முதல்வர்களின் பெயர், அவர்களின் கல்வி தகுதி பட்டியலை தாக்கல் செய்யுமாறு, பி.எட்., கல்லுாரிகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது.
தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 700க்கும் மேற்பட்ட, பி.எட்., கல்லுாரிகள் செயல்படுகின்றன.இந்த கல்லுாரிகள், தேசிய கல்வியியல் கவுன்சில் விதிமுறைகளின் கீழ் செயல்பட வேண்டும். அதேபோல, பாடத் திட்டம், தேர்வு முறை, பேராசிரியர்கள் நியமனம் போன்றவற்றில், கல்வியியல் பல்கலைக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்.அந்த வகையில், அனைத்து கல்லுாரிகளிலும் தகுதியான முதல்வர்களை பணி அமர்த்த, கல்லுாரிகளுக்கு ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டது.
ஆனால், பல கல்லுாரிகளில் முதல்வர்களுக்கு சரியான கல்வி தகுதி இல்லை என்றும், சில கல்லுாரிகளில் முதல்வர்களே இல்லை என்றும், புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, அனைத்து கல்லுாரிகளுக்கும், பல்கலை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தங்கள் கல்லுாரிகளில் பணியாற்றும் முதல்வர்களின் பெயர், கல்வி தகுதி, அவர்களின் நியமனத்துக்கு, பல்கலையில் பெற்ற அனுமதி கடிதம் போன்றவை குறித்த விபரங்களை, வரும், 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment