தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 12 ஆம் வகுப்பில் முக்கிய பாடங்களுக்கு, ஒரேதொகுப்பாக பாடப்புத்தகங்களை தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகதகவல் வெளியாகி உள்ளது.
11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தற்போது அனைத்து பாடங்களுக்கும் 2 தொகுதிகளாக பாடப்புத்தகங்கள்வழங்கப்படுகின்றன. முதல் தொகுதி மூலம் காலாண்டுத் தேர்வும், இரண்டாவது தொகுதி மூலம் அரையாண்டுத் தேர்வும் நடத்தப்படும் நிலையில், இந்த இரு தொகுதிகளில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டு, முழு ஆண்டுத்தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில், கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்று, வேதியியல், இயற்பியல், உயிரியல்,தாவரவியல், வணிகவியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட முக்கியப் பாடங்களுக்கு ஒரே தொகுப்பாக பாடப் புத்தகங்களை வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளாதாக கூறப்படுகிறது.இது வரும் 2019 – 2020 கல்வியாண்டில் நடைமுறைக்குவரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment