திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Tuesday, January 15, 2019

ராணுவ கல்லுாரியில் சேர விண்ணப்பங்கள் வினியோகம்

புதுச்சேரி: தேசிய ராணுவ கல்லூரியில், எட்டாம் வகுப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் அமைந்துள்ள இந்திய தேசிய ராணுவ கல்லுாரியில், எட்டாம் வகுப்பில் சேருவதற்கு ஆண்கள் மட்டும், வரும் மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 2020ம் ஆண்டு, ஜனவரி1ம் தேதி அன்று பதினொன்றரை வயது குறையாமலும், 13 வயது பூர்த்தியாகாமலும் இருத்தல் வேண்டும்.

வரும் 01.06.2019 அன்று 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஆங்கிலத் தேர்வும், பிற்பகல் 2.00 மணி முதல் 3.30 மணி வரை கணிதத் தேர்வும் நடைபெறும். 02.06.2019 காலை 10.00 மணி முதல், 11.00 மணிவரை பொது அறிவுத்தேர்வு நடைபெறும் கணிதம் மற்றும் பொது அறிவுத்தேர்வுகளை ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் எழுதலாம். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, நேர்முகத் தேர்வு 04.10.2019 அன்று நடைபெறும்.

நேர்முகத் தேர்வுக்குப்பின் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், ராணுவ மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். புதுச்சேரி மாணவர்களுக்கு, புதுச்சேரியில், மேற்கூறிய தேதிகளில் எழுத்து தேர்வு நடக்கும். தேர்வு மையம் குறித்த தகவல், இணை இயக்குனர் அலுவலக தேர்வுப்பிரிவில், அஞ்சல் மூலம் அறிவிக்கப்படும்.

விண்ணப்பங்கள்விண்ணப்பப் படிவத்தை பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலம் பெற்றிட, அஞ்சல் குறியீட்டு எண் உள்ள விலாசம் மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றுடன் கூடிய கோரிக்கை மனுவுடன், &'THE COMMANDANT, RASHTRIYA INDIAN MILITARY COLLEGE, DEHRADUN, DRAWEE BRANCH, STATE BANK OF INDIA, TEL HAAVAN, DEHRADUN, (BANK CODE 01576), UTTARKHAND கிளையில் மாற்றத்தக்க வகையில் கேட்பு வரைவோலை அனுப்ப வேண்டும்.

பொதுப்பிரிவினர் ரூ.600க்கும் (விரைவு அஞ்சல்), அட்டவணை இனத்தவர் மற்றும் பழங்குடியினர் அதற்குண்டான சாதி சான்றிதழுடன் ரூ.555 (விரைவு அஞ்சல்) தொகைக்கு கேட்பு வரைவோலையாகவோ (Account payee Bank Demanfd Draft) அல்லது www.rimc.gov.in என்ற வலைதளத்திலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்யப்பட்ட செலுத்துச்சீட்டு (Challan) மூலமாகவோ கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.THE COMMANDANT, RASHTRIYA INDIAN MILITARY COLLEGE, DEHRADUN CANTONMENT, UTTARANCHL 248 003.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், இணை இயக்குனர், இரண்டாம் தளம், அ-அடுக்கம், காமராஜர் நுாற்றாண்டு கல்வி வளாகம், அண்ணா நகர், புதுச்சேரி- 605 005 என்ற முகவரிக்கு, மார்ச் 31ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

No comments:

Post a Comment