திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Sunday, January 20, 2019

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு


வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அப்பதிவை புதுப்பிக்க வேண்டும். அதில், சிலர் புதுப்பிக்கத் தவறி இருக்கலாம்.

     இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை புதுப்பிக்கத் தவறியவர்கள், மீண்டும் புதுப்பிக்க தமிழக அரசு சிறப்பு சலுகை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் புதுப்பிக்க தவறியவர்கள், வருகிற 2019 ஆம் ஆண்டு ஜனவரி 24 வரை இணையதளம் வாயிலாக புதுப்பித்து கொள்ளலாம்.

மேலும், இணையதளம் வாயிலாக புதுப்பிக்க இயலாதவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தங்களது வேலை வாய்ப்பு அடையாள அட்டை மற்றும் அனைத்து சான்றிதழ்களுடன் நேரில் வந்தோ அல்லது அஞ்சல் மூலமோ புதுப்பிக்கலாம்.



No comments:

Post a Comment