பள்ளி மாணவர்களை மதிப்பீடு செய்வது போல, கற்பிக்கும் விதம் தொடர்பாக ஆசிரியர்களையும் சுய மதிப்பீடு செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் இம்முறையில் மதிப்பீடு செய்யப்பட உள்ளனர். இதற்காக, 'எமிஸ்' கல்வி இணையதளத்தில் ஆசிரியர்களின், 'பெர்பாமென்ஸ் இண்டிகேட்டர்' என்ற பிரிவு கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இதில் தான் கற்பிக்கும் வகுப்பு, பாடத்தை தேர்வு செய்து தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.பாட புத்தகம், மற்றும் கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி கற்பித்தல் மற்றும் கற்றல் பணிகளை மேற்கொள்ளுதல், கற்றல் செயல்பாட்டில் அனைத்து குழந்தைகளையும் ஒருசேர ஈடுபடுத்துதல், குழந்தைகள் வகுப்பறை சூழலை ரசிக்கும் வகையில் கற்றல் செயல்பாடுகளை திட்டமிடல், பாடகுறிப்புகள் தயார் செய்தல், கற்றல் திறன் குறைந்த குழந்தைகள் மீது கவனம் செலுத்துதல், சரியான உதாரணம் கூறுதல் போன்ற கேள்வி களுக்கு பதில் அளிக்க வேண்டியிருக்கும்.
இதன்மூலம் ஆசிரியர்களின் செயல்பாடுகள் கண்காணித்து, மதிப்பீடு செய்யலாம். தொடர்ந்து மதிப்பீடுகள் குறையும்பட்சத்தில், ஆசிரியருக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என, திருப்பூர் மாவட்ட கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment