சென்னை, -இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு, அரியர் தேர்வு முறையில், சலுகை வழங்கும் முடிவுக்கு, அண்ணா பல்கலையின் கல்வி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜி., கல்லுாரிகளில், 2017ல் புதிய தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு, ஒரு ஆண்டு இடைவெளிக்கு பின், மீண்டும் தேர்வு எழுத முடியும் என, அறிவிக்கப்பட்டது.இதற்கு, ஒரு தரப்பு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய தேர்வு முறையால், படிப்பை முடிக்க, ஓராண்டு வரை கூடுதல் காலம் தேவைப்படுவதாக, மாணவர்கள் கூறினர். இதுகுறித்து, சில வாரங்களுக்கு முன், அண்ணா பல்கலை முன் ஆர்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து, &'கல்வியாளர்கள் குழு அமைத்து முடிவு செய்யப்படும்&' என, பல்கலையின் பொறுப்பு பதிவாளர், குமார் தெரிவித்திருந்தார். &'மாணவர்களின் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்&' என, பல்கலை துணைவேந்தர், சுரப்பா அறிவித்தார்.இதையடுத்து, தற்போது படிக்கும் மாணவர்களுக்கு மட்டும், சலுகை வழங்கப்பட உள்ளது.
அதாவது, அடுத்து வரும் நான்கு பருவ தேர்வுகளுக்கு, ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால், அடுத்தடுத்த பருவ தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம்.இதற்கு, அண்ணா பல்கலையில், கல்வி வாரியம் மற்றும் கல்வி கவுன்சில் ஆகியவற்றில், ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அடுத்து, சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றதும் அமலுக்கு வரும்.
No comments:
Post a Comment