திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Sunday, January 6, 2019

சென்னை புத்தக கண்காட்சி தொடக்க விழா


தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின்(பபாசி) 42-வது சென்னை புத்தக கண்காட்சி தொடக்க விழா சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவில் பபாசி தலைவர் எஸ்.வயிரவன் வரவேற்புரையாற்றினார். தொழில் அதிபர் நல்லி குப்புசாமி தலைமை தாங்கினார். புத்தக கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.



அதனைத் தொடர்ந்து சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பக செம்மல் க.கண்பதி விருதை முல்லை பழனியப்பனுக்கும், சிறந்த பெண் எழுத்தாளருக்கான அம்சவேணி பெரியண்ணன் விருது ஜி.திலகவதிக்கும், சிறந்த விற்பனையாளருக்கான பதிப்பு செம்மல் ச.மெய்யப்பன் விருது ஹிக்கின்பாதம்சுக்கும், சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது கோவி.பழநிக்கும்,

பபாசி-சிறந்த நூலகர் விருது ச.இளங்கோ சந்திரகுமாருக்கும், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா விருது சபீதா ஜோசப்புக்கும், சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது க.ப.அறவாணனுக்கும், சிறந்த ஆங்கில எழுத்தாளருக்கான ஆர்.கே.நாராயண் விருது காயத்ரி பிரபுவுக்கும் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

மறைந்த அறவாணனுக்கான விருதை அவரது மகன் அறிவாளன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- ஆண்டுக்கு ஆண்டு புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதால், இப்படிப்பட்ட புத்தகக் கண்காட்சிகளின் தேவையும் அதிகரிக்கத்தான் செய்யும். இப்படிப்பட்ட புத்தக கண்காட்சிகள் மூலம் தமிழ்நாடு அறிவு சார் மாநிலம் என்பதை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.

நமது மூதாதையர் அறிவையும், அனுபவத்தையும் ஆவணப்படுத்தி நமக்கு சொத்தாக வழங்கி செல்வது நூல்கள்தான்.

பிள்ளைகள் பெற்றோர் செய்வதைப் பார்த்து மிகுதியாகக் கற்றுக் கொள்கிறார்கள் எனவே முதலில் பெற்றோர்கள் நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் நூல்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கக் கூடும். நூல்களை படித்து மேதையானவர்களைவிட, நல்ல மனிதர்களாக மாறியவர்கள் அதிகம். எனவே மாற்றத்துக்கும், ஏற்றத்துக்கும் நூல் வாசிப்பது மிக மிக அவசியம் என்பதை உணருங்கள்.

அண்ணாவின் வழியில் வந்த எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆகியோரால் வளர்க்கப்பட்ட நாங்கள் எப்போதும் படைப்பாளர்கள் பக்கமும், படிப்பாளிகளின் பக்கமும்தான் இருப்போம் என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


புத்தக கண்காட்சி தொடக்க விழாவில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், பபாசி செயலாளர் அரு.வெங்கடாசலம், துணை தலைவர் பி.மயிலவேலன், பொருளாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


சென்னை புத்தக கண்காட்சியில் 820 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 12 லட்சம் தலைப்புகளில் 1.5 கோடி புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது.

இதில் 60 மற்றும் 61-வது ஸ்டால்களில் ‘தினத்தந்தி’ அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு ‘வரலாற்று சுவடுகள்’, ‘ஆயிரம் ஆண்டு அதிசயம்’, ‘புதையல் ரகசியம்’, ‘மகிழ்ச்சியான வாழ்வுக்கு மகத்தான மந்திரங்கள்’, ‘ஆளுமைத்திறன்’, ‘சிறகை விரிக்கும் மங்கள்யான்’, ‘பரபரப்பான வழக்குகள்’, ‘உலகை உலுக்கிய வாசகங்கள்’, ‘நம்ப முடியாத உண்மைகள்’, ‘கலாம் ஒரு சரித்திரம்’ உள்பட 53 புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

இதுதவிர ‘சிவந்தி ஆதித்தனார் சாதனை சரித்திரம்’, ‘தமிழ் சினிமா வரலாறு’, ‘ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு’ உள்ளிட்ட 3 புத்தகங்களுக்கும் சிறப்பு தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த அரங்கில் வாசகர்கள் ஆர்வமாக புத்தகங்கள் படித்தனர்.

No comments:

Post a Comment