திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Tuesday, January 15, 2019

அறிவோம் என்.சி.டி.இ.,

நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர் கல்வி நிறுவனங்களை நெறி முறைப்படுத்தி அதன் கல்வி தரத்தினை உயர்த்துவதன் மூலம் ஒருங்கிணைந்த முறையான வளர்ச்சியைக் காண முடியும் என்பதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்ட அமைப்பே, என்.சி.டி.இ., எனப்படும் தேசிய ஆசிரியர் கல்விக் குழு.

அறிமுகம்:

‘நேஷனல் கவுன்சில் பார் டீச்சர் எஜூகேஷன்’ என்கிற இந்த அமைப்பிற்கென 1993ம் ஆண்டு பாராளுமன்றத்தில் தனிச் சட்டம் இயற்றப்பட்டு 1995ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. மத்திய உயர்கல்வி துறை மற்றும் மனிதவள துறை அமைச்சகத்தின் அங்கீகாரம் பெற்று புதுடில்லியைத் தலைமையகமாக கொண்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இது இயங்கி வருகிறது.

என்.சி.டி.இ., அமைப்பதற்கு முன் ஆசிரிய கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காகத் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம் உருவாக்கப்பட்டது, ஆனால் இந்த அமைப்பிற்கான அதிகாரங்களை வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக 1986ம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டு முறையான அதிகாரங்கள் என்.சி.டி.இ., அமைப்பிற்கு வழங்கப்பட்டது.

செயல்பாடுகள்:

ஆசிரிய கல்வியில் பல்வேறு அம்சங்களுடன் தொடர்புடைய ஆராய்ச்சிகள் மற்றும் மதிப்பாய்வுகளை அங்கீகரிப்பது மற்றும் முடிவுகளை வெளியிடுவது.
துறை சார்ந்த திட்டங்களைத் தயாரிப்பதில் மத்திய மற்றும் மாநில அரசு, பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களுக்குத் தேவையான பரிந்துரைகளை வழங்குவது.

நாட்டின் ஆசிரியர் கல்வி மற்றும் அதன் வளர்ச்சிகளைக் கண்காணித்தல்.
அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு தேவையான குறைந்தபட்ச தகுதிகளை நிர்ணயிப்பது.
ஆசிரிய படிப்பிற்கான சேர்க்கை வழிமுறைகள், பாடத்திட்டங்கள், கால அளவு, பாடநூல், பயிற்சி முறை ஆகியவற்றை முடிவு செய்வது.

ஆசிரியர் படிப்புகள் மற்றும் பயிற்சி திட்டங்களுக்கான தகுதி தேர்வுகளை தரநிலைப்படுத்துவது.

அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயிப்பதோடு அவற்றைக் கண்காணிப்பது.

ஆசிரியர் கல்வியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் புதுமையான ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பது.

கவுன்சிலால் வரையறுக்கப்பட்ட விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தர முறைகளை அவ்வப்போது ஆய்வு செய்வது.

தகுந்த செயல்திறன் மதிப்பீட்டு முறை மூலம் கல்வி நிறுவனங்களுக்கும் பட்டதாரிகளுக்குமான அங்கீகாரத்தை வழங்குவது.

ஆசிரியர் கல்வி மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்களை வகுத்து புதிய நிறுவனங்களை நிறுவுதல்.

ஆசிரியர் கல்வி வணிகமயமாக மாற்றப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்.

இக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள்:
டிப்ளமா இன் பிரீ-ஸ்கூள் எஜூகேஷன் - டி.பி.எஸ்.இ.,
டிப்ளமா இன் எலிமண்டரி எஜூகேஷன் - டி.இஎல்.எட்.,
பாச்சுளர் ஆப் எலிமண்டரி எஜூகேஷன் - பி.இஎல்.எட்.,
பாச்சுளர் ஆப் எஜூகேஷன் - பி.எட்.,
மாஸ்டர் ஆப் எஜூகேஷன் - எம்.எட்.,
டிப்ளமா இன் பிசிக்கல் எஜூகேஷன் - டி.பி.எட்.,
பாச்சுளர் ஆப் பிசிக்கல் எஜூகேஷன் - பி.பி.எட்.,
மாஸ்டர் ஆப் பிசிக்கல் எஜூகேஷன் - எம்.பி.எட்.,
டிப்ளமா இன் எலிமண்டரி எஜூகேஷன் - டி.இஎல்.எட்.,
டிப்ளமா இன் ஆர்ட்ஸ் எஜூகேஷன் (விசுவல் ஆர்ட்ஸ்)
டிப்ளமா இன் ஆர்ட்ஸ் எஜூகேஷன் (பர்பார்மிங் ஆர்ட்ஸ்)
இண்டக்ரேட்டட் பி.ஏ.பி.எட்., / பி.எஸ்சி.பி.எட்.,
இண்டக்ரேட்டட் பி.எட்., எம்.எட்
பகுதி நேர பி.எட்., படிப்பு

விபரங்களுக்கு: http://ncte-india.org/ncte_new/

No comments:

Post a Comment