தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியிடங்கள் அதிகமாக இருப்பதாலும், அடுத்த ஆண்டு ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதாலும் அதிக எண்ணிக்கையிலான பதவிகளுக்கு போட்டித்தேர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை இந்த வாரம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
திருக்குறள்:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
தமிழன்... டா !
Pages
title
Tuesday, December 17, 2019
Monday, December 16, 2019
வேலைவாய்ப்பை பாதிக்காத புதிய படிப்புகள்; துணைவேந்தர் வலியுறுத்தல்
வேலைவாய்ப்புக்களை பாதிக்காத வகையில் கல்லுாரிகளில் புதிய படிப்புகள் துவங்க வேண்டும் என மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன் வலியுறுத்தினார்.
இப்பல்கலையில் நடந்த கல்விப் பேரவை கூட்டத்தில் பேராசிரியர் கண்ணன், பி.எஸ்சி., மரைன் சயின்ஸ் அன்ட் ஹாஸ்பிட்டாலிட்டி&' என்பதை மரைன் ஹாஸ்பிட்டாலிட்டி சயின்ஸ் என மாற்றம் செய்ய தீர்மானத்தை கொண்டுவந்தார்.
இதற்கு சிண்டிகேட் உறுப்பினர் தீனதயாளன், &'இதுபோன்று மாற்றம் செய்யும்போது சம்மந்தப்பட்ட பாடத்திட்டத்தில் கட்டாய பகுதிகள் உரிய அளவில் இடம் பெற வேண்டும்&' என்றார்.பேராசிரியர் பொன்னுசாமி, &'எம்.ஏ., பொருளியல் பாடம், &'பொருளியல் வித் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்&' என பெயர் மாற்றம் செய்யப்பட்டதால் மதுரையில் ஒரு கல்லுாரியின் மாணவிகள் பலர் வேலை வாய்ப்பை இழந்தது சர்ச்சையானது&' என்றார்.
துணைவேந்தர் கிருஷ்ணன் பேசியதாவது:
அந்த படிப்புக்கு கட்டாயப் பகுதிகளை யு.ஜி.சி., குறிப்பிட்டிருக்கும் சதவீதம் சேர்க்க வேண்டும். புதிய படிப்பு துவங்குவதற்கு முன் இதை கல்லுாரிகள் கவனிக்க வேண்டும்.
இதுகுறித்து பல்கலை &'போர்டு ஆப் ஸ்டடிஸ்&' கவனத்திற்கு கொண்டுவர வேண்டும். டி.ஆர்.பி., டி.என்.பி.எஸ்.சி., போன்றவை அந்த படிப்புக்களை அங்கீகரித்துள்ளனவா அல்லது அதற்கு இணையான சான்று பெறமுடியுமா என கல்லுாரிகள் கண்காணித்து மாணவர் எதிர்காலம் பாதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கல்லுாரி முதல்வர்கள் பட்டியல் கல்வியியல் பல்கலை உத்தரவு
முதல்வர்களின் பெயர், அவர்களின் கல்வி தகுதி பட்டியலை தாக்கல் செய்யுமாறு, பி.எட்., கல்லுாரிகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது.
தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 700க்கும் மேற்பட்ட, பி.எட்., கல்லுாரிகள் செயல்படுகின்றன.இந்த கல்லுாரிகள், தேசிய கல்வியியல் கவுன்சில் விதிமுறைகளின் கீழ் செயல்பட வேண்டும். அதேபோல, பாடத் திட்டம், தேர்வு முறை, பேராசிரியர்கள் நியமனம் போன்றவற்றில், கல்வியியல் பல்கலைக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்.அந்த வகையில், அனைத்து கல்லுாரிகளிலும் தகுதியான முதல்வர்களை பணி அமர்த்த, கல்லுாரிகளுக்கு ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டது.
ஆனால், பல கல்லுாரிகளில் முதல்வர்களுக்கு சரியான கல்வி தகுதி இல்லை என்றும், சில கல்லுாரிகளில் முதல்வர்களே இல்லை என்றும், புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, அனைத்து கல்லுாரிகளுக்கும், பல்கலை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தங்கள் கல்லுாரிகளில் பணியாற்றும் முதல்வர்களின் பெயர், கல்வி தகுதி, அவர்களின் நியமனத்துக்கு, பல்கலையில் பெற்ற அனுமதி கடிதம் போன்றவை குறித்த விபரங்களை, வரும், 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் போர்க்கப்பல் மாணவர்கள் பார்க்க அனுமதி
துாத்துக்குடியில் கடற்படை தினத்தையொட்டி மாணவர்கள் பொதுமக்கள் போர்க்கப்பலை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டிச. 4ல் இந்திய கடற்படைதினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி டிச.14 மற்றும் 15ல் மாணவர்கள் துாத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்திற்கு வரும் கடற்படை போர்க்கப்பலை பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிச.14ல் பகல்1:00 முதல் மாலை 5:00 மணி வரையிலும் பள்ளி மாணவர்கள் பார்க்க அனுமதி. டிச.15ல் உயர் கல்வி மாணவர்கள் பொதுமக்கள் காலை 9:00 மணி முதல் 3:00 மணி வரையிலும் பார்க்கலாம்.
போர்க்கப்பலை பார்க்க வரும் மாணவர்கள் பள்ளி சீருடையில் பள்ளி முதல்வர் தலைமையாசிரியரின் முத்திரையிட்ட மாணவர் பட்டியலுடன் வரவேண்டும். அவர்களுடன் ஆசிரியர்கள் வரவேண்டும். பொதுமக்கள் மற்றும் உயர்கல்வி மாணவர்கள் ஆதார் அட்டைகளை கொண்டு வரவேண்டும். அலைபேசி பை காமிராக்கள் உள்ளே கொண்டு செல்ல அனுமதியில்லை.
விபரங்களுக்கு 73562 18196 என்ற எண் ,enccomcentvlnavy@nic.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
Sunday, December 15, 2019
SBI ATM கார்டுகள் இனி செல்லாது! அதிரடியாய் அறிவித்த ஸ்டேட் பாங்க்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
நாடு முழுவதும் வங்கியின் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுப்பது மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வது அதிகரித்து வருகிறது.
அதே போல், ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது மறைமுகமாக கேமரா பொருத்தி பின்கள் மற்றும் கார்டின் விவரங்களை அறிந்து எளிதாக பணம் திருடப்படுகிறது.
இதனை தடுப்பதற்காக அனைத்து வங்கிகளும்,இஎம்வி சிப் பொருத்தப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்நிலையில், மேக்னடிக் ஸ்ட்ரிப் கொண்ட ஏடிஎம் கார்டுகள் எளிதாக ஹேக் செய்ய முடியும் என்பதால், பாதுகாப்பு கருதி எஸ்பிஐ ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படிசிப் பொருத்தப்படாத அனைத்துக் கார்டுகளையும் டிசம்பர் 31ஆம் தேதியோடு முடக்கவுள்ளதாகவும், அதன் பின்பு பழைய சிப் பொருத்தப்படாத கார்டுகளை ஏடிஎம் மற்றும் எந்தவிதப் பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்த முடியாது எனவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
புதிய ஏடிஎம் கார்டுகளை வாங்க வங்கிக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது எஸ்பிஐ யோனோ ஆப், ஆன்லைன் பேங்கிங் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்கும் முன் உங்களது வீட்டு முகவரி சரியாக உள்ளதா என்பதையும் சரிப்பார்த்துக் கொள்ளவும். மேலும் வங்கிகளில் நேரடியாகச் சென்று விண்ணப்பிப்பவர்கள் நீங்கள் எந்த கிளையில் கணக்குத் தொடங்கினீர்களோ அங்கு சென்று தான் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு எந்தவித கட்டணமும் கிடையாது என எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.
1முதல் 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு மதிப்பீடு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பாடங்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் விதம் தொடர்பாக சுய மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவர்களிடம் தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பீடு செய்யப்படுவது போன்று ஆசிரியர்களிடமும் சுய மதிப்பீடு மேற்கொள்ள கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கின்ற ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் இதில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் சென்று ஆசிரியர்கள் தங்களின் பெயர், யூசர்நேம் ஆகியவற்றை பதிவு செய்து ‘பெர்பாமன்ஸ் இன்டிகேட்டர்’ பிரிவில் சென்று ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் வகுப்பு மற்றும் பாடத்தை தேர்வு செய்து தகவல்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் அதை தொடர்ந்து வரும் மதிப்பீடுகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாட புத்தகம் மற்றும் அது தொடர்புடைய கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி கற்பித்தல் மற்றும் கற்றல் பணிகளை மேற்கொள்ளுதல், கற்பித்தல் கற்றல் செயல்பாட்டில் எல்லா குழந்தைகளையும் ஒரு சேர ஈடுபடுத்துதல், குழந்தைகள் வகுப்பறை சூழலை ரசிக்கும் வகையில் கற்றல் செயல்பாடுகள் திட்டமிடுதல், அனைத்து குழந்தைகளாலும் எதிர்பார்க்கப்படும் வகையில் கற்றல் முடிவு அமையும் வகையில் பாட குறிப்புகள் தயார் செய்தல், கற்றல் திறன் குறைந்த குழந்தைகள் மீது கவனம் செலுத்துதல், பாடத்தில் உள்ள உள்ளடக்கத்தை குழந்தைகளுக்கு சரியான எடுத்துகாட்டுகளுடன் புரிய வைத்தல் உள்ளிட்ட 8 அம்சங்கள் தொடர்பாக கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியிருக்கும்.
