நாட்டின் தரமான பல்வேறு கல்வி நிறுவனங்களின் மூலம் தகுதியான மாணவர்களுக்கு, தரமான மேலாண்மை படிப்புகளை வழங்குவதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டதே ஆல் இந்தியன் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் (ஏ.ஐ.எம்.ஏ.,)
அறிமுகம்:
இந்திய அரசின் முதல் தொழில்மயமாக்கல் கொள்கையின் ஒரு அங்கமாக 1957ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பே இந்த அமைப்பு, நாடு முழுவதிலும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்களை 67 அங்கீகரிக்கப்பட்ட மேலாண்மை சங்கங்களைக் கொண்டுள்ளது. லாப நோக்கமின்றி தொழில் வளர்ச்சி, கல்வியியல் மேம்பாடு மற்றும் மாணவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவது எனக் கடந்த 60 ஆண்டுகளாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் தன்னிகரற்ற பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது. முதுநிலை மேலாண்மை பட்டப்படிப்பிற்கான ‘மேட்’ எனப்படும் தேசிய தகுதி தேர்வினையும் இது நடத்துகிறது.
செயற்பாடுகள்:
* தேர்வுகள், தொலைநிலை கல்விகள், திறமை மேம்பாடு மற்றும் பயிற்சிகள், ஆராய்ச்சிகள், மாநாடுகள், வெளியீடுகள், நிர்வாகக் கல்வி மற்றும் நிர்வாக மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகிய பல்வேறு சேவைகளின் மூலம் நாட்டின் மேலாண்மை கல்வி மேம்பாட்டிற்கான பங்களிப்பை வழங்குவது.
* ஆல் இந்தியன் கவுன்சில் பார் டெக்னிக்கல் எஜூகேஷன் (ஏ.ஐ.சி.டி.இ.,) உட்பட நாட்டின் பல்வேறு கொள்கை வடிவமைப்பு குழுக்களின் பிரதிநிதியாகவும் ஏ.ஐ.எம்.ஏ., விளங்கி வருகிறது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் ‘நேஷனல் போர்ட் ஆப் அக்ரிடேஷன்’ (என்.பி.ஏ.,) சங்கத்தின் தலைமை நிர்வாக அமைப்பாகவும் இது செயல்பட்டு வருகிறது.
* ஏ.ஐ.எம்.ஏ., இந்திய மேலாளர்களுக்கு சிறந்த நிர்வாக நடைமுறைகள் மற்றும் தொழில் நுட்ப பயிற்சிகளை அயல்நாட்டுத் தொழில் முறை நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் கொண்டு வருகிறது. ‘ஆசிய அசோசியேஷன் ஆப் மேனேஜ்மெண்ட் ஆர்கனைசேஷன்ஸ்’ (ஏ.ஏ.எம்.ஓ., ) அமைப்பின் ஒரு முக்கிய உறுப்பினராகவும் இது இருப்பதால் பல வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் நெருக்கமாகப் பணியாற்று வாய்ப்பும் உள்ளது.
* ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட்’ (ஐ.ஐ.எம்.,) கல்வி நிறுவனங்களைத் தவிர நாட்டின் 600க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ‘மேனேஜ்மெண்ட் ஆப்டிடியூட் டெஸ்ட்’ எனப்படும் மேட் திறனாய்வு தகுதி தேர்வினை ஆண்டிற்கு 4 முறை நடத்தி வருகிறது.
* மேட் தேர்வு மட்டுமின்றி ‘ரிசர்ச் மேனேஜ்மெண்ட் ஆப்டிடியூட் டெஸ்ட்’ (ஆர்.மேட்), ‘அண்டர் கிராட்ஜூவேட் ஆப்டிடியூட் டெஸ்ட்’ (யு.ஜி.ஏ.டி.,), ‘அக்ரிடேடட் மேனேஜ்மெண்ட் டீச்சர்’ (எம்.எம்.டி.,) மற்றும் சில தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளையும் ஏ.ஐ.எம்.ஏ., நடத்துகிறது.
மேட் தேர்வு:
பல்வேறு துறை சார்ந்த முதுநிலை மேலாண்மை படிப்பு அதாவது எம்.பி.ஏ., படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் முக்கிய தகுதிகளில் ஒன்றாக மேட் தேர்வு பார்க்கப்படுகிறது. கணினி வழி தேர்வு மற்றும் காகித வழி தேர்வு என இரு வகைகளில் நாட்டின் 50க்கும் மேற்பட்ட மையங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
விபரங்களுக்கு: www.aima.in
No comments:
Post a Comment