திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Monday, January 21, 2019

பி.ஆர்க்., படிப்புக்கான நுழைவு தேர்வு

சென்னை: பி.ஆர்க்., படிப்புக்கான, நாட்டா நுழைவு தேர்வு, ஏப்ரல் மற்றும் ஜூலையில் நடக்கும் என, இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், கட்டடவியல் படிப்பான, பி.ஆர்க்.,கில் சேர, தேசிய அளவிலான, நாட்டா நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் சார்பில், நாடு முழுவதும், இந்த தேர்வு நடத்தப்படுகிறது.ஆண்டுதோறும், ஆன்லைனில் மட்டுமே இந்த தேர்வு நடத்தப்பட்டு வந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும், சில முக்கிய மையங்களில், குறிப்பிட்ட தேதிகளில், ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வு முடிந்ததும், இரண்டு மணி நேரத்தில், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதிகபட்சம், ஐந்து முறை ஆன்லைன் தேர்வில் பங்கேற்கவும், இவற்றில் பெறும் அதிகபட்ச மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை பெறவும், வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், இந்த தேர்வு முறையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக புகார்கள் எழுந்தன.இதையடுத்து, ஆன்லைன் தேர்வு முறை மாற்றப்பட்டு, தேசிய அளவில் எழுத்து தேர்வு நடத்தப்படும் என, இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வு, நாடு முழுவதும், ஒரே நாளில் நடத்தப்படுகிறது. &'நடப்பு கல்வி ஆண்டுக்கான, நாட்டா தேர்வு, இரண்டு முறை நடத்தப்படும்&' என, இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் அறிவித்துள்ளது.

இதன்படி, முதல் தேர்வு, ஏப்., 14; இரண்டாம் தேர்வு, ஜூலை, 7ல் நடத்தப்படுகிறது. இரண்டு தேர்வுகளுக்கும், ஜன., 24ல் ஆன்லைன் பதிவுகள் துவங்குகின்றன. முதல் தேர்வுக்கு, மார்ச், 3; இரண்டாம் தேர்வுக்கு, ஜூன், 12ல் பதிவுகள் முடிகின்றன. இதற்கான விபரங்களை, www.nata.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

CMC HOSPITAL VACANT AS ON 21.01.2019

மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டம் ஆண்டு பொதுத் தேர்வுகள், மார்ச் - 2019


CLICK HERE : www.dge.tn.gov.in

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வழங்கும் உதவித் தொகை

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடட் ஆண்டு தோறும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்குகிறது.
பொறியியல், மருத்துவம், எம்.பி.ஏ. முதல் ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கும், ஐ.டி.ஐ. மாணவர்களுக்கும் மிகச் சிறந்த முறையில் கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 2600 மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.
இதில் 2000 ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000மும், 300 பொறியியல் மாணவர்களுக்கும், 200 மருத்துவ மாணவர்களுக்கும் (4 ஆண்டுகளுக்கு), 100 எம்.பி.ஏ. மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கும் மாதந்தோறும் ரூ.2000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
மேலும், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், மாணவிகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மேலும் தகவல்களுக்கு www.iocl.com இணையதளத்தை காணவும்.

அறிவோம் ஏ.ஐ.எம்.ஏ.,

நாட்டின் தரமான பல்வேறு கல்வி நிறுவனங்களின் மூலம் தகுதியான மாணவர்களுக்கு, தரமான மேலாண்மை படிப்புகளை வழங்குவதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டதே ஆல் இந்தியன் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் (ஏ.ஐ.எம்.ஏ.,)
அறிமுகம்:
இந்திய அரசின் முதல் தொழில்மயமாக்கல் கொள்கையின் ஒரு அங்கமாக 1957ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பே இந்த அமைப்பு, நாடு முழுவதிலும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்களை 67 அங்கீகரிக்கப்பட்ட மேலாண்மை சங்கங்களைக் கொண்டுள்ளது. லாப நோக்கமின்றி தொழில் வளர்ச்சி, கல்வியியல் மேம்பாடு மற்றும் மாணவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவது எனக் கடந்த 60 ஆண்டுகளாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் தன்னிகரற்ற பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது. முதுநிலை மேலாண்மை பட்டப்படிப்பிற்கான ‘மேட்’ எனப்படும் தேசிய தகுதி தேர்வினையும் இது நடத்துகிறது.

