திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Sunday, December 8, 2019

திட்டமிட்டபடி 27, 30-ந் தேதிகளில் வாக்குப்பதிவு: மனு தாக்கல் நாளை தொடக்கம் - புதிய தேர்தல் அட்டவணை அறிவிப்பு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் நடை பெறும் என்றும், இதற் கான மனு தாக்கல் 6-ந் தேதி தொடங்கும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2-ந் தேதி அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, 4 மாவட்டங்களை பிரித்து 9 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதால் அந்த மாவட்டங்களில் வார்டு மறுவரையறை, சுழற்சி முறை இடஒதுக்கீடு பணிகளை முடித்த பின்னரே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும், 2-ந் தேதி வெளியிடப்பட்ட தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, 4 மாவட்டங்களை பிரித்து 9 மாவட்டங்களை உருவாக்கியதன் அடிப்படையில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர மற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தமிழக அரசின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மேற்கண்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அனுமதி வழங்கி கடந்த 6-ந் தேதி தீர்ப்பு கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக் கான மாற்றி அமைக்கப்பட்ட தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி நேற்று வெளியிட்டார்.

அதன்படி 9 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் ஏற்கனவே திட்டமிட்டபடி வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜனவரி 2-ந் தேதி நடைபெற உள்ளது.

ஆனால் வேட்பு மனுதாக்கல், பரிசீலனை, திரும்பப் பெறும் நாள் ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி வேட்புமனு தாக்கல் நாளை (திங்கட் கிழமை) தொடங்குகிறது.

புதிய தேர்தல் அட்ட வணையை வெளியிட்டு இரா.பழனிசாமி கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கப்பட்ட வழக்கில் கடந்த 6-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் 2 கட்டங்களாக வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு நடைபெறும்.

இதற்கான தேர்தல் அறிவிக்கை வருகிற 9-ந் தேதி (நாளை) வெளியிடப்படும். அன்றே வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய 16-ந் தேதி கடைசி நாள் ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17-ந் தேதி நடைபெறும். போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை 19-ந் தேதி திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

தேர்தல் நாள் அன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் முடிவடையும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும்.

ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடைபெறும். அதன்படி 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சி தலைவர்கள் பதவியிடங்கள் மற்றும் 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு நேரடியாக தேர்தல் நடைபெறும்.

கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் இல்லாமல் நடைபெறும். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் நடைபெறும்.

முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்கள், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிடங்களுக்கு வருகிற 27-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

இரண்டாவது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 4 ஆயிரத்து 924 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்கள், 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு வருகிற 30-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

முதல் கட்ட வாக்குப்பதிவு 24 ஆயிரத்து 680 வாக்குச் சாவடிகளிலும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு 25 ஆயிரத்து 8 வாக்குச்சாவடிகளிலும் என மொத்தம் 49 ஆயிரத்து 688 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.

ஊராட்சி தேர்தலுக்காக 702 தேர்தல் நடத்தும் அதிகாரிகள், 13 ஆயிரத்து 62 உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் ஒரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8 தேர்தல் அலுவலர்கள் வீதம் சுமார் 4 லட்சத்து 2 ஆயிரத்து 195 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதம் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களால் கண்டறியப்பட்டு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்படுவதோடு, அந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்வதுடன் இணையதள கண்காணிப்பு மூலம் பதிவு செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப் படும்.

27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியிடங்கள், 27 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர்கள் பதவியிடங்கள், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியிடங்கள், 314 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பதவியிடங்கள், 9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவியிடங்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 306 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11-ந் தேதி நடைபெறும்.

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக் குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களை தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி பகுதிகளிலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள தேர்தல் நடத்தை விதிகள் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எல்.சுப்பிரமணியன் உள்ளிட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment