திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Saturday, January 5, 2019

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் எப்போது?: அமைச்சர் செங்கோட்டையன் பதில்

           தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் எப்போது என்ற கேள்விக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளித்தார். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, பள்ளிக்கல்வித் துறை தொடர்பாக, திமுக உறுப்பினர் பி.என்.பி.இன்பசேகரன் மற்றும் பிற உறுப்பினர்கள் எழுப்பிய பிரதான வினா, துணை வினாக்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில்:-

       பள்ளிகளை தரம் உயர்த்துவது, அவற்றுக்கு கட்டடங்கள் கட்டுவது போன்ற பணிகள் நபார்டு நிதியுதவித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆசிரியர் காலிப் பணியிடங்கள் அதிகளவு இருப்பதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக, ஆசிரியர்கள் தொடர்ந்து நியமிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனாலும், மகப்பேறு விடுப்பு காரணமாக ஆசிரியைகள் 9 மாதங்கள் செல்வதால் பணியிடங்கள் காலியாகி விடுகின்றன. 

         தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தடையாணை உள்ளது. இந்தத் தடையாணை விலக்கப்பட்ட பிறகு காலிப் பணியிடங்கள் இல்லாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

No comments:

Post a Comment