செயற்பாடுகள்:
* தேர்வுகள், தொலைநிலை கல்விகள், திறமை மேம்பாடு மற்றும் பயிற்சிகள், ஆராய்ச்சிகள், மாநாடுகள், வெளியீடுகள், நிர்வாகக் கல்வி மற்றும் நிர்வாக மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகிய பல்வேறு சேவைகளின் மூலம் நாட்டின் மேலாண்மை கல்வி மேம்பாட்டிற்கான பங்களிப்பை வழங்குவது.
* ஆல் இந்தியன் கவுன்சில் பார் டெக்னிக்கல் எஜூகேஷன் (ஏ.ஐ.சி.டி.இ.,) உட்பட நாட்டின் பல்வேறு கொள்கை வடிவமைப்பு குழுக்களின் பிரதிநிதியாகவும் ஏ.ஐ.எம்.ஏ., விளங்கி வருகிறது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் ‘நேஷனல் போர்ட் ஆப் அக்ரிடேஷன்’ (என்.பி.ஏ.,) சங்கத்தின் தலைமை நிர்வாக அமைப்பாகவும் இது செயல்பட்டு வருகிறது.
* ஏ.ஐ.எம்.ஏ., இந்திய மேலாளர்களுக்கு சிறந்த நிர்வாக நடைமுறைகள் மற்றும் தொழில் நுட்ப பயிற்சிகளை அயல்நாட்டுத் தொழில் முறை நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் கொண்டு வருகிறது. ‘ஆசிய அசோசியேஷன் ஆப் மேனேஜ்மெண்ட் ஆர்கனைசேஷன்ஸ்’ (ஏ.ஏ.எம்.ஓ., ) அமைப்பின் ஒரு முக்கிய உறுப்பினராகவும் இது இருப்பதால் பல வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் நெருக்கமாகப் பணியாற்று வாய்ப்பும் உள்ளது.
* ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட்’ (ஐ.ஐ.எம்.,) கல்வி நிறுவனங்களைத் தவிர நாட்டின் 600க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ‘மேனேஜ்மெண்ட் ஆப்டிடியூட் டெஸ்ட்’ எனப்படும் மேட் திறனாய்வு தகுதி தேர்வினை ஆண்டிற்கு 4 முறை நடத்தி வருகிறது.
* மேட் தேர்வு மட்டுமின்றி ‘ரிசர்ச் மேனேஜ்மெண்ட் ஆப்டிடியூட் டெஸ்ட்’ (ஆர்.மேட்), ‘அண்டர் கிராட்ஜூவேட் ஆப்டிடியூட் டெஸ்ட்’ (யு.ஜி.ஏ.டி.,), ‘அக்ரிடேடட் மேனேஜ்மெண்ட் டீச்சர்’ (எம்.எம்.டி.,) மற்றும் சில தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளையும் ஏ.ஐ.எம்.ஏ., நடத்துகிறது.

மேட் தேர்வு:
பல்வேறு துறை சார்ந்த முதுநிலை மேலாண்மை படிப்பு அதாவது எம்.பி.ஏ., படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் முக்கிய தகுதிகளில் ஒன்றாக மேட் தேர்வு பார்க்கப்படுகிறது. கணினி வழி தேர்வு மற்றும் காகித வழி தேர்வு என இரு வகைகளில் நாட்டின் 50க்கும் மேற்பட்ட மையங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

விபரங்களுக்கு: www.aima.in

Integral Coach Factory Recruitment 2019 – Apply Online for 220 Apprentice Posts

Name of the Post  : Integral Coach Factory, Chennai Apprentice Online Form 2019
Post Date               : 19-01-2019
Total Vacancy        : 220

Brief Information: Integral Coach Factory, Chennai has given a notification for the recruitment of Apprentice vacancies for Graduate/ Diploma holders in Engineering (passed during 2016/2017 & 2018 ), undergoing one year Apprenticeship Training under the Apprentices (Amendment) Act 1973. Those Candidates who are interested in the vacancy details & completed all eligibility criteria can read the Notification & Apply Online.