இதில் ஒரு கேள்விக்கு நான்கு விதமான எதிர்பார்ப்புகள் உள்ளன. எதிர்பார்ப்புக்கு கீழ், நெருக்கமாக, பூர்த்தி செய்தல், மீறுகிறது என்பது ஆகும். இதன் மூலம் ஆசிரியர்களின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மதிப்பீடுகள் செய்யப்படும் என்றும், தொடர்ந்து மதிப்பீடுகள் குறைவாக இருப்போருக்கு பயிற்சி அளித்தல், அவர்களை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல் போன்றவையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தலைமை ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 10ம் வகுப்பிற்கு அரையாண்டுத் தேர்வுகள் இன்று முதல் டிசம்பர் 23 தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 11ம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கியுள்ளது. அரையாண்டு தேர்விற்கு 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் ஒரே மாதிரியாக வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது.
9ம் வகுப்பு அரையாண்டு தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், வினாத்தாள்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தினமும் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் அன்றைய பாடத்துக்கான வினாத்தாள் கட்டுக்களை வினாத்தாள் பயிற்று மையத்தில் மட்டுமே பொறுப்பான ஆசிரியர் அல்லது பணியாளரை அனுப்பி பெற்றுக் கொள்ள வேண்டும்.
வினாத்தாள்களை பெற்றுக் கொண்ட நேரம் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஒரு தேர்வு அறைக்கு 20 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் நாளில், ஒரு அறைக்கு 10ம் வகுப்பில் 10 மாணவர்களும், 12ஆம் வகுப்பில் 10 மாணவர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
தினசரி வினாத்தாள் இணை தலைமை ஆசிரியரின் நேரடி பார்வையில் வழங்கப்பட வேண்டும்.
9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் பொதுத்தேர்வு போலவே கண்டிப்புடனும், தேர்வு முறைகேடுகள் இல்லாத வகையிலும் நடைபெற வேண்டும். புகார்கள் செய்யப்பட்டால் பள்ளி தலைமை ஆசிரியர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். 10, 12ம் வகுப்பு அரையாண்டு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் பாதுகாப்பான முறையில் உரிய நேரத்தில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகளை தேர்வுத் துறை விடுத்துள்ளது.
இலவச மடிக்கணினி பெற 16-ஆம் தேதி கடைசி நாள்.!!
2017-18 மற்றும் 2018-19 -ஆம் ஆண்டுகளில் பயின்ற மாணவர்கள், இலவச மடிக்கணினி பெற 16-ஆம் தேதி கடைசி நாள்.
பள்ளிக்கல்வித்துறை
பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குனர் சுகன்யா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 16ஆம் தேதிக்குள் கூடுதலாக இலவச மடிக்கணினிகள் தேவைப்பட்டால் அவற்றை பெறுவதற்கு தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மடிக்கணினிகள் மீதம் இருந்தால் அது குறித்த விவரங்களை 17ஆம் தேதிக்குள் பள்ளிக் கல்வித் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்
உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பள்ளி மாணவர்கள் 16ஆம் தேதிக்குள் இலவச மடிக்கணினி பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Saturday, December 14, 2019
தமிழகத்தில் புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்!!
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட அரசுப் பள்ளிகள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள். ஏற்கெனவே இந்தியாவில் 1094 கேந்திர வித்யாலய பள்ளிகளும், வெளிநாடுகளில் மூன்று பள்ளிகளும் அமைந்துள்ளன.
இந்தப் பள்ளிகள் அனைத்தும் மத்திய அரசுப் பாடத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. பொதுவான பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகள் பின்பற்றப்படுவதால் வேறு பள்ளிகளுக்கு மாறினாலும் குழந்தைகளின் கல்வித் தரம் இதனால் பாதிப்படைவது இல்லை.
நாடு முழுவதும் 50 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளை நிறுவப் போவதாக 2019 ஆம் ஆண்டு மார்ச் 7 ம் தேதி அரசாணை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது, இந்த 50 பள்ளிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 4 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள் அமைக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அமைய உள்ள 4 பள்ளிகளில் கோவை , மதுரை , சிவகங்கை ,திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைய உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)


