திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Thursday, December 19, 2019

DEE - ஆசிரியர்கள் / மாணவர்கள் எண்ணிக்கை 31.08.2019 அன்றைய நிலவரப்படி பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இயக்குநர் உத்தரவு.


மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 ன் படியும், பார்வை 2 - ல் காணும் அரசாணையின்படியும், ஒவ்வொரு ஆண்டும் காலமுறை தோறும் (Periodically) ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் செய்வது போன்று இவ்வாண்டும் 31.08.2019 - ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் மேற்கொள்வது சார்ந்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள 1 முதல் 8 படிவங்களில் ஆகஸ்டு - 2019 பள்ளி மாதாந்திர அறிக்கை மற்றும் EMIS அடிப்படையில் எவ்வித தவறுக்கும் இடமின்றி விவரங்களைப் பூர்த்தி செய்ய அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தக்க அறிவுரை வழங்குமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் மேற்குறித்த படிவங்களைப் பூர்த்தி செய்யும்போது கீழ்குறித்த அறிவுரைகளைத் தவறாமல் பின்பற்றுமாறு தெரிவிக்கப்படுகிறது .

1. ஆகஸ்டு - 2019 பள்ளி மாதாந்திர அறிக்கை ( பள்ளியின் மாணவர் வருகைப் பதிவேட்டினை ஒப்பிட்டு பார்த்து ) அடிப்படையிலும் மற்றும் EMIS அடிப்படையிலும் மாணவர்கள் பதிவின்படி படிவங்களில் விவரங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் .

2 . தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்களை அந்தந்த வகுப்புகளுக்கு மொத்தமாகக் கணக்கிட்டு வகுப்புவாரியாக அளிக்கப்பட வேண்டும்.

3 . இருமொழி , மும்மொழி என சிறுபான்மை மொழிப் பள்ளிகளுக்கு படிவங்களில் தனியாக விவரங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் .

4 . பார்வையில் காணும் அரசாணையின்படி ஆசிரியர் / மாணவர்கள் விகிதாச்சாரம் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு ஆசிரியருடன் உபரி / ஆசிரியரின்றி உபரி / கூடுதல் தேவை ஆகியவை அளிக்கப்பட வேண்டும் .

5 . படிவங்களில் அளிக்கப்படும் விவரங்கள் தவறானவை எனப் பின்னாளில் கண்டறியப்பட்டால் அதற்கு சம்மந்தப்பட்ட அலுவலர்களே பொறுப்பாவர் .

6 . மாணவர் எண்ணிக்கையில் சந்தேகம் இருப்பின் வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் கொண்ட குழு பள்ளியினை பார்வையிட்டு உறுதி செய்ய வேண்டும் .

 7 . படிவம் - 5 மற்றும் படிவம் - 6ல் சார்ந்த பள்ளியில் ஆசிரியருடன் உபரியாக உள்ள ஆசிரியர் பெயர் அன்னார் அப் பள்ளியில் சேர்ந்த நாள் மற்றும் ஓய்வு பெறும் நாள் ஆகியவை எவ்வித தவறுமின்றி பூர்த்தி செய்யப்பட வேண்டும் .

8 . ஒன்றிய அளவில் ஒட்டு மொத்தமாக ( வட்டாரக் கல்வி அலுவலர்கள் சேர்த்து ) பள்ளிகள் மற்றும் நிர்வாக வாரியாக விவரங்கள் பெறப்பட்டு வட்டாரக் கல்வி அலுவலர்கள் கையொப்பம் பெற்று சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் மேலொப்பம் செய்யப்பட வேண்டும் .

9 . மேற்படி ஒன்றிய அளவில் பெறப்பட்ட விவரங்களை பள்ளிகள் மற்றும் நிர்வாக வாரியாக கல்வி மாவட்ட அளவில் தொகுத்து சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் கையொப்பம் இடப்பட வேண்டும் .

10 . தொடக்கப் பள்ளி / நடுநிலைப்பள்ளிகள் தனித் தனியாக இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிட விவரம் , ஆசிரியருடன் உபரி , ஆசிரியரின்றி உபரி மற்றும் கூடுதல் தேவை விவரங்கள் வருவாய் மாவட்ட அளவில் தொகுத்து சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரால் தனியாக அளிக்கப்பட வேண்டும் .