Integral Coach Factory, Chennai 
Apprentice Vacancies 2019
Important Dates
  • Starting Date to Apply Online: 21-01-2019
  • Last Date to enrolling in NATS portal: 04-02-2019
  • Last date for applying Integral Coach Factory: 06-02-2019
  • Date for Declaration of Shortlisted list: 13-02-2019
  • Verification of certificates for shortlisted candidates: 20-02-2019
Age Limit
  • Age limit will be followed as per Apprenticeship Rules.
Qualification
  • Graduate Apprentice: Degree in Engineering or Technology in relevant discipline, in Mechanical Engineering and Electrical & Electronics Engineering.

  • Technician (Diploma) Apprentice: Diploma in Engineering or technology granted by a State Council or Board of Technical Education established by a State Government in relevant discipline.
Vacancy Details
Trade NameTotal
Graduate Apprentice100
Technician (Diploma) Apprentice120
Interested Candidates Can Read the Full Notification Before Apply
Important Links
Apply OnlineRegistration | Login
NotificationClick Here
Official WebsiteClick Here

Sunday, January 20, 2019

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு


வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அப்பதிவை புதுப்பிக்க வேண்டும். அதில், சிலர் புதுப்பிக்கத் தவறி இருக்கலாம்.

     இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை புதுப்பிக்கத் தவறியவர்கள், மீண்டும் புதுப்பிக்க தமிழக அரசு சிறப்பு சலுகை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் புதுப்பிக்க தவறியவர்கள், வருகிற 2019 ஆம் ஆண்டு ஜனவரி 24 வரை இணையதளம் வாயிலாக புதுப்பித்து கொள்ளலாம்.

மேலும், இணையதளம் வாயிலாக புதுப்பிக்க இயலாதவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தங்களது வேலை வாய்ப்பு அடையாள அட்டை மற்றும் அனைத்து சான்றிதழ்களுடன் நேரில் வந்தோ அல்லது அஞ்சல் மூலமோ புதுப்பிக்கலாம்.



JEE - மெயின் 2ம் கட்ட தேர்வுக்கு பிப்.8 முதல் விண்ணப்பம்!


ஜெஇஇ மெயின் முதல்கட்ட தேர்வு முடிந்த நிலையில் தேர்வு எழுதியவர்களும், தேர்வு எழுதாதவர்களும் இரண்டாம் கட்ட தேர்வுக்கு பிப்ரவரி 8ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். 

அகில இந்திய அளவில் இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்‌சர் நுழைவு தேர்வான ஜெஇஇ மெயின் தேர்வு முதல்முறையாக இந்த ஆண்டு இரண்டு முறை நடத்தப்படுகிறது. சிபிஎஸ்இ நடத்தி வந்த தேர்வு முதல் முறையாக நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி வாயிலாக நடத்தப்பட்டது. 8 ஸ்லாட்கள் என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்வில் முதல்கட்ட தேர்வு கடந்த 14ம் தேதியுடன் நடந்து முடிந்தது. தேர்வில் வினாக்கள் வடிவமைப்பில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பெரிய மாற்றங்கள் இல்லை. இருப்பினும் ஒவ்வொரு ஸ்லாட்டில் எழுதியவர்களும் ஒவ்வொருவிதமான அனுபவத்தை எதிர்கொண்டுள்ளனர்.

முதல்கட்ட தேர்வு எளிதாக இல்லாவிட்டாலும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தவில்லை என்று பொதுவாக தேர்வர்கள் கூறுகின்றனர். இதனால் கட் ஆப் மதிப்பெண் அளவும் கடந்த ஆண்டை போன்றே இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்தது. கணித கேள்விகள் கடந்த ஆண்டைவிடவும் கடினமாக இருந்தது. வேதியியல் எளிமையாக இருந்தது என்கின்றனர் தேர்வர்கள். என்சிஇஆர்டி புத்தகங்களில் இருந்து நேரடியாக கேள்விகள் இடம் பெற்றிருந்தன.   இந்தநிலையில் சிறப்பாக தேர்வு எழுதாதவர்கள் தங்கள் ஸ்கோர் உயர்த்திக்கொள்ளவும், முதல்கட்ட தேர்வில் பங்கேற்காதவர்கள் தேர்வு எழுதவும் வசதியாக வரும் ஏப்ரல் மாதம் மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

