என்.ஐ.எஸ்.இ.ஆர்., அமைப்பால் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்புகளுக்காக தேசிய அளவில் நடத்தப்படும் ’நெஸ்ட்’ தேர்விற்கான விண்ணப்பப் பதிவு துவங்கியுள்ளது.
படிப்புகள்: எம்.எஸ்சி., (இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம்)
தகுதிகள்: 12ம் வகுப்பில் அறிவியல் பிரிவை தேர்வு செய்து படித்து 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிப்பெண் சதவீதத்தில் 5 சதவீதம் வரை விலக்கு அளிக்கப்படும். தற்போது 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: நெஸ்ட் நுழைவுத்தேர்வின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தேர்வு முறை: கணினி வழி தேர்வாக மட்டுமே நெஸ்ட் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் 5 பகுதிகளாக கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். முதல் பகுதியில் பொதுவான கேள்விகள் கேட்கப்படும், இந்த பகுதியை அனைவரும் எழுத வேண்டும். இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களுக்கென அடுத்தடுத்த தனி பிரிவுகள் இருக்கும். மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப 3 பகுதிகளைத் தேர்வு செய்து பதிலளிக்க வேண்டும். அனைத்துக் கேள்விகளும் அப்ஜெக்டிவ் டைப் கேள்விகளாகவே இருக்கும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 11
தேர்வு நாள்: ஜூன் 1 (காலை 9:00 மணி முதல் 12:30 வரை மற்றும் மதியம் 2:30 மணி முதல் 6:00 மணி வரை)
தேர்வு முடிவுகள்: ஜூன் 17
விபரங்களுக்கு: www.nestexam.in
No comments:
Post a Comment