மேற்குறித்த 6 - படிவங்களை கீழ்க்குறித்த கால அட்டவணையின்படி அந்தந்த மாவட்டங்கள் சார்பாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் மேற்படி பணியினை முடித்து வருவாய் மாவட்ட அளவில் தொகுத்து புத்தக வடிவில் தயார் செய்தும் குறுந்தகட்டில் பதிவு செய்தும் 31 . 12 . 2019க்குள் தனி நபர் மூலம் இவ்வியக்ககத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணய பணிக் கால அட்டவணை விவரம் : 


Assistant Professors for Government Arts & Science Colleges and Colleges of Education


TET தேர்வில் தேர்ச்சி பெறாத 1,747 ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் அவசர உத்தரவு!


அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளியில் இந்திய அரசால் இயற்றப்பட்ட குழந்தைகளுக்குக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 ன் பிரிவு 23(1)ல், மத்திய அரசின் அதிகாரம் பெற்ற கல்வி அமைப்பினால் நிர்ணயம் செய்யப்படும் குறைந்தபட்ச கல்வித் தகுதிகளைப் பெற்றுள்ள நபர் மட்டுமே ஆசிரியராக நியமனம் செய்யப்படத் தகுதி பெற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2008 , 2010 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறாமல் அரசு உயுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அரசாணை நிலை எண் . 181 பள்ளிக்கல்வி ( சி2 ) த் துறை நான் 15.11. 2011 முதல் ஐந்தாண்டுகளுக்குள் ( TET ) தேர்ச்சி பெறப்பட வேண்டும் என்ற நிபந்தனை வழங்கப்பட்டது நிதியுதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் நான்கு முறை தமிழக அரசால் தகுதித் தேர்வு TET நடத்தி வாய்ப்புகள் வழங்கப்பட்டும் தேர்ச்சி பெறாத 1747 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பாணைகளின் அடிப்படையில் ஊதியம் விடுவிக்கப்பட்டு நாளது தேதி வரை ஊதியம் பெற்று வழங்கப்பட்டு வருகிறது . எனவே மேற்காண் 1747 ஆரிரியர்கள் சார்ந்த விபரங்களை பூர்த்தி செய்து கீழ்காண் படிவத்தில் 20.12.2019 அன்று மதியம் 100 மணிக்குள் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Wednesday, December 18, 2019

பயிற்சி வகுப்பிற்கு வராத வாக்குப்பதிவு அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை!!

பத்திரிக்கை செய்தி

உள்ளாட்சி தேர்தல் - 2019 தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு வராத வாக்குப்பதிவு அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு.

தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், வட்டார ஊராட்சி உறுப்பினர்கள், சிற்றுராட்சி உறுப்பினர்கள் மற்றும் சிற்றுராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது .

மேற்காணும் தேர்தலுக்காக 13595 ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு 15.12.2019 அன்று முதற் கட்ட பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் 694 ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்ளாதது தெரிய வந்துள்ளது.

தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு வருகை தராத 694 ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மீது தேர்தல் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவனா மற்றும் மாவட்ட ஆட்சியர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை


அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

விடைத்தாள்களை திருத்தும் போது ஆசிரியர்கள் கவனமுடனும், சரியான முறையிலும் மதிப்பீடு செய்ய வேண்டும் என அறிவுரை கூறப்பட்டுள்ளது. மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை மற்ற ஆசிரியர்களை கொண்டு மறுகூட்டலுக்கு உட்படுத்த வேண்டும்.

மாணவர்கள் உடற்பயிற்சிக்கு தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கவேண்டும் - ஜனவரி முதல் அமல்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு !


நாட்டு மக்கள் உடல்நலனை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதை வலியுறுத்தி திறன் இந்தியா இயக்கம் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடங்கிவைத்தார் . 

அதன்படி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் அடுத்த மாதம் (ஜனவரி) முதல் மாணவர்கள் உடற்பயிற்சிக்கு தினமும் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்றும், அதற்கேற்ப பாடவேளைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு (யு . ஜி . சி) உத்தரவிட்டு இருக்கிறது .

உடற்பயிற்சிக்காக ஒதுக்கப்படும் அந்த நேரத்தில் ஓடுதல், யோகா, நீச்சல் உள்பட ஏதாவது ஒரு விளையாட்டை கல்வி  நிறுவனங்கள் தேர்வு செய்து, மாணவர்களை அதில் உட்படுத்த வேண்டும். அதற்கென்று தனியாக ஒரு மையத்தை அமைத்து, ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் கல்லூரி அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும்.

மாநில, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளிலும் மாணவர்கள் பங்கேற்பதை உயர்கல்வி நிறுவனங்கள் ஊக்கப்படுத்த வேண்டும். இதை விரைந்து அமல்படுத்திட வேண்டும். மேற்கண்ட தகவல் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

தழிழ் மற்றும் தமிழனின் பெறுமைகள்



DSE - சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதிற்கு விண்ணப்பங்களை பரிந்துரை செய்திட 30 -12 -2019 வரை காலநீட்டிப்பு!


சிறந்த அறிவியில் ஆசிரியர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 வகைப் பாடப்பிரிவுகளில் 7 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வகுப்பு எடுத்திடும் தகுதி வாய்ந்த சாதனைகள் புரிந்துள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர் . மொத்தம் 10 ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இவ்விருது வழங்கப்பட இருக்கிறது .

இவற்றுள் ஐந்து விருதுகள் தமிழ்வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும், மேலும் ஐந்து விருதுகள் பொதுப்பிரிவில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் பிரித்து வழங்கப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பித்திட மாதிரி விண்ணப்பப் படிவம் தொடர்பான விதிகள் www.sciencecitychennai.in என்ற அறிவியல் நகர இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

தங்களுடைய ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தகவலினைத் தெரிவித்து சிறந்த அறிவியல் ஆசிரியர்கள் விருது 2019 - 2020 வழங்க ஏதுவாக அறிவியல் நகரத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 வகைப் பாடப்பிரிவுகளில், பாடப்பிரிவுக்கு ஒன்று வீதம் ஒரு மாவட்டத்திற்கு 5 பாடப்பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஆசிரியர்களின் நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் தலைமை ஆசிரியர், முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு 15.09. 2019 அன்று மாலை 5.30 மணிக்குள் இணைஇயக்குநர் (தொழிற்கல்வி) பெயரிட்ட முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டது .

பார்வை 4-ல் காணும் அறிவியல் நகரம், உயர்கல்வித்துறை துணைத்தலைவர் அவர்களின் கடிதத்தில் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதிற்கு விண்ணப்பங்களை பரிந்துரை செய்திட 30-12-2019 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனவே, உடனடியாக தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளுக்கு இத்தகவலினை தெரிவித்து பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு 24.12.2019 அன்று மாலை 5.30 மணிக்குள் இணைஇயக்குநர் (தொழிற்கல்வி) பெயரிட்ட முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தெரிவிக்கப்படுகிறது .

சி.பி.எஸ்.இ.,யில் படிக்கும் மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு.


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில் படிக்கும் மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை, சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நேற்று அறிவித்தார். அதன்படி, பிப்., 15ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. பிப்., 26 வரை, தொழிற்கல்விமற்றும் விருப்ப பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள், பிப்ரவரி, 27ல் துவங்குகின்றன. பிப்., 27ல் ஆங்கில மொழி தாள் தேர்வு நடத்தப்படுகிறது. பின், படிப்படியாக முக்கிய பாடங்களுக்கு தேர்வுகள் நடக்க உள்ளன.பிளஸ் 2வுக்கு, மார்ச், 30ல் தேர்வுகள் முடிகின்றன. தேர்வுகள், காலை, 10:00 மணிக்கு துவங்கி, மூன்று மணி நேரம் நடக்க உள்ளன.

10ம் வகுப்புபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, பிப்., 15ல் துவங்க உள்ளது. பிப்., 20 வரை விருப்ப பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. அதன்பின், பிப்., 22ல் மொழி பாட தேர்வுகள் துவங்க உள்ளன.முக்கிய பாடங்களுக்கான தேர்வு, மார்ச், 4 முதல் நடத்தப்படுகிறது; மார்ச், 20ல் அனைத்து தேர்வுகளும் முடிகின்றன. இந்த தேர்வுகள், காலை, 10:30 முதல் பகல், 1:30 மணி வரை நடத்தப்பட உள்ளன.