ஜெஇஇ இரண்டாம் கட்ட தேர்வுக்கு பிப்ரவரி 8ம் தேதி முதல் மார்ச் மாதம் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் மாதம் 6ம் தேதிக்கும், 20ம் தேதிக்கும் இடையே தேர்வு நடத்தப்படும். இரண்டு தேர்வுகளிலும் பங்கேற்றவர்களுக்கு எதில் அதிக ஸ்கோர் உள்ளதோ அதுவே தர வரிசைக்கு பரிசீலிக்கப்படும். எனவே முதல்கட்ட தேர்வு சரியாக எழுதாதோரும் அதில் உள்ள குறைபாடுகளை சரி செய்து இரண்டாம் கட்ட தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம் என்ற நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளும் வாய்ப்பாக இது அமையும்.

தேர்வை எதிர்கொள்வது எப்படி?

* முதல்கட்ட தேர்வில் பொது அறிவு பிரிவில் நாசா, ஐஎஸ்ஆர்ஒ போன்ற எழுத்துகளின் விரிவாக்கம் என்ன? என்பது போன்ற சுலபமான கேள்விகள் இடம்பெற்றிருந்தன. உங்களுக்கு விருப்பமான சினிமா கலைஞரை படமாக வரையலாம் என்றும் ஒரு கேள்வி ஆர்க்கிடெக்சர் பிரிவில் இடம்பெற்றிருந்தது. எனவே இதே வகையில் உள்ள கேள்விகள் அடுத்த தேர்விலும் வர வாய்ப்பு உள்ளது.
nசிலபஸ் முழுவதுமாக படிப்பதுடன் முதல்கட்ட தேர்வில் உள்ள 8 சிலாட்களிலும் உள்ள கேள்வித்தாள்களை சேகரித்துக்கொள்வதும், அதன் வினாவிடைகளை மையப்படுத்திக்கொள்வதும் நல்லது.

* முதல்கட்ட தேர்வில் சிக்கலை ஏற்படுத்திய கேள்விகளை குறிப்பிட்டு படிக்கலாம். ஆர்க்கிடெக்சர் பிரிவில் சாதிக்க நினைப்பவர்கள் தங்கள் கைவண்ணத்தை மேம்படுத்துவது நலம். தேர்வில் நன்றாக எழுதியவர்கள் ஸ்கோர் அதிகரிக்க புதியதாக தாங்களாகவே கேள்வித்தாள் தயார் செய்தும் படிக்கலாம்.

Saturday, January 19, 2019

பள்ளி மாணவர்களுக்கு கலையருவி போட்டி


அரசு பள்ளிகளில், வரும், 22ம் தேதி, கலையருவி போட்டிகள் நடத்துமாறு, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்திய கலை மற்றும் பண்பாட்டை மாணவர்கள் அறியும் வகையில், மத்திய மனித வள அமைச்சகம் சார்பில், 'கலா உத்சவ்' நிகழ்ச்சி, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில், பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்கலாம்.அதேபோல், தமிழகத்திலும், இரண்டாம்ஆண்டாக, வரும், 22 முதல், கலையருவி போட்டிகள் நடத்த, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

 22ல், பள்ளி அளவிலான போட்டி; 24ல், கல்வி மாவட்டபோட்டி; 28ம் தேதி, வருவாய் மாவட்ட போட்டிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதில், தேர்வாகும்மாணவர்கள், மாநில போட்டியில் பங்கேற்க வாய்ப்புஉள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஓவியம் வரைதல், பேச்சு, கட்டுரை, வண்ணம் தீட்டுதல், மெல்லிசை, குழு நடனம் உட்பட, 21 வகை போட்டிகள் நடத்தப்பட உள்ளன.ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, 25 வகை போட்டிகள் நடத்தப்படுகின்றன.

TAMIL NADU 8th STANDARD PUBLIC EXAM - 2019 TIME TABLE