திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Thursday, December 19, 2019

DEE - ஆசிரியர்கள் / மாணவர்கள் எண்ணிக்கை 31.08.2019 அன்றைய நிலவரப்படி பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இயக்குநர் உத்தரவு.


மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 ன் படியும், பார்வை 2 - ல் காணும் அரசாணையின்படியும், ஒவ்வொரு ஆண்டும் காலமுறை தோறும் (Periodically) ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் செய்வது போன்று இவ்வாண்டும் 31.08.2019 - ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் மேற்கொள்வது சார்ந்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள 1 முதல் 8 படிவங்களில் ஆகஸ்டு - 2019 பள்ளி மாதாந்திர அறிக்கை மற்றும் EMIS அடிப்படையில் எவ்வித தவறுக்கும் இடமின்றி விவரங்களைப் பூர்த்தி செய்ய அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தக்க அறிவுரை வழங்குமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் மேற்குறித்த படிவங்களைப் பூர்த்தி செய்யும்போது கீழ்குறித்த அறிவுரைகளைத் தவறாமல் பின்பற்றுமாறு தெரிவிக்கப்படுகிறது .

1. ஆகஸ்டு - 2019 பள்ளி மாதாந்திர அறிக்கை ( பள்ளியின் மாணவர் வருகைப் பதிவேட்டினை ஒப்பிட்டு பார்த்து ) அடிப்படையிலும் மற்றும் EMIS அடிப்படையிலும் மாணவர்கள் பதிவின்படி படிவங்களில் விவரங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் .

2 . தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்களை அந்தந்த வகுப்புகளுக்கு மொத்தமாகக் கணக்கிட்டு வகுப்புவாரியாக அளிக்கப்பட வேண்டும்.

3 . இருமொழி , மும்மொழி என சிறுபான்மை மொழிப் பள்ளிகளுக்கு படிவங்களில் தனியாக விவரங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் .

4 . பார்வையில் காணும் அரசாணையின்படி ஆசிரியர் / மாணவர்கள் விகிதாச்சாரம் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு ஆசிரியருடன் உபரி / ஆசிரியரின்றி உபரி / கூடுதல் தேவை ஆகியவை அளிக்கப்பட வேண்டும் .

5 . படிவங்களில் அளிக்கப்படும் விவரங்கள் தவறானவை எனப் பின்னாளில் கண்டறியப்பட்டால் அதற்கு சம்மந்தப்பட்ட அலுவலர்களே பொறுப்பாவர் .

6 . மாணவர் எண்ணிக்கையில் சந்தேகம் இருப்பின் வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் கொண்ட குழு பள்ளியினை பார்வையிட்டு உறுதி செய்ய வேண்டும் .

 7 . படிவம் - 5 மற்றும் படிவம் - 6ல் சார்ந்த பள்ளியில் ஆசிரியருடன் உபரியாக உள்ள ஆசிரியர் பெயர் அன்னார் அப் பள்ளியில் சேர்ந்த நாள் மற்றும் ஓய்வு பெறும் நாள் ஆகியவை எவ்வித தவறுமின்றி பூர்த்தி செய்யப்பட வேண்டும் .

8 . ஒன்றிய அளவில் ஒட்டு மொத்தமாக ( வட்டாரக் கல்வி அலுவலர்கள் சேர்த்து ) பள்ளிகள் மற்றும் நிர்வாக வாரியாக விவரங்கள் பெறப்பட்டு வட்டாரக் கல்வி அலுவலர்கள் கையொப்பம் பெற்று சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் மேலொப்பம் செய்யப்பட வேண்டும் .

9 . மேற்படி ஒன்றிய அளவில் பெறப்பட்ட விவரங்களை பள்ளிகள் மற்றும் நிர்வாக வாரியாக கல்வி மாவட்ட அளவில் தொகுத்து சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் கையொப்பம் இடப்பட வேண்டும் .

10 . தொடக்கப் பள்ளி / நடுநிலைப்பள்ளிகள் தனித் தனியாக இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிட விவரம் , ஆசிரியருடன் உபரி , ஆசிரியரின்றி உபரி மற்றும் கூடுதல் தேவை விவரங்கள் வருவாய் மாவட்ட அளவில் தொகுத்து சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரால் தனியாக அளிக்கப்பட வேண்டும் .

மேற்குறித்த 6 - படிவங்களை கீழ்க்குறித்த கால அட்டவணையின்படி அந்தந்த மாவட்டங்கள் சார்பாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் மேற்படி பணியினை முடித்து வருவாய் மாவட்ட அளவில் தொகுத்து புத்தக வடிவில் தயார் செய்தும் குறுந்தகட்டில் பதிவு செய்தும் 31 . 12 . 2019க்குள் தனி நபர் மூலம் இவ்வியக்ககத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணய பணிக் கால அட்டவணை விவரம் : 


No comments:

Post a Comment