின் வினாத்தாள் மாதிரி இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

முதல்நிலைத் தேர்வு அதாவது பிரிமலனரி தேர்வு:

முதல்நிலைத்தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. செப்டம்பர் இறுதியில் வெளியிடப்பட்ட புதிய பாடத்தின்படியே தான் இருக்கும். இருப்பினும், எந்த பகுதியில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் என்ற தலைப்பின் கீழ் உள்ள அலகுகள் VIII, IX ஆகியவற்றில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும்.



முதன்மை தேர்வு (அ) மெயின் தேர்வு :

இதுவரையில் முதன்மை எழுத்துத் தேர்வானது ஒரே தேர்வாக, அதாவது ஒரே தாளாக இருந்து வந்தது. தற்போது அதனை தாள் 1, தாள் 2 என இரண்டாகப் பிரித்து நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் தாள் 1 பட்டப்படிப்பில் இருந்து பத்தாம் வகுப்பு தரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தாள் 2 பட்டப்படிப்பு தரத்தில் உள்ளது. மிகமிக முக்கியமாகத் தாள் 1 ல் குறைந்தது 25 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தாள் 2 மதிப்பீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



TNPSC Group 2 New Syllabus தாள் 1:

தாள் 1 இல் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தல் என்ற தலைப்பில் 2 கேள்விகளும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தல் என்ற தலைப்பில் 2 கேள்விகளும் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 25 மதிப்பெண்கள் என மொத்தம் 4 கேள்விகளுக்கு 100 மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

TNPSC Group 2 New Syllabus தாள் 2:

தாள் 2 கேள்விகள் பட்டப்படிப்பு தரத்தில் கேட்கப்படும். மொத்தம் 3 மணி நேரம் தேர்வு நடக்கும். சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல், கடிதம் வரைதல் என மொத்தம் 5 தலைப்புகள் உள்ளது. ஒவ்வொன்றில் இருந்தும் 3 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 20 மதிப்பெண்கள். ஆக மொத்தம் 15 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் அமைகிறது.

No comments:

Post a Comment