தொழிலாளர் விரோத போக்கு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக மத்திய வங்கி ஊழியர் சங்கங்களான ஐ.என்.டி.யூ.சி, ஏ.ஐ.டி.யூ.சி, எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் வருகிற 8, 9 ஆகிய 2 நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் வெங்கடாசலம், 'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு இந்தியா ஆகிய 2 வங்கி ஊழியர்கள் சங்கமும் ஆதரவு